நமக்கு வரக்கூடிய சில கனவுகள் ஆச்சரியமளிக்கக்கூடியவை. அவை நம் ஆன்மாவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் ஒரு செய்தியை, நிகழப்போகும் ஒரு சம்பவத்தை உணர்த்திவிட்டுச் செல்கின்றன. சில சமயங்களில் நாம் தடுமாறிக்கொண்டிருக்கும் திணறிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு அற்புதமான தீர்வும் கனவின் மூலமாக கிடைத்துவிடுகிறது. இறைநம்பிக்கையற்றவர்களை கடுமையான குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் ஆழ்த்தும்
பல விசயங்களுக்குத் தடையாக இருப்பது நினைவலைகள்தாம். ஒரு வீடு மாற வேண்டும் என்றாலும் ஒரு ஊரைவிட்டுச் செல்ல வேண்டும் என்றாலும் ஒருவரைவிட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்றாலும் முதலில் தடையாக வருவது நினைவலைகளே. அவை மனித மனதில் தாக்கம் செலுத்தும் வலுவானவை. இந்த நினைவலைகளை மீறி வெளியேறிச் செல்பவர்கள்
மனிதனின் விசித்திரமான ஒரு பண்பு, அவன் சக மனிதனுக்கு உதவவும் செய்வான்; அவன்மீது பொறாமை கொண்டு அவனுக்குத் தீங்களிக்கவும் முற்படுவான். அதிலும் அவன் தன்னை அண்மித்து இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீதுதான் அதிகம் பொறாமை கொள்வான். உறவும் நெருக்கமும் நட்பு பாராட்டக் காரணமாக இருப்பதுபோல பொறாமை கொள்ளவும்
மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் ரயிலில் அடிபட்டு தற்கொலை செய்து கொள்கிறாள் என்ற பத்திரிகைச் செய்தி டால்ஸ்டாயின் மனதை உலுக்கிவிடுகிறது. இந்தச் சம்பவம்தான் அன்னா கரீனினா என்ற உலகப் புகழ்பெற்ற நாவலுக்கான விதையாக அமைந்தது. அன்றாடம் பார்க்கின்ற சாதாரண ஒரு பத்திரிகைச் செய்தி அவரது அகத்தை உலுக்கியதனால்
போலியான, சடங்குத்தனமான மரியாதை மரியாதையே அல்ல. உண்மையில் அது ஒரு அவமதிப்பு, நடிப்பு, நயவஞ்சகத்தனம். இருந்தும் அதனை விரும்பக்கூடியவர்கள் அதிக அளவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய போலியான ஒரு மரியாதையைப் பெற தங்களின் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். இன்னும் பலர் அதனை அடைவதையே வாழ்வின் இலக்காகக் கொண்டு செயல்பட்டுக்
துன்பத்தில்தான் மனிதன் தன் இயலாமையை உணர்கிறான். அது அவன் மீது அதிகாரம் செலுத்தும் பேராற்றல் கொண்ட இறைவனை அவனுக்கு நினைவூட்டுகிறது. அவனைத் தவிர தனக்கு வேறு எங்கும் அடைக்கலம் இல்லை என்பதையும் தன் துன்பத்தைப் போக்க அவனால் மட்டுமே முடியும் என்பதையும் மனிதன் உளமாற நம்புகிறான். தன் துன்பங்களைப்