திருக்குர்ஆன் தெளிவுரை

அல்ஃபாத்திஹா (ஆரம்பம்)

மக்காவில் அருளப்பட்ட ஏழு வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்திற்கு ‘அல்ஃபாத்திஹா’ என்று பெயர். அல்ஃபாத்திஹா என்றால் ஆரம்பம் என்று பொருள். திருக்குர்ஆனின் ஆரம்பமாக இந்த அத்தியாயம் இடம்பெற்றிருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். திருக்குர்ஆனுக்கு ஒரு முன்னுரைபோல இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது.     இரத்தினச் சுருக்கமான ஏழு வசனங்கள்

குர்ஆன் யாருக்கு வழிகாட்டும்?

அல்பகரா அல்பகரா என்றால் பசுமாடு என்று பொருள். இந்த அத்தியாயத்தில் இஸ்ரவேல் சமூகத்தில் நிகழ்ந்த பசுமாட்டைக் குறித்த ஒரு சம்பவம் இடம்பெறுகிறது.  அந்தச் சம்பவம் அத்தியாயத்தின் மையக்கருத்துகளைத் தெளிவுபடுத்துவதால் அதற்கு இந்தப் பெயர் இடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது மதீனாவில் அருளப்பட்ட மிக நீளமான அத்தியாயமாகும். ஹிஜ்ரத்திற்கு

சீல் வைக்கப்படும் உள்ளம்

நம்பிக்கையாளர்களின் பண்புகள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு எதிர் திசையில் இருக்கும் நிராகரிப்பாளர்கள் குறித்து தெளிவுபடுத்தப்படுகிறது. அவர்கள் ஏன் நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்கள்? அவர்களின் விசயத்தில் செயல்படும் இறைநியதி என்ன? அடுத்த இரு வசனங்கள் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கின்றன.   إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ

குழப்பம் விளைவிப்பவர்கள்

நிராகரிப்பாளர்களில் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை மூர்க்கமான நிராகரிப்பாளர்களாகக் காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இரண்டுக்கும் மத்தியிலான ஒரு நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருப்பார்கள். அதுதான் புத்திசாலித்தனம் என்றும் அதுதான் இணக்கத்திற்கான வழி என்றும் அவர்கள் கூறுவார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் காணப்படுவார்கள்.

முறியடிக்க முடியாத சவால்

இஸ்லாத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்பிக்கையாளர்கள், அந்த அழைப்பை ஏற்க மறுத்த மூர்க்கமான நிராகரிப்பாளர்கள், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் வெளிப்படையாக நிராகரிக்கவும் முடியாமல் தடுமாற்றமான நிலையில் இருந்த நிராகரிப்பாளர்கள் என மூன்று தரப்பினரையும் அடையாளப்படுத்திய பிறகு அவர்களும் ஏனைய இணைவைப்பாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதன் பக்கம் அழைக்கப்படுகிறார்கள். அடுத்து வரக்கூடிய

எப்படி உங்களால் நிராகரிக்க முடிகிறது?

இந்த இடத்தில் யூதர்கள் முன்வைத்த ஒரு ஆட்சேபனைக்கு பதிலளிக்கப்படுகிறது. கொசு, ஈ, சிலந்திப்பூச்சி போன்ற அற்பமான உயிரினங்களைக் கொண்டா அல்லாஹ் உதாரணங்கள் கூறுகிறான் என்று அவர்கள் ஆட்சேபனை எழுப்பினார்கள். அவர்களின் நோக்கம், திருக்குர்ஆனுடைய நம்பகத்தன்மையில் கேள்வி எழுப்புவதுதான்.      إِنَّ اللهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا

யூதர்களின் வாழ்க்கையிலிருந்து இரண்டு சம்பவங்கள்

திருமணம், தலாக் போன்ற குடும்பவியல் விவகாரங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அத்தியாயம் மீண்டும் சமூகவியல் விவகாரங்களை நோக்கித் திரும்புகிறது. இந்த விவகாரங்கள் பேசப்படுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல், அவன் பாதையில் செலவு செய்தல் தொடர்பாகத்தான் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. இடையில் அவசியமான ஒரு விசயத்தை தெளிவுபடுத்த நேரிட்டால் அது தொடர்பான

இயக்கத்தைக் கட்டமைத்தல் – 3

இஸ்லாமிய அழைப்பியலின் பாதை எளிதானது அல்ல. மனிதர்கள் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பாதையில் சென்றுவிட முடியாது. மனக்கட்டுப்பாடு அற்றவர்கள் அந்தப் பாதையில் நீடிக்க முடியாது. உண்மையில் அது அல்லாஹ் அளிக்கும் பெரும் பாக்கியம். அந்த பாக்கியத்தைப் பெறுவதற்கு முன்னர் அவர்கள் சோதனைகளைக் கடக்க வேண்டும். சோதனைகளை வெற்றிகரமாக கடந்தவர்கள்

இயக்கத்தைக் கட்டமைத்தல் – 2

இஸ்லாமிய அழைப்பியல் என்பது ஒரு மறைமுக அதிகாரமும்கூட. மக்கள் அழைப்பாளர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை நம்புகிறார்கள். அவர்களிடம் இஸ்லாம் என்ற அளவுகோல் இருக்கிறது. அதன்படி அவர்கள் நடப்பார்கள் என்று அவர்கள் கருதுவதால் அவர்களை நம்புகிறார்கள். சிலர் அவர்களின் பணிக்கு நிதியுதவி செய்கிறார்கள். சிலர் அவர்களுக்குச் சேவகம் செய்கிறார்கள். சிலர்

நன்றியும் நன்றிகெட்டத்தனமும்

உங்களிடம் நன்றி செலுத்தும் பண்பு இருக்கிறது எனில் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.  உங்களிடம் இருப்பவை பாதுகாக்கப்படும். எதிர்பாரா புறத்திலிருந்து நீங்கள் உதவி செய்யப்படுவீர்கள். நான் கூறுவது படைத்த இறைவன் உங்களுக்கு அளித்த அருட்கொடையை உணர்ந்து நன்றி செலுத்தும் பண்பு. அதுதான் முதன்மையானது. மற்றவை அதற்குப் பின்னால்

தொழுகையின் முக்கியத்துவம்

தலாக் சொல்லப்பட்ட பெண்கள் தொடர்பாக பேசப்பட்டு வரும் இந்தச் சூழலில் அடுத்து வரும் சில வசனங்கள் கணவனை இழந்த விதவைப் பெண்களின் காத்திருப்பு காலம் குறித்தும் அவர்களின் மறுமணம் குறித்தும் அது தொடர்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய இங்கிதங்கள் குறித்தும் பேசுகின்றன. அவை குறித்து பேசப்படுவதற்கு உகந்த சூழல் இதுதான்.

இயக்கத்தை கட்டமைத்தல் – 1

ஒருவர் மற்றவருடன் எப்படி இணைகிறார்கள்? ஒருவர் மற்றவரைவிட்டு எப்படி விலகிச் செல்கிறார்கள்? அன்பு ஈர்க்கும். வெறுப்பு விலக்கி வைக்கும். தேவை ஈர்க்கும். தேவையின்மை விலக்கி வைக்கும். ஒத்திசைவு ஈர்க்கும். ஒத்திசைவின்மை விலக்கி வைக்கும். நிர்ப்பந்தமும் சூழலும்கூட இணைப்பையும் விலகலையும் ஏற்படுத்தும். ஆனால் அவை வலுவான, நீடிக்கக்கூடிய காரணிகள் அல்ல.

மிக இலகுவாக

எந்தவொரு பெரும் செயலும் மிக இலகுவாக நிகழ்ந்து விடுகிறது. ஆனால் அது நிகழ்ந்த பிறகுதான் அது இலகுவாக நிகழ்ந்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அது நிகழ்வதற்கு முன்னர்வரை அது கடினமான அல்லது நிகழ்வதற்கு சாத்தியமற்ற ஒன்றாகத்தான் நமக்குத் தெரிந்து கொண்டிருக்கும். ஒவ்வொரும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய

தலாக்கும் அநியாயமும்

அடுத்து வரும் வசனங்கள் தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மீது இழைக்கப்படும் இரண்டு வகையான அநீதியைக் குறித்துப் பேசுகின்றன. உண்மையில் அது ஆண்கள் தங்களுக்கு எதிராகவே செய்து கொள்ளும் அநீதி. அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் அதற்கான விளைவை அனுபவிப்பார்கள்.   وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ

இலக்கை நோக்கிய பாதை

அதிகப்படியான செய்திகள் நம்மை பெரும் குழப்பத்திலும் கடும் மனச்சோர்விலும் ஆழ்த்தும். எந்த அளவு நாம் நம்முடைய வாழ்க்கையை சிறியதாக அமைத்துக் கொள்கிறோமோ அந்த அளவு நாம் நிம்மதியாக இருக்கலாம். தொடர்ந்து உலகச் செய்திகள் முதற்கொண்டு உள்ளூர் செய்திகள்வரை அறிந்து கொண்டு அலசுபவர்கள் அச்சுறுத்தும் எதிர்மறை மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். ஏனெனில்

தலாக் தொடர்பான சட்டங்கள்

மனைவியுடன் உறவுகொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து விலகியிருப்பது தலாக்கின் ஒரு வடிவமாகவே கருதப்படுகிறது. இந்தச் சூழலில் அடுத்தடுத்த வசனங்கள் தலாக் தொடர்பான சட்டங்களைப் பேசுகின்றன.  وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ