அதிகப்படியான சுதந்திரம், பெரும் செல்வம், அதிகாரம் ஆகியவை நேர்மறையான விளைவுகளைவிட எதிர்மறையான விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துகின்றன. கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில் நாம் நல்ல மனிதர்களாக வாழ்வது இலகுவானது. ஆனால் கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான சூழல் நம்மை தவறான திசைகளின் பக்கம் தள்ளுகிறது. மனிதர்கள் உள்ளுக்குள் கட்டுப்பாடுகளை விரும்புவது இதனால்தான்.
‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்ந்தது? மற்றவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?’ ‘நான் இப்படி செய்திருக்கக்கூடாது’ ‘என்னைவிட திறமைக்குறைவானவன் எல்லாம் முன்னேறிக் கொண்டே செல்கிறானே!’ ‘நானெல்லாம் எப்படி இருக்க வேண்டிய ஆள்’ இதுபோன்ற புலம்பல் வார்த்தைகளால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? மீண்டும் மீண்டும் அந்த கசப்புணர்வில் மூழ்கிக் கொண்டே
நீங்கள் எழுப்பிய இந்தக் கேள்வி மிக முக்கியமானது. பல முறை எனக்கு நானே இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறேன். அணுக்கமான நண்பர்களிடமும் இது குறித்து விவாதித்திருக்கிறேன். நாம் அவர்களோடு கரிசனத்தோடு நடந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக ஆக்கிவிடக்கூடாது. தாங்கள் செய்யும் எல்லா தவறுகளையும் தங்களின் மனச்சிக்கல்
ஷைத்தான் மனித மனதில் ஊசலாட்டங்களை, சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறான். மனம் பலமாக இருக்கும்போது அவற்றை எளிதாக அடையாளம் கண்டு புறந்தள்ளி விடுகிறது. மனம் பலவீனமாக இருக்கும் சமயத்தில் அது அவற்றை எளிதாக புறந்தள்ள முடிவதில்லை. அது அவற்றைப் பொருட்படுத்துகிறது. நன்றாக தூங்கி எழுந்த பிறகு காலையில் மனம் பலத்தோடும்
ஒவ்வொரு உறவும் நட்பும் அன்பின் அடிப்படையில் அமைய வேண்டியது அல்ல. சில உறவுகள் தேவையின் அடிப்படையிலானது. அங்கு பயன் பெற்று பயனளித்தல் அல்லது வெறுமனே பயனடைதல் இருக்கும். சிலர் வெறுமனே பயனடைதலை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் அவர்களையும் மீறி ஏதோ ஒரு வகையில் பயனளித்தல் நிகழ்வதால் அந்த உறவு நீடிக்கிறது.
மனச்சிக்கல் கொண்டவர்களுடன் சேர்ந்திருப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவர்கள் தங்களின் பலவீனங்களை கச்சிதமாக மற்றவர்களின் பலவீனங்களாக முன்வைப்பார்கள். அவர்களால்தான் தாங்கள் இப்படி ஆகிவிட்டோம் என்பார்கள். மற்றவர்களைக் குறித்த அவர்களின் புகார்கள் நீண்டு கொண்டே செல்லும். உலகம் கெட்டு விட்டது, சமூகம் கெட்டு விட்டது, தாங்கள் மட்டுமே நேர்வழியில இருக்கிறோம்