முகப்பு

கடக்க முடியாத கணமா அது?

“அந்த கணத்தை என்னால் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை. வெறுமையும் அழுத்தமும் சலிப்பும் கடந்த உணர்வு அது. அந்த கணத்தில் செத்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. நான் என்ன செய்வது?“ ஏதோ ஒரு வகையில் மன அழுத்தமோ மனச் சிக்கலோ கொண்டவர்களுக்கு அவ்வப்போது ஏற்படக்கூடிய நிலைதான் இது.

ஆன்மாக்களின் உலகம்

“நான் மனிதர்களைப் பார்த்தவுடன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கணித்து விடுவேன்” உங்களின் இந்தக் கணிப்பை பொதுவான ஒன்றாக முன்வைக்க முடியாது. உங்களின் கணிப்பு உங்களுடன் ஒத்திசைந்து செல்பவர் யார், முரண்படுபவர் யார் என்பதை அறிந்துகொள்வதற்கு வேண்டுமானால் உங்களுக்குப் பயன்படலாம். பொதுவாக ஒருவரைப் பார்த்தவுடனேயே நமக்கு ஏற்படும் உணர்வு நமக்கும்

வேதத்தின் ஞானங்களை மறைப்பது

அடுத்து வரும் வசனம் ஸஃபா, மர்வா மலைக் குன்றுகளுக்கு மத்தியில் மெதுவாக ஓடுவதைக்(சயீ செய்வதை) குறித்துப் பேசுகிறது. வெளிப்படையாகப் பார்க்கும்போது இந்த வசனம் மையக் கருத்தை விட்டு விலகியதாக, ஓர் இடையீடாகத் தோன்றும். கொஞ்சம் கவனித்துப் பார்க்கும்போது மையக்கருத்துடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும். இது

மறைமுக அழுத்தம்

நாம் விரும்பும் விசயத்தை சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக வெளிப்படுத்துவது ஒரு வகை. இது இலகுவானது, சிக்கல் அற்றது, புரிந்து கொள்ளத்தக்கது. இன்னொரு வகை, நாம் விரும்பும் விசயத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டு அதை அவர்கள் நமக்காகச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது. மனிதர்கள் சுயநலம் கொண்டவர்கள் என்பதால் பெரும்பாலும் அவர்கள்

இழப்புகளை, சிரமங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

முஸ்லிம் சமூகத்திற்கு மனித சமூகத்தை வழிநடத்தும் பெரும் பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு அது அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் பாதையில் வரக்கூடிய சவால்களை, சிரமங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது கற்றுக் கொடுக்கப்படுகிறது. கிப்லா மாற்றத்திற்குப் பிறகுதான் பத்ருப்போர் நிகழ்ந்தது. பத்ருப்போர் நிகழும் என்று தெரிந்துதான் அதற்கு முன்னரே அதனால்

உள்ளுணர்வின் குரல்

எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று யாருக்கும் தெரியாது. நாம் நம் அனுபவங்களை, முந்தைய சம்பவங்களை முன்வைத்து கணிக்கிறோம். நம்முடைய கணிப்பு சரியாகவும் அமையலாம். அதற்கு மாறாகவும் அமையலாம். எந்தவொரு விசயத்தையும் குறித்து குறிப்பிட்ட அளவுவரை மட்டுமே நாம் யோசிக்க வேண்டும். அதற்கு மேல் யோசித்தால் நாம் எந்தவொரு செயலிலும்

மகத்தான அருட்கொடை

உண்மையை அறிந்து கொண்டே அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்றால் அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் அப்படித்தான். அவர்களுடன் தர்க்கம் செய்யாதீர்கள். அவர்களுக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை இருக்கிறது. அதில்தான் அவர்கள் செல்வார்கள். நீங்கள் செய்ய வேண்டியது நற்செயல்களில் போட்டி போட்டுக் கொண்டு உங்களை ஈடுபடுத்துவதுதான். இதுதான் சரியான

எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?

நாம் எப்போது சிந்திக்கிறோம்? ஓய்வாக இருக்கும்போதுதான் சிந்திக்கிறோம். தொடர்ந்து ஏதேனும் ஒரு வேலையிலும் மீதமுள்ள சமயங்களில் பொழுதுபோக்கிலும் நாம் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தால் சிந்திப்பதையே மறந்து விடுவோம். இயல்பான, ஆரோக்கியமான சிந்தனைகளை நாம் இழந்து விடுகின்றோம். தனிமை நம்மை அச்சுறுத்தக்கூடியதாக மாறி விடுகிறது. எப்போதும் எதையேனும் ஒன்றை செய்து கொண்டிருக்கும்

சாவின் குரல்

நீண்ட நாளுக்குப் பிறகு அவரது கடைக்குச் சென்றேன். மனிதர் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் தெரிந்தார். அவருக்கும் எனக்கும் மத்தியில் நடைபெற்ற உரையாடல்: “என்னாச்சு, ரொம்ப சோர்வா இருக்கீங்களே?” “அம்மா இறந்து விட்டார்கள், அதான்.” “இறந்து எவ்வளவு நாளாயிற்று?” “ஒரு மாதம் ஆகிவிட்டது.” “பிறகு ஏன் இவ்வளவு கவலையாக

கிப்லா மாற்றமும் பெரும் பொறுப்பும்

சாட்சியம் கூற மறுக்கும், தாங்கள் அறிந்தவற்றுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கும் யூதர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுவதோடு முதல் பாகம் நிறைவடைகிறது. அடுத்து வரும் வசனங்கள் மனிதர்களுக்கு வழிகாட்டும் தலைமைத்துவ பொறுப்பிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டு அந்த பொறுப்பு முஸ்லிம்களின் வசம் ஒப்படைக்கப்படுவதையும் அந்த பொறுப்பை சுமப்பதற்கு அவர்கள் பெற்றிருக்க வேண்டிய