தேக்கி வைக்கப்படும் குரோதம்

You are currently viewing தேக்கி வைக்கப்படும் குரோதம்

நமக்கு மேல் இருப்பவர்களிடம் நாம் கோபம் கொள்வதில்லை. கோபத்தை வெளிப்படுத்த முடியாத இடங்களில் நாம் கோபம் கொள்வதில்லை. ஆனாலும் மனதில் ஒரு வெறுப்பை தேக்கி வைக்கிறோம். அது குரோதமாக மாறுகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது அந்தக் குரோதம் நம்மையும் மீறி வெளிப்பட்டு விடுகிறது. கோபத்தை வெளிப்படுத்த முடியுமான இடங்களில் கோபத்தை வெளிப்படுத்துகிறோம். நம் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மீதுதான் நாம் கோபம் கொள்கிறோம். கடும் வார்த்தைகளைக் கூறுகிறோம் அல்லது அடிக்கிறோம் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு வகையில் கோபத்தை வெளிப்படுத்தி விடுகிறோம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல் என்பது கோபத்தை வெளிப்படுத்த முடியுமான இடங்களில் கோபம் கொள்ளாமல் இருப்பதுதான். கோபத்தைக் கட்டுப்படுத்துதல் என்பது ஒரு நிலை. மனிதர்களின் தவறுகளை கண்டும் காணாமல் விட்டு விடுவது என்பது இன்னொரு நிலை. இரண்டும் இணைந்தால்தான் அது பயனுள்ள ஒன்றாக மாறும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு குரோதத்தைத் தேக்கி வைப்பது கோபத்தை வெளிப்படுத்துவதைவிட ஆபத்தானது. உடனுக்குடன் வெளிப்படுத்தப்படும் கோபங்களைவிட தேக்கி வைக்கப்படும் குரோதம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. திருக்குர்ஆன் நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பட்டியிலிடும்போது இந்த இரு பண்புகளையும் ஒருசேர குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது:

“அவர்கள் கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் தவறுகளை கண்டும் காணாமல் விட்டு விடுவார்கள்…” (3:134)

கோபத்தைக் கட்டுப்படுத்துதல் ஒரு நிலை. மனிதர்களின் தவறுகளை கண்டும் காணாமல் மன்னித்து விடுவது இரண்டாவது நிலை. இந்த இரண்டும் இணைந்த நிலையையே இஸ்லாம் விரும்புகிறது. அதுதான் நமக்கும் மற்றவர்களுக்கும் பயனளிக்கும் நிலை.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply