கிரேக்க தத்துவமும் இல்முல்கலாமும் உருவாக்கிய வறண்ட வாதங்களை கூர்மையாக விமர்சித்து உருவானவைதாம் ரூமியின் கவிதைகள். அன்பு ததும்பும் உயிரோட்டமான அவரது வரிகள் வறண்ட கிடந்த உள்ளங்களில் பெருமழையாய் பொழிந்தன. அவற்றால் அந்த உள்ளங்கள் உயிர்பெற்று எழுந்தன. காணாமல்போன பிரியத்திற்குரிய பொருள் கிடைத்ததுபோன்று அவை மகிழ்ச்சியடைந்தன.
அபுல் ஹசன் நத்வீ ரூமியை மறுமலர்ச்சியாளர்களில் ஒருவராக மதிப்பிடுகிறார். அதற்கான காரணமாக அவர் முன்வைப்பது, அவரது வரிகள் உள்ளத்தின் ஈமானை, மலர்ச்சியை, திருப்தியை, இயல்பை மீட்டுக் கொண்டு வந்தன என்பதும் அறிவை அளவுகடந்து ஆராதிக்கும் கிரேக்க தத்துவத்தையும் இல்முல்கலாமையும் துல்லியாக, கூர்மையாக விமர்சித்தன என்பதும் ஆகும்.
இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு என்ற நூலின் முதலாவது பாகத்தில் மௌலானா ரூமியின் வாழ்க்கை குறிப்புகளும் அவரது காலகட்டத்தின் சித்திரமும் அவர் முன்வைத்த மறுமலர்ச்சிப் பணிகளும் போதுமான அளவு எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ரூமியின் பெயர் அதிகம் உச்சரிக்கப்படும் இந்தக் காலகட்டத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிப்பது மிக அவசியம் என்று கருதுகிறேன்.
மௌலானா ரூமியின் காலகட்டம் கிரேக்க தத்துவமும் அதன் விளைவாக முஸ்லிம் உலகில் உருவான இல்முல்கலாமும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டம். இரண்டுமே மனித அறிவை அளவு கடந்து ஆராதிக்கும் தன்மை கொண்டிருந்தவை; மனிதனின் இயல்பான உணர்வுகளை கவனத்தில் கொள்ளாதவை. அவை முஸ்லிம் உலகில் வறட்டு வாதங்களை உற்பத்தி செய்தன. ஒரு கட்டத்தில் ஒவ்வொன்றையும் அளவிடுவதற்கான அளவீடுகளாக மாறி நின்றன. மனிதன் உள்ளத்தில் தெளிவாக உணர்பவைகூட வறட்டுத்தனமான தர்க்கங்களால் மறுக்கப்பட்டன. அவை சத்தியத்தை அறிதல் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக எதிர்த்தரப்பினரை வாயடைக்கச் செய்தல் என்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன.