கட்டுரைகள்

சமநிலை குலைவு

மனப்பிறழ்வு கொண்டவர்களை பொதுவாக இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர், தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை, தாங்கள் இயல்பாக இல்லை என்பதை, தங்களுக்கு சிகிச்சை அவசியம் என்பதை உணர்பவர்கள். இன்னொரு வகையினர், தங்களுக்கு மனரீதியாக பிரச்சனைகள் இருந்தும் அவற்றில் எதையும் உணராமல் தாங்கள் இயல்பாக இருப்பதாக எண்ணிக்கொள்பவர்கள். இந்த இரண்டாவது

உறவுச் சிக்கல்கள்

நூறு சதவீதம் நன்மையை மட்டுமே கொண்டது என்று எதுவுமேயில்லை. ஒவ்வொன்றும் நேர் எதிரான பக்கங்களையும் கொண்டிருக்கிறது. ஒன்றைப் பெற வேண்டுமானால் இன்னொன்றை இழக்க வேண்டியிருக்கலாம். ஒருவரிடமிருந்து பயனடைந்து கொள்ள விரும்பினால் அவரது எதிர்மறை பண்புகளையும் நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். உறவுகளால் நண்பர்களால் ஏற்படும் தொல்லைகளையும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்ள

வாழ்க்கையும் வலிகளும்

வாழ்க்கை வலிகளாலும் ஆனது. விதவிதமான வலிகள் நம்மை வந்தடைந்து கொண்டேயிருக்கின்றன. உடலளவில் நாம் காயப்படுகிறோம். மனதளவில் நாம் காயப்படுகிறோம். சில வலிகள் உடனேயே மறைந்துவிடுகின்றன. சில வலிகள் நீண்ட நாட்கள்வரை நீடிக்கின்றன. சில வலிகள் அவ்வப்போது நம்மிடம் வந்து செல்கின்றன. வலிகள் என்ன செய்கின்றன? வலிகள் நம் இயலாமையை

சமநிலையின் சூட்சுமம்

ஒவ்வொரு துறைக்கும் அதற்கென மனிதர்கள் இருக்கிறார்கள். இறைவன் இந்த உலகில் படைத்த அற்புதங்களில் ஒன்று, மனித வாழ்க்கை சீர்குலையாமல் நேரான பாதையில் பயணிக்க அவன் ஏற்படுத்தியுள்ள சமநிலையாகும். இங்கு ஒவ்வொன்றும் சரியான அளவில் இருக்கின்றது. அல்லாஹ் மனிதர்களை ஒரே நிலையில் படைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப

குடும்ப வாழ்க்கையும் பொறுமையும்

சில வருடங்களுக்கு முன்னால் ஒருவரிடம் ஒரு பைக் வாங்கினேன். அதற்கான பணத்தை கொடுத்த பிறகு ஒரு மாதம் கழித்து எனக்கு என்னுடைய பைக் வேண்டும், நான் உங்களின் பணத்தை தந்து விடுகிறேன் என்றார். அவரது குரலில் கெஞ்சல் இருந்ததனால் நானும் எந்த மறுப்பும் இன்றி அவரது பைக்கை திருப்பி

போதிப்பவனும் போதிக்கப்படுபவனும்

மார்க்கத்தைச் சொல்லக்கூடியவர்கள், அறபோதகர்கள் பொய்யர்களாக, நேர்மையற்றவர்களாக இருந்தால் என்ன? அவர்கள் இந்தத் துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக, சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களின் அறிவுரைகளை நாங்கள் செவிமடுக்கிறோம். அவர்களின் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து எங்களுக்குக் கவலையில்லை. இப்படி ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்து மற்ற துறைகளுக்குப் பொருந்தும். துறைசார்ந்த