எனக்குத் தெரிந்தவன்தான் அவன். தன் அம்மா திடீரென இறந்தபோது அவன் அழாமல் இருந்தான். ஏன் அவனுக்கு அழுகை வரவில்லை? அம்மாவுடன் மிகவும் பாசமாக இருந்த பிள்ளைதானே அவன்? என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். மய்யித்தை தூக்கி அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றபோது அவன் வெடித்து அழுத் தொடங்கினான். திடீரென
மனப்பிறழ்வு கொண்டவர்களை பொதுவாக இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர், தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை, தாங்கள் இயல்பாக இல்லை என்பதை, தங்களுக்கு சிகிச்சை அவசியம் என்பதை உணர்பவர்கள். இன்னொரு வகையினர், தங்களுக்கு மனரீதியாக பிரச்சனைகள் இருந்தும் அவற்றில் எதையும் உணராமல் தாங்கள் இயல்பாக இருப்பதாக எண்ணிக்கொள்பவர்கள். இந்த இரண்டாவது
நூறு சதவீதம் நன்மையை மட்டுமே கொண்டது என்று எதுவுமேயில்லை. ஒவ்வொன்றும் நேர் எதிரான பக்கங்களையும் கொண்டிருக்கிறது. ஒன்றைப் பெற வேண்டுமானால் இன்னொன்றை இழக்க வேண்டியிருக்கலாம். ஒருவரிடமிருந்து பயனடைந்து கொள்ள விரும்பினால் அவரது எதிர்மறை பண்புகளையும் நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். உறவுகளால் நண்பர்களால் ஏற்படும் தொல்லைகளையும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்ள
வாழ்க்கை வலிகளாலும் ஆனது. விதவிதமான வலிகள் நம்மை வந்தடைந்து கொண்டேயிருக்கின்றன. உடலளவில் நாம் காயப்படுகிறோம். மனதளவில் நாம் காயப்படுகிறோம். சில வலிகள் உடனேயே மறைந்துவிடுகின்றன. சில வலிகள் நீண்ட நாட்கள்வரை நீடிக்கின்றன. சில வலிகள் அவ்வப்போது நம்மிடம் வந்து செல்கின்றன. வலிகள் என்ன செய்கின்றன? வலிகள் நம் இயலாமையை
ஒவ்வொரு துறைக்கும் அதற்கென மனிதர்கள் இருக்கிறார்கள். இறைவன் இந்த உலகில் படைத்த அற்புதங்களில் ஒன்று, மனித வாழ்க்கை சீர்குலையாமல் நேரான பாதையில் பயணிக்க அவன் ஏற்படுத்தியுள்ள சமநிலையாகும். இங்கு ஒவ்வொன்றும் சரியான அளவில் இருக்கின்றது. அல்லாஹ் மனிதர்களை ஒரே நிலையில் படைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப
சில வருடங்களுக்கு முன்னால் ஒருவரிடம் ஒரு பைக் வாங்கினேன். அதற்கான பணத்தை கொடுத்த பிறகு ஒரு மாதம் கழித்து எனக்கு என்னுடைய பைக் வேண்டும், நான் உங்களின் பணத்தை தந்து விடுகிறேன் என்றார். அவரது குரலில் கெஞ்சல் இருந்ததனால் நானும் எந்த மறுப்பும் இன்றி அவரது பைக்கை திருப்பி