கிரேக்க தத்துவமும் இல்முல்கலாமும் உருவாக்கிய வறண்ட வாதங்களை கூர்மையாக விமர்சித்து உருவானவைதாம் ரூமியின் கவிதைகள். அன்பு ததும்பும் உயிரோட்டமான அவரது வரிகள் வறண்ட கிடந்த உள்ளங்களில் பெருமழையாய் பொழிந்தன. அவற்றால் அந்த உள்ளங்கள் உயிர்பெற்று எழுந்தன. காணாமல்போன பிரியத்திற்குரிய பொருள் கிடைத்ததுபோன்று அவை மகிழ்ச்சியடைந்தன. அபுல் ஹசன் நத்வீ
அந்த ஒரு மணி நேரம் அந்த இருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நேரமாக அமையும் என்று அவர்கள் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆம், அது அந்த இருவரின் வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஒருவர் கண நேரத்தில் தம்மைக் காத்துக் கொண்டார். இன்னொருவர் அந்த பெரும் துன்பத்தில்