கட்டுரைகள்

புனைவுகள் என்னும் பெருவெளி

பெரிய மனிதர்களின் சுயசரிதைகளை படிக்க வேண்டும் என்று நாம் ஆவல் கொள்வதுண்டு. இங்கு பெரிய மனிதர்கள் என்ற பிம்பம் ஒவ்வொருவருடைய கண்ணோட்டத்தைப் பொறுத்தும் மாறுபடக்கூடியது. அந்த மனிதர்கள் அந்த அளவுக்கு உயர்ந்ததற்கான காரணிகள் அவர்களின் சுயசரிதைகளில் காணப்படலாம் என்ற காரணமும் நம் ஆவலுக்குப் பின்னால் இருக்கலாம். ஆனால் பல

தேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்

விசாலமான வாசிப்பு ஒரு மனிதனை கடும்போக்குவாதத்திலிருந்தும் குறுகிய சிந்தனையிலிருந்தும் விடுவிக்கலாம். அறியாமையும் அறைகுறையான, மேம்போக்கான அறிதலும் கடும்போக்குவாத்தின் பக்கம் மனிதர்களை இட்டுச்செல்லக்கூடியவை. பொதுவாக கடும்போக்குவாதிகள் தங்களின் வட்டத்தைத் தாண்டி எதுவும் வாசிப்பதில்லை அல்லது எதுவும் வாசிப்பதே இல்லை. அதிகபட்சம் தங்கள் இயக்கத்தை, சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர்களின் உரைகளைக் கேட்பதோடு

அநியாயம், அநியாயம்

அநியாயக்காரர்கள் மோசமான விளைவை சந்திப்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அநியாயக்காரர்களால் நீடித்த வெற்றியை பெற முடியாது. அநியாயம் இவ்வுலகில் செயல்படும் நியதிகளுக்கும் மனிதனுக்குள் செயல்படும் நியதிகளுக்கும் எதிரானது. அநியாயம் மகிழ்ச்சியையோ நிம்மதியையோ கொண்டு வராது. அநியாயம் அதைவிட மோசமான அநியாயத்தைக் கொண்டுவரும். அநியாயக்காரர்கள் தங்களைவிட வலிமையான அநியாயக்காரர்களால் வீழ்த்தப்படலாம்.

அதிகாரமும் அநியாயமும்

இவ்வுலகில் இறைவன் அமைத்த நியதிகளின்படி வெளிப்படையான காரணிகளை அப்படியே அச்சுப்பிசகாமல் பின்பற்றினாலும் அநியாயக்காரர்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. அவர்களால் தற்காலிக வெற்றிகளைத்தவிர நீடித்த வெற்றியைப் பெற முடியாது. அவர்கள் பெறக்கூடிய தற்காலிக வெற்றிகள் அவர்களை ஒருவித மயக்கத்தில், தாங்கள் செய்வது சரிதான் என்ற எண்ணத்தில் ஆழ்த்தி விடுகின்றன.

தேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன?

“மனிதர்களே! நாம் உங்களை ஒரே ஆண், பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும்பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அவனை அதிகம் அஞ்சுபவர்தாம். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுட்பமாகத் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.” (49:13) குலம் குலமாகப் பிரிந்து அற்ப காரணங்களுக்காக ஒருவருக்கொருவர்

கருத்து மோதல்கள்

கருத்துச் சுதந்திரம் பேசுவோர் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவர்களாக மாறுவது விசித்திரமான ஒன்று. ஆனாலும் பெரும்பாலும் அப்படித்தான் நிகழ்கிறது. வரலாற்றில் இப்படிப்பட்டவர்களே நிரம்பக் காணப்படுகிறார்கள் என்கிறார் அஹ்மது அமீன். அதிகாரம் அற்றவனுக்கு, ஒடுக்கப்படுவனுக்கு கருத்துச் சுதந்திரம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அவன் அதிகாரத்தை பெற்றுவிட்டால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டால்