நாம் செய்யும் பாவங்களை ஒரு கட்டத்தில் நம்மையும் அறியாமல் நாம் வெளிப்படுத்தி விடுவோம். எதைக் குறித்து நமக்கு குற்றவுணர்ச்சி இருக்கிறதோ அதைக் குறித்தும் நாம் அடிக்கடி நம்மையும் மீறி பேசிக் கொண்டிருப்போம். நம்மால் தொடர்ந்து நடிக்க முடியாது. அந்த வகையான நடிப்புகூட ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்திவிடும். இயல்பாக
காமமும் அகங்காரமும் மனிதனுக்குள் அணையாமல் இருந்து கொண்டிருக்கும் இரு நெருப்புக் கங்குகள். அவை எப்போது வேண்டுமானாலும் தூண்டப்படலாம். எப்போது வேண்டுமானாலும் கொழுந்துவிட்டு எரியலாம். அவை எப்போது வேண்டுமானாலும் அவனை மிகைக்கலாம். மீண்டும் மீண்டும் அவனை பாவங்களில் ஆழ்த்தலாம். ஒரேயடியாக இந்த இரண்டு பண்புகளிலிருந்தும் யாரும் விடுபட்டுவிட முடியாது. தப்பித்தலும்
பெண்கள் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களிடம் பேசுவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கின்றன. குறைவாகப் பேசக்கூடிய பெண்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பேசிப் பேசி எல்லாவற்றையும் கடக்கிறார்கள். புலம்புகிறார்கள், தன்னிரக்கம் தேடுகிறார்கள், அழுகிறார்கள். இவற்றின்மூலம் அவர்களால் மலையளவு பாரங்களைக்கூடி எளிதாக இறக்கி வைத்துவிட முடிகிறது. அவர்களின் பலவீனம்கூட அவர்களுக்குப்
ஒருவர் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நமக்குப் பெரும் பலம் மட்டுமல்ல பலவீனமும்கூட. அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்கு நாம் பெரிதும் மெனக்கெட வேண்டும். நம்முடைய தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திட வேண்டும். விரும்பியோ விரும்பாமலோ சமூகம் விதித்திருக்கும் வரையறைகளைப் பின்பற்ற வேண்டும். அந்த நம்பிக்கை அவ்வளவு எளிதாக உருவாகிவிட முடியாது.
நாம் தொடர்ந்து தொய்வடையாமல் இயங்குவதற்கு நம் மீது சுமத்தப்படும் பொறுப்புகளுக்கு முதன்மையான பங்கு உண்டு. பொறுப்புகள் சுமைகள் அல்ல. நாம் முன்னேறிச்செல்வதற்கு பல வகையில் அவை காரணமாகின்றன. அவை இல்லையெனில் நாம் தேக்கமடைந்து விடுவோம். ஒரு வகையில் அவை சுமைகளாக இருந்தாலும் தேவையற்ற சுமைகளைப் போக்கும் பயனுள்ள சுமைகளாக
மனிதர்களின் வாழ்வில் திடீரென புகுந்துகொள்ளும் இருட்டு பற்றி அறிவீர்களா? அது சம்பந்தப்பட்ட மனிதரை மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் நாசப்படுத்தி விடுகின்றது. அந்த இருட்டு ஏதேனும் ஒரு வடிவில் அவனுடைய வாழ்வில் மெல்ல நுழைகிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தி அவனை மட்டுமல்லாமல் அவனைச் சார்ந்தவர்களையும் மூழ்கடிக்கத்