பிரார்த்தனைகள்

பிரார்த்தனை செய்யுங்கள். அதுவும் இறைவணக்கத்தின் ஒரு வடிவம்தான் என்கிறது இஸ்லாம். நாம் செய்யும் பிரார்த்தனை நம்முள் அசாதரண மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. பிரார்த்தனையின்மூலம் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் விடுபடுகிறோம். இறைவனிடம் நம்பிக்கையுடன் நாம் செய்யும் பிரார்த்தனைகள் மனதின்…

மரணம் என்னும் எதார்த்தம்

நாட்கள் நகர்கின்றன, மிக வேகமாக. எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணும்போது மனதில் வெறுமையே மிஞ்சுகிறது. கடந்த காலம் வெகு தொலைவில் இருப்பதாகத் தெரியவில்லை. மனதிற்கு ஓரளவு ஆறுதலையும் நிறைவையும் தருவது நாம் செய்த நற்செயல்களே. வாழ்வென்னும் பெரும் நதி…

தர்க்கத்திற்கு அப்பால்

நமக்கு வரக்கூடிய சில கனவுகள் ஆச்சரியமளிக்கக்கூடியவை. அவை நம் ஆன்மாவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் ஒரு செய்தியை, நிகழப்போகும் ஒரு சம்பவத்தை உணர்த்திவிட்டுச் செல்கின்றன. சில சமயங்களில் நாம் தடுமாறிக்கொண்டிருக்கும் திணறிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு அற்புதமான தீர்வும் கனவின் மூலமாக கிடைத்துவிடுகிறது.…

நினைவலைகளும் புதுப்புது அனுபவங்களும்

பல விசயங்களுக்குத் தடையாக இருப்பது நினைவலைகள்தாம். ஒரு வீடு மாற வேண்டும் என்றாலும் ஒரு ஊரைவிட்டுச் செல்ல வேண்டும் என்றாலும் ஒருவரைவிட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்றாலும் முதலில் தடையாக வருவது நினைவலைகளே. அவை மனித மனதில் தாக்கம் செலுத்தும் வலுவானவை.…

மனிதனைப் பண்படுத்தும் மார்க்கம்

மனிதனின் விசித்திரமான ஒரு பண்பு, அவன் சக மனிதனுக்கு உதவவும் செய்வான்; அவன்மீது பொறாமை கொண்டு அவனுக்குத் தீங்களிக்கவும் முற்படுவான். அதிலும் அவன் தன்னை அண்மித்து இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீதுதான் அதிகம் பொறாமை கொள்வான். உறவும் நெருக்கமும் நட்பு…

அறிதல் முறைகள்

மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் ரயிலில் அடிபட்டு தற்கொலை செய்து கொள்கிறாள் என்ற பத்திரிகைச் செய்தி டால்ஸ்டாயின் மனதை உலுக்கிவிடுகிறது. இந்தச் சம்பவம்தான் அன்னா கரீனினா என்ற உலகப் புகழ்பெற்ற நாவலுக்கான விதையாக அமைந்தது. அன்றாடம் பார்க்கின்ற சாதாரண ஒரு…

பணிவும் கண்ணியமும்

போலியான, சடங்குத்தனமான மரியாதை மரியாதையே அல்ல. உண்மையில் அது ஒரு அவமதிப்பு, நடிப்பு, நயவஞ்சகத்தனம். இருந்தும் அதனை விரும்பக்கூடியவர்கள் அதிக அளவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய போலியான ஒரு மரியாதையைப் பெற தங்களின் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். இன்னும் பலர் அதனை…

மனிதனின் இயலாமை வெளிப்படும் தருணம்

துன்பத்தில்தான் மனிதன் தன் இயலாமையை உணர்கிறான். அது அவன் மீது அதிகாரம் செலுத்தும் பேராற்றல் கொண்ட இறைவனை அவனுக்கு நினைவூட்டுகிறது. அவனைத் தவிர தனக்கு வேறு எங்கும் அடைக்கலம் இல்லை என்பதையும் தன் துன்பத்தைப் போக்க அவனால் மட்டுமே முடியும் என்பதையும்…

குற்றவுணர்வு என்ன செய்கிறது?

நாம் செய்யும் பாவங்களை ஒரு கட்டத்தில் நம்மையும் அறியாமல் நாம் வெளிப்படுத்தி விடுவோம். எதைக் குறித்து நமக்கு குற்றவுணர்ச்சி இருக்கிறதோ அதைக் குறித்தும் நாம் அடிக்கடி நம்மையும் மீறி பேசிக் கொண்டிருப்போம். நம்மால் தொடர்ந்து நடிக்க முடியாது. அந்த வகையான நடிப்புகூட…

காமம்

காமமும் அகங்காரமும் மனிதனுக்குள் அணையாமல் இருந்து கொண்டிருக்கும் இரு நெருப்புக் கங்குகள். அவை எப்போது வேண்டுமானாலும் தூண்டப்படலாம். எப்போது வேண்டுமானாலும் கொழுந்துவிட்டு எரியலாம். அவை எப்போது வேண்டுமானாலும் அவனை மிகைக்கலாம். மீண்டும் மீண்டும் அவனை பாவங்களில் ஆழ்த்தலாம். ஒரேயடியாக இந்த இரண்டு…