உளவறிதல்

You are currently viewing உளவறிதல்

ஒருவரை எந்த அளவு நெருங்குகிறாமோ அந்த அளவு அவரிடமிருந்து விலகியும் செல்வோம். அதீத நெருக்கம் கொஞ்சம் ஆபத்தானது. ஒருவரை முழுமையாக அறிந்துவிட்டால் அவரிடமிருந்து விலகிவிடுவோம் அல்லது அவர் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுவோம். நாம் அறியாத ஏதோ ஒன்று நம்மை ஈர்க்கிறது. அதனை அறிந்துவிட்டால் அந்த ஈர்ப்பு அகன்று விடுகிறது. சிலரது விசயத்தில் அதற்கு மாறாகவும் நிகழ்கிறது. அதனை அறிந்துவிட்டாலும் அந்த ஈர்ப்பு அகல்வதில்லை.

மனிதர்களை மேலோட்டமாக, அவர்களிடமிருந்து வெளிப்படும் சொற்களையும் செயல்களையும் கொண்டு அவர்களை அணுகுவதே நமக்கு உகந்தது. அவர்களை மூடியிருக்கும் மெல்லிய திரையை அகற்றாமல் இருப்பதே நமக்குப் பாதுகாப்பானது. அகத்தை அறிய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அறிந்தாலும் பெரிய அளவில் பயனேதும் இல்லை. சில சமயங்களில் அது பெரும் தீங்காகவும் அமைந்துவிடுகிறது. அவை உண்மைகள் என்றாலும் பல சமயங்களில் அவற்றை அறியாமல் இருப்பதே நமக்கு நல்லது. எல்லா உண்மைகளும் கட்டாயம் அறியப்பட வேண்டியவை அல்ல. 

நாம் யாரையும் உளவறிய வேண்டியதில்லை. யாருடைய அந்தரங்கத்தையும் அறிய வேண்டியதுமில்லை. யாரையும் அம்பலப்படுத்த வேண்டியதுமில்லை. அது முதலில் நம்முடைய நிம்மதியைத்தான் கெடுக்கும். உளவறிதல் இழிபண்பு. அது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்து நிராசை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. அது நம்முடைய உள்ளத்தில் சந்தேகத்தை நிரந்தரமாக குடிகொள்ளச் செய்துவிடும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் இருக்கிறது. மனதில் எந்தச் சமயத்தில் என்ன மாற்றம் நிகழும் என்று யாருக்குத் தெரியும்? அது புரிந்துகொள்ள முடியாத மாயநதி. அவரிடமிருந்து வெளிப்பட்ட சொற்களுக்கும் அவர் செய்த செயல்களுக்கும்தான் அவர் பொறுப்பு.

விலகல் சில சமயங்களில் நட்பை, உறவை புதுப்பிக்கும். விலகல் சில சமயங்களில் ஈர்ப்பை உண்டாக்கும். நெருக்கம் சலிப்பையும் ஏற்படுத்தும். நெருக்கத்திற்கு விலகலும் அவசியம். இந்த உலகம் முரண்களால் ஆனதுதான். ஆனாலும் இந்த முரண்கள் ஒரு விதத்தில் சமநிலையை ஏற்படுத்துவது பெரும் ஆச்சரியம்தான்.

ஒருவரை எந்த அளவு நெருங்குகிறாமோ அந்த அளவு அவரிடமிருந்து விலகியும் செல்வோம். அதீத நெருக்கம் கொஞ்சம் ஆபத்தானது. ஒருவரை முழுமையாக அறிந்துவிட்டால் அவரிடமிருந்து விலகிவிடுவோம் அல்லது அவர் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுவோம்.

நாம் அறியாத ஏதோ ஒன்று நம்மை ஈர்க்கிறது. அதனை அறிந்துவிட்டால் அந்த ஈர்ப்பு அகன்று விடுகிறது. சிலரது விசயத்தில் அதற்கு மாறாகவும் நிகழ்கிறது. அதனை அறிந்துவிட்டாலும் அந்த ஈர்ப்பு அகல்வதில்லை.

மனிதர்களை மேலோட்டமாக, அவர்களிடமிருந்து வெளிப்படும் சொற்களையும் செயல்களையும் கொண்டு அணுகுவதே நமக்கு உகந்தது. அவர்களை மூடியிருக்கும் மெல்லிய திரையை அகற்றாமல் இருப்பதே நமக்குப் பாதுகாப்பானது. அகத்தை அறிய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அறிந்தாலும் பெரிய அளவில் பயனேதும் இல்லை. சில சமயங்களில் அது பெரும் தீங்காகவும் அமைந்துவிடுகிறது. அவை உண்மைகள் என்றாலும் பல சமயங்களில் அவற்றை அறியாமல் இருப்பதே நமக்கு நல்லது. எல்லா உண்மைகளும் கட்டாயம் அறியப்பட வேண்டியவை அல்ல

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply