இயக்கத்தைக் கட்டமைத்தல் – 3

இஸ்லாமிய அழைப்பியலின் பாதை எளிதானது அல்ல. மனிதர்கள் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பாதையில் சென்றுவிட முடியாது. மனக்கட்டுப்பாடு அற்றவர்கள் அந்தப் பாதையில் நீடிக்க முடியாது. உண்மையில் அது அல்லாஹ் அளிக்கும் பெரும் பாக்கியம். அந்த பாக்கியத்தைப் பெறுவதற்கு முன்னர் அவர்கள் சோதனைகளைக்…

இயக்கத்தைக் கட்டமைத்தல் – 2

இஸ்லாமிய அழைப்பியல் என்பது ஒரு மறைமுக அதிகாரமும்கூட. மக்கள் அழைப்பாளர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை நம்புகிறார்கள். அவர்களிடம் இஸ்லாம் என்ற அளவுகோல் இருக்கிறது. அதன்படி அவர்கள் நடப்பார்கள் என்று அவர்கள் கருதுவதால் அவர்களை நம்புகிறார்கள். சிலர் அவர்களின் பணிக்கு நிதியுதவி செய்கிறார்கள்.…

நன்றியும் நன்றிகெட்டத்தனமும்

உங்களிடம் நன்றி செலுத்தும் பண்பு இருக்கிறது எனில் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.  உங்களிடம் இருப்பவை பாதுகாக்கப்படும். எதிர்பாரா புறத்திலிருந்து நீங்கள் உதவி செய்யப்படுவீர்கள். நான் கூறுவது படைத்த இறைவன் உங்களுக்கு அளித்த அருட்கொடையை உணர்ந்து நன்றி செலுத்தும் பண்பு.…

இயக்கத்தை கட்டமைத்தல் – 1

ஒருவர் மற்றவருடன் எப்படி இணைகிறார்கள்? ஒருவர் மற்றவரைவிட்டு எப்படி விலகிச் செல்கிறார்கள்? அன்பு ஈர்க்கும். வெறுப்பு விலக்கி வைக்கும். தேவை ஈர்க்கும். தேவையின்மை விலக்கி வைக்கும். ஒத்திசைவு ஈர்க்கும். ஒத்திசைவின்மை விலக்கி வைக்கும். நிர்ப்பந்தமும் சூழலும்கூட இணைப்பையும் விலகலையும் ஏற்படுத்தும். ஆனால்…

மிக இலகுவாக

எந்தவொரு பெரும் செயலும் மிக இலகுவாக நிகழ்ந்து விடுகிறது. ஆனால் அது நிகழ்ந்த பிறகுதான் அது இலகுவாக நிகழ்ந்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அது நிகழ்வதற்கு முன்னர்வரை அது கடினமான அல்லது நிகழ்வதற்கு சாத்தியமற்ற ஒன்றாகத்தான் நமக்குத் தெரிந்து…

இலக்கை நோக்கிய பாதை

அதிகப்படியான செய்திகள் நம்மை பெரும் குழப்பத்திலும் கடும் மனச்சோர்விலும் ஆழ்த்தும். எந்த அளவு நாம் நம்முடைய வாழ்க்கையை சிறியதாக அமைத்துக் கொள்கிறோமோ அந்த அளவு நாம் நிம்மதியாக இருக்கலாம். தொடர்ந்து உலகச் செய்திகள் முதற்கொண்டு உள்ளூர் செய்திகள்வரை அறிந்து கொண்டு அலசுபவர்கள்…

மனச்சிக்கலுக்கான ஓர் எளிய தீர்வு

மனதில் நேர்மறையானவை, எதிர்மறையானவை என ஆயிரம் எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும். எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. வருகின்ற எண்ணங்களை புறக்கணிப்பதும் அவற்றை நீடிக்கச் செய்வதும் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எதிர்மறையான எண்ணங்களை புறக்கணிக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை நீடிக்கச் செய்ய…

சுதந்திரமானவர்களா? அல்லது அடிமைகளா?

அதிகப்படியான சுதந்திரம், பெரும் செல்வம், அதிகாரம் ஆகியவை நேர்மறையான விளைவுகளைவிட எதிர்மறையான விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துகின்றன. கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில் நாம் நல்ல மனிதர்களாக வாழ்வது இலகுவானது. ஆனால் கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான சூழல் நம்மை தவறான திசைகளின் பக்கம் தள்ளுகிறது.…

எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்ந்தது? மற்றவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?’ ‘நான் இப்படி செய்திருக்கக்கூடாது’ ‘என்னைவிட திறமைக்குறைவானவன் எல்லாம் முன்னேறிக் கொண்டே செல்கிறானே!’ ‘நானெல்லாம் எப்படி இருக்க வேண்டிய ஆள்’ இதுபோன்ற புலம்பல் வார்த்தைகளால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? மீண்டும்…

மனச்சிக்கல் தொடர்பான ஒரு கேள்வி

பல சமயங்களில் நீங்கள் மனச்சிக்கல் கொண்டவர்களை கரிசனத்தோடு அணுக வேண்டும் என்கிறீர்கள்! அப்படிப் பார்த்தால் குற்றவாளிகளும் மனச்சிக்கல் கொண்டவர்கள்தானே? பிறகு அவர்களை எப்படி அணுகுவது? நீங்கள் எழுப்பிய இந்தக் கேள்வி மிக முக்கியமானது. பல முறை எனக்கு நானே இந்தக் கேள்வியை…