சலிப்பாக இருக்கிறது

You are currently viewing சலிப்பாக இருக்கிறது

வாழ்க்கை சலிப்பாக இருக்கிறது. அன்றாடம் செய்த செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம். பிறகு என்ன இருக்கிறது வாழ்வதற்கு?

இந்த எண்ணம் ஆரம்பத்தில் உங்களுக்கு உருவாகி இருக்காது என்று கருதுகிறேன். சாப்பிடுவது, வேலைக்குச் செல்வது, விளையாடுவது, பொழுது போக்குவது, தூங்குவது என அத்தனை வேலைகளிலும் உங்களுக்கு ஆர்வம் இருந்திருக்கும் அல்லது இந்த பெரும்பான்மையான செயல்பாடுகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்திருக்கும். சிற்றின்பங்களில் மேலதிகமாக ஆர்வம் இருந்திருக்கும். ஆனால் போகப் போக உங்கள் ஆர்வம் குறைந்து கொண்டே வந்திருக்கும் என்றே கருதுகிறேன். இப்படித்தான் அதிகமானோருக்கு நிகழ்கிறது. இது நிகழக்கூடியதுதான்.

அன்றாட செயல்பாடுகள் நமக்கு ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தலாம். எந்தவொன்றையும் தொடர்ந்து செய்யும்போது ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு ஏற்படுவது இயல்புதான். அந்த சலிப்பை உங்களை நீங்களே மாற்றிக் கொள்வதன்மூலம், உங்கள் சூழல்களை மாற்றிக் கொள்வதன்மூலம், உங்களின் அன்றாட செயல்பாடுகளை மாற்றிக் கொள்வதன்மூலம், பயணம் செய்வதன்மூலம், வாசிப்பின்மூலம், புதிய மனிதர்களை சந்திப்பதன்மூலம், புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதன்மூலம், மனதிற்குப் பிடித்தமான நற்செயல்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதன்மூலம் உங்கள் பாவங்களிலிருந்து மீள்வதன்மூலம் மாற்றிக்கொள்ள முடியும் என்று கருதுகிறேன்.

மனம்தான் அனைத்திற்கும் மையம். மனம் பாதிப்படையாமல், களங்கமடையாமல் இருக்க வேண்டும். அது களங்கமடைந்திருந்தால் அதற்குரிய ஆன்மிக பயிற்சிகளின்மூலம் அது தூய்மைப்படுத்தப்பட வேண்டும். இஸ்லாம் சொல்லும் வணக்க வழிபாடுகள் அதற்கான மிகச் சிறந்த பயிற்சிகள். தொடர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவது அதனை தூய்மைப்படுத்துவம் வழிமுறைகளுள் ஒன்று.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply