“நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் உங்களுக்கு உதவி செய்வான்.” (47:7)
அல்லாஹ் தேவையற்றவன். அவனுக்கு யாரும் உதவி செய்ய முடியாது. இங்கு அல்லாஹ்வுக்கு உதவி செய்தல் என்பது அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உதவி செய்வதாகும். அவனுடைய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக நீங்கள் பாடுபடுவதாகும் . அவனுடைய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக நீங்கள் பாடுபடும்போது அவன் உங்களை ஒருபோதும் கைவிட்டுவிட மாட்டான். மாறாக அவன் உங்களுக்கு உதவி செய்வான். எல்லா வகையிலும் அவன் உங்களை பலப்படுத்துவான்; அறியாத புறத்திலிருந்து நீங்கள் உதவி செய்யப்படுவீர்கள்; உங்களை சூழ்ந்திருக்கும் துன்பங்கள் உங்களை விட்டு அகன்று விடும்; அருள்வளங்களின் வாயில்கள் உங்களுக்கு திறக்கப்படும்.
இந்த மார்க்கத்தை பின்பற்றும்போது இந்த மார்க்கத்திற்காக செயல்படும்போது பலவீனமான மனிதன் பலமடைகிறான். அவன் என்றும் அறுபடாத உறுதியான கயிற்றை பற்றிக் கொள்கிறான். அவன் கவலை அடைவதும் இல்லை; நிராசை அடைவதும் இல்லை.
