இக்கிகய்

You are currently viewing இக்கிகய்

நாம் நோக்கத்தை உருவாக்க வேண்டியதில்லை. நம்முடைய நோக்கம் என்னவென்று கண்டடைய வேண்டியதிருக்கிறது. இக்கிகய் என்ற புத்தகத்தில் இடம்பெறும் வாசகம்தான் இது. மிகச் சரியான கருத்து இது. இதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது. ஒரு மனிதன் தன் நோக்கம் என்னவென்று கண்டடைந்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்போது தேவையற்ற மன அழுத்தங்களிலிருந்து சுமைகளிலிருந்து அவன் விடுபடுகிறான்; மன நிறைவு அடைகிறான்.

உங்களின் ஆர்வமும் திறமையும் ஒரு வேலையில் குவிந்து விட்டால் அந்தப் பணியை உங்களால் திறம்படச் செய்து முடிக்க முடியும் என்பது மட்டுமில்லாமல் அது ஒரு தியானம்போன்று உங்களை உங்கள் சலிப்பிலிருந்து, வெறுமையிலிருந்து, அழுத்தங்களிலிருந்து விடுவிக்கும் அருமருந்தாகவும் ஆகிவிடும். இங்கு ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதன்மூலமே அவர்கள் மன நிறைவு அடைய முடியும்.

மற்றவர்களுக்கு உதவுவது, உறவுகளுடன் இணைந்து வாழ்வது, உயிர் வாழ்வதற்கு வலுவான ஒரு நோக்கத்தைக் கொண்டிருப்பது என இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல அம்சங்கள் இஸ்லாமிய வாழ்வியலோடு நெருக்கமான தொடர்பு கொண்டவை. நீங்கள் இஸ்லாம் குறித்து போதுமான அளவு வாசிப்பு கொண்டவராக இருந்தால் இதுபோன்ற புத்தகங்கள் உங்களுக்கு இஸ்லாமிய வாழ்வியலை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கொண்டேயிருக்கும். நாம் மீண்டும் மீண்டும் கூறுவதுதான், மனிதன் எந்த அளவு இயல்பின் பக்கம் திரும்புகிறானோ அந்த அளவு அவன் இஸ்லாத்தின் பக்கமும் திரும்புவான். ஏனெனில் இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வெளிப்பட்டவைதாம். ஒன்று மற்றொன்றை வலுப்படுத்தக்கூடியதாக அமையுமே அன்றி ஒன்று மற்றொன்றுக்கு முரணாக அமையாது.

No photo description available.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply