நோன்புக்கும் மனக்கட்டுப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அற்புதமான வழிமுறை. கிட்டத்தட்ட எல்லா மதங்களும் நோன்பை ஏதேனும் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன. திருக்குர்ஆனும் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோன்றே உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. நம் முன்னால் உணவும் பானமும் இருந்தும் நாம்
மனிதர்கள் எளிதாக பாவங்களில் விழுந்து விடுகிறார்கள். அதனால்தான் அல்லாஹ் பாவமன்னிப்பின் வாசலை எப்போதும் திறந்தே வைத்திருக்கிறான். தாங்கள் செய்த பாவத்தை பாவம் என ஒத்துக் கொண்டு அதற்காக மனம் வருந்தி அவர்கள் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுகிறான். பாவம் செய்வது எளிதாக இருப்பதுபோல பாவமன்னிப்புக்
“அல்லாஹ் உங்களுக்குப் பங்கிட்டதைக் கொண்டு திருப்தியடையுங்கள். மனிதர்களில் தன்னிறைவு பெற்றவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.” இஸ்லாமிய உலகில் மிகவும் புகழ்பெற்ற, வெள்ளிக்கிழமை உரைகளில், அறிவுரைகளில் சொல்லப்படும் இந்த வாசகம் ஒரு நபிமொழியின் சிறிய பகுதி. இந்த வாசகத்தில் இடம்பெற்றுள்ள பங்கீடு என்ற வார்த்தை கவனிக்கத்தக்கது. அது சமநிலை என்ற பொருளையும்
திருக்குர்ஆன் இறைவனின் வேதமாகும். அது இறைவேதம் என்பதற்கு அதுவே சான்றாகவும் இருக்கின்றது. தன்னைப் போன்ற ஒரு வேதத்தை யாராலும் உருவாக்கி விட முடியாது என்று அறுதியிட்டுக் கூறுகிறது. நீங்கள் இந்தக் கூற்றை பொய்யெனக் கூறினால் அப்படியொரு வேதத்தை உருவாக்கிக் காட்டுங்கள் என்று அறைகூவல் விடுகிறது. அது விடுக்கும் அறைகூவல்
ஆரோக்கியம் அளப்பரிய அருட்கொடை என்பதை அதை இழந்த பிறகுதான் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம். அறபு மொழியில் ஆஃபியா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அது எல்லா வகையான ஆரோக்கியத்தையும் குறிக்கும் ஒரு செறிவான வார்த்தை. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், அடிப்படையான உலகியல் வசதிகளைப் பெற்றிருப்பது, மார்க்க அடிப்படையில் பிறழ்வுகள்
உடல் காயமடைவது போன்று மனமும் காயமடைகிறது. உடலில் ஏற்படும் காயம் வெளியில் தெரியக்கூடியதாக இருப்பதால் அதனை எளிதாக நாம் புரிந்து கொள்கின்றோம். காயமுற்றவர்களை நாம் பரிவோடு நடத்துகின்றோம். அவர்களை மற்ற மனிதர்களைப் போன்று கருதுவதில்லை. ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை நாம் அவ்வாறு நடத்துவதில்லை. அவர்களின் காயம் வெளிப்படையாகத் தெரியக்கூடியதல்ல