ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு அந்த புத்தகத்தின் ஆன்மாவோடு ஒன்ற வேண்டியது மிக அவசியம். இல்லையெனில் அது உயிரோட்டமற்ற வெற்று உடலாகிவிடும். புத்தகத்தின் ஆன்மாவோடு ஒன்றும் மொழிபெயர்ப்பாளர் இலக்கு மொழியில் நல்ல மொழிவளத்தையும் பெற்றிருப்பார் எனில் அது மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக வெளிப்படும். சில சமயங்களில் மூல மொழியில் உள்ள
என் வாழ்வின் நிகழ்ந்த சில நிகழ்வுகள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன. சில சமயங்களில் எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்வுக்கும் அது நிகழ்ந்து நீண்ட காலத்திற்குப் பிறகு நிகழ்ந்த சில நிகழ்வுகளுக்கும் மத்தியிலுள்ள தொடர்பு என்னை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுண்டு. சில சமயங்களில் நிகழ்வுகளுக்கு மத்தியில் அறுபடாமல் சில
ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபியவர்கள், “கோபம் கொள்ளாதீர்கள்” என்றார்கள். மீண்டும் தனக்கு அறிவுரை கூறுமாறு கேட்டார். அதற்கும் ”கோபம் கொள்ளாதீர்கள்” என்றார்கள். (புகாரீ) ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பார்கள். ஆத்திரம் கொள்ளும்போது மனிதன் தன்னிலை இழந்துவிடுகிறான். அப்போது அவனிடமிருந்து வெளிப்படும்
வெளிப்படையான காரணிகளைக் கொண்டு மாத்திரம் ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க முடியாது. அவற்றுக்கு அப்பால் நாம் அறியாத வேறு மறைமுகமான காரணிகளும் இருக்கின்றன. அருகில் தென்படுகின்ற வெளிப்படையான காரணிகளைக்கண்டு ஒருவர் அல்லது ஓர் அமைப்பு எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று நாம் எண்ணலாம்.
லௌகீக வாழ்வில் மனிதன் தன்னை தொலைத்துவிட்டால் தன் ஆன்மீக வாழ்வை அவன் இழந்துவிடுவான். ஆன்மீக வாழ்வில் தன்னை தொலைப்பவன் தன் லௌகீகத்தை இழந்துவிடுவான். லௌகீகமும் ஆன்மீகமும் சரிவிகிதத்தில் கலந்த வாழ்வே மனிதனை சரியான நிலையில் நிலைநிறுத்த முடியும். இஸ்லாம் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக் கண்ணோட்டத்தையே முன்வைக்கிறது. அது எந்தச்
ஈமான் என்பது வெறும் வார்த்தைகளை சடங்குத்தனமாக உச்சரிப்பதோ குருட்டுத்தனமாகப் பின்பற்றும் நம்பிக்கையோ அல்ல. ஈமான் என்ற வார்த்தைக்கு நம்பிக்கைகொள்வது, ஏற்றுக்கொள்வது என்று பொருள். அது அல்லாஹ்வை அவனுடைய அத்தனை பண்புகளுடனும் முழுமையாக ஏற்றுக் கொள்வது, அவனுடைய விதியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அதில் திருப்தியடைவது. தாய்தந்தையரின் நம்பிக்கையை ஆராயாமல்