தன்மானமா? செருக்கா?

தன்மானத்திற்கும் செருக்கிற்கும் மத்தியில் சிறிய இடைவெளிதான் உள்ளது. செருக்கை தன்மானம் என எண்ணுவோரும் இருக்கிறார்கள். ஒருவனிடம் இருக்கும் ஏதேனும் ஒரு தனித்தன்மை அவனிடம் செருக்கை உருவாக்கலாம். செல்வம், அதிகாரம், அறிவு, அழகு போன்றவை. செல்வச் செருக்கு, அதிகாரச் செருக்கு எப்படி தவறான…

பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் – 2

நாம் செய்யக்கூடிய பாவங்களுக்கும் நமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று இஸ்லாம் கூறுகிறது. நம்முடைய பாவங்கள் நம் ஆரோக்கியத்தில் வாழ்வாதாரத்தில் குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது ஒரு மனிதன் மற்றொருவனைப் பார்த்து “உன் பாவத்தினால்தான் உனக்கு இப்படியெல்லாம் துன்பங்கள்…

பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்-1

ஒரு மனிதன் பாவங்களில் மூழ்கிவிட்டால் அவன் இறைவனைவிட்டும் அவனை நினைவுகூருவதைவிட்டும் தூரமாகிவிடுகிறான். பாவத்தில் மூழ்கியவாறே அவனால் இறைவணக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபட முடியாது. பாவத்தில் இன்பம் காண்பவரால் இறைவணக்கத்தில் இன்பம் காண முடியாது. ஒரு கட்டத்தில் இறைவணக்கம் அவனுக்கு கடினமான ஒன்றாகிவிடும். அதுவரை…

நயவஞ்சகர்கள்

திருக்குர்ஆன் நயவஞ்சகர்களைக் குறித்து அதிகம் பேசியிருக்கிறது. அவர்களின் அடையாளங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது. சிரமங்களை அவர்கள் எதிர்கொள்ளும்முறை, சமூகத்தின் உறுதியைக் குலைப்பதற்காக அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் முன்வைக்கக்கூடிய சாக்குப்போக்குகள், அவர்களின் செயல்பாடுகள், வழிபாடுகளை அவர்கள் நிறைவேற்றும்…

ஒவ்வொன்றும் சோதனையே

நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகி விடுகிறது; நீங்களே எதிர்பார்க்காத அளவு பெரும் வளர்ச்சியை நீங்கள் பெற்று விடுகிறீர்கள்; உங்கள் மீதான தன்னம்பிக்கை கூடி விடுகிறது; உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கிடைக்காத வசதி வாய்ப்புகளெல்லாம் உங்களுக்கு இலகுவாகக் கிடைத்து விடுகிறது எனில் அது அல்லாஹ் உங்களுக்கு…

மௌலானா ரூமி

கிரேக்க தத்துவமும் இல்முல்கலாமும் உருவாக்கிய வறண்ட வாதங்களை கூர்மையாக விமர்சித்து உருவானவைதாம் ரூமியின் கவிதைகள். அன்பு ததும்பும் உயிரோட்டமான அவரது வரிகள் வறண்ட கிடந்த உள்ளங்களில் பெருமழையாய் பொழிந்தன. அவற்றால் அந்த உள்ளங்கள் உயிர்பெற்று எழுந்தன. காணாமல்போன பிரியத்திற்குரிய பொருள் கிடைத்ததுபோன்று…

இறைவனுக்குச் செய்யும் உதவி

"நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் உங்களுக்கு உதவி செய்வான்." (47:7) அல்லாஹ் தேவையற்றவன். அவனுக்கு யாரும் உதவி செய்ய முடியாது. இங்கு அல்லாஹ்வுக்கு உதவி செய்தல் என்பது அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உதவி செய்வதாகும். அவனுடைய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக நீங்கள்…

அடிமைத்தனத்திலிருந்து மீளும் வழிமுறை

ஒரு மனிதன் தொடர்ந்து தவறுகளில், பிறழ்வுகளில் ஈடுபடும்போது ஒரு கட்டத்தில் அவற்றுக்கு அடிமையாக மாறி விடுகிறான். அவை அவனுடைய இயல்பான, அன்றாட செயல்பாடுகளாக மாறிவிடுகின்றன. அவை தன் வாழ்க்கையை அழிக்கும் தவறான செயல்பாடுகள், பிறழ்வுகள் என்பதை அவனால் உணர முடியுமா? நிச்சயம்…

ஒரு நினைவலை

நான் அவரை சந்தித்து பதினைந்து வருடங்களாவது இருக்கும். தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பு அது. நான் வழக்கமாக அமரும் இடத்திற்கு அருகே வந்து அவரும் அமர்ந்தபோது அந்த சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் என்று நான்…