முழுமையான ஆரோக்கியம்

ஆரோக்கியம் அளப்பரிய அருட்கொடை என்பதை அதை இழந்த பிறகுதான் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம். அறபு மொழியில் ஆஃபியா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அது எல்லா வகையான ஆரோக்கியத்தையும் குறிக்கும் ஒரு செறிவான வார்த்தை. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், அடிப்படையான உலகியல்…

மனம் காயமடைவது

உடல் காயமடைவது போன்று மனமும் காயமடைகிறது. உடலில் ஏற்படும் காயம் வெளியில் தெரியக்கூடியதாக இருப்பதால் அதனை எளிதாக நாம் புரிந்து கொள்கின்றோம். காயமுற்றவர்களை நாம் பரிவோடு நடத்துகின்றோம். அவர்களை மற்ற மனிதர்களைப் போன்று கருதுவதில்லை. ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை நாம் அவ்வாறு…

குர்ஆனை எப்படி அணுக வேண்டும்?

மற்ற புத்தகங்களை வாசிப்பதைப் போல நாம் குர்ஆனை வாசிக்கக்கூடாது. அது ஒரே நேரத்தில் முழுமையாக வாசித்து முடிக்க வேண்டிய ஒரு புத்தகம் அல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கப்பட வேண்டும். அது தாகத்திற்கேற்ப மிடறு மிடறாக அருந்தப்பட வேண்டும். அது அதற்கே…

மனித அறிவு திகைத்து நிற்கும் பகுதி

“இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்தவொரு அறுதியான முடிவையும் நாங்கள் முன்வைப்பதில்லை. எங்களின் ஆன்மீகப் பாதையில் ஒவ்வொருவரும் அவர்களின் முயற்சிகளுக்கேற்ப வெவ்வேறான நிலைகளை அடையலாம். எங்களுக்கிடையே காணப்படும் தேடல் மட்டுமே பொதுவானது.” இது தம்மை துறவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் கூறியது.…

தேவையும் சார்பு வாழ்க்கையும்

“ஒரு மனிதன் எந்த அளவு மக்களிடம் தேவையற்றிருப்பானோ அந்த அளவு அவன் அவர்களிடம் கண்ணியம் வாய்ந்தவனாக இருப்பான்” என்ற நபிமொழியை நண்பர் ஒருவரிடம் கூறினேன். ஆனால் இந்த விசயத்தில் கூடுதலாக புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு அம்சமும் இருக்கிறது. முடிந்த மட்டும் பிறரிடம்…

ஸலஃபி தஃவா – 1

ஒரு தவ்ஹீத் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கின்ற ஒருவரிடம் கேட்டேன், “நீங்கள் ஏன் முன்னர் கூறியதுபோன்று குர்ஆன், சுன்னாவே போதும் என்ற வாதத்தை முன்வைப்பதில்லை? ஏன் இப்போது ஸலஃபி வாதத்தை முன்வைக்கிறீர்கள்?” அவர் கூறினார்: அந்த வாதம் மக்களை வெகுதூரம் அழைத்துச்…

வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கும் இழிபிறவிகள்

இஸ்லாம் குறித்து ஆட்சேபனைகளை முன்வைப்பவர்கள் பல வகையினர். ஒரு வகையினர், உண்மையிலேயே சந்தேகத்தில் உழல்பவர்கள். அவர்கள் அந்த ஆட்சேபனைகளுக்கு தங்களின் மனம் திருப்தியுறும் பதில்களை விரும்புகிறார்கள். அவர்கள் பொருட்படுத்தத்தகுந்தவர்கள். நாம் அவர்களைப் பொருட்படுத்தவில்லையெனில் அவர்கள் நம்மைவிட்டு விலகிச் செல்லக்கூடும். இன்னொரு வகையினர்,…

இஸ்லாம் என்பது

மார்க்கம் என்பது ஒரு வழிமுறை. அது எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறது. இங்கு பல வகையான மார்க்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இயல்புக்கு உகந்த, தாங்கள் சரியெனக் கருதும் ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் எந்த மார்க்கத்தையும் பின்பற்றாமல் கட்டுப்பாடுகள்…

ஒளியின் மீது ஒளி

மனதில் பயம் தொற்றிக் கொண்டால் வாழ்க்கை நரகமாகி விடும். உறுதியான நம்பிக்கையைக் கொண்டே அந்த பயத்தை நீக்க முடியும். அது நம்மைப் படைத்துப் பராமரிக்கும் பேரிறைவனின் மீதான உறுதியான நம்பிக்கை. அவன் நம்மைக் கைவிட மாட்டான் என்னும் வலுவான நம்பிக்கை.  …

புரிந்து கொள்ள முடியாத நிகழ்வுகள்

அந்த இடம் எனக்கு சொர்க்கமாகத் தெரிந்தது. அந்த இடத்தை சொர்க்கம் என்றுதான் நினைத்தேன். அந்த இடத்தின் அமைதி மனதில் அபூர்வமான உணர்வையும் அமைதியையும் ஏற்படுத்தியது. எனக்காகவே அந்த இடம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைத்தேன். வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத அற்புதமான அனுபவம் அது. அந்த…