நோன்பும் திருக்குர்ஆனும்

அடுத்து இடம்பெறும் கட்டளை ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது தொடர்பானதாகும். அந்த மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்படத் தொடங்கியது என்பதனால் அந்த மகத்தான அருட்கொடைக்கு நன்றி செலுத்தும்பொருட்டு அந்த மாதத்தில் நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இந்தக் கட்டளைக்குப் பின்னால் இருக்கும் நோக்கமும்…

உயிருக்கும் செல்வத்திற்குமான பாதுகாப்பு

அடுத்து வரும் கட்டளைகள் தனி மனித வாழ்விலும் சமூகத்திலும் தக்வாவை நிலைநிறுத்தக்கூடியவை. தக்வாவின்மூலமே மனிதர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்தும் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் சிக்கல்களிலிருந்தும் தப்பிக்க முடியும். ஒரு சமூகம் சிறந்த சமூகமாக இருக்க வேண்டும் எனில் அந்த சமூகத்தினருக்கு…

மார்க்கம் என்பது

யூதர்களும் கிருஸ்தவர்களும் வெறும் சடங்குகளை, வீணான தர்க்கங்களை மார்க்கம் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுவல்ல மார்க்கம். அடுத்து வரக்கூடிய வசனம் மார்க்கத்தின் அசலான ஆன்மாவைத் தெளிவுபடுத்துகிறது. குறைவான வார்த்தைகளில் மார்க்கத்தின் அசலான தன்மைகள் அனைத்தும் தெளிவுபடுத்தப்படுகின்றன.    لَيْسَ الْبِرَّ أَنْ…

உண்மையை மறைப்பவர்கள்

எதையும் சிந்திக்காமல் குருட்டுத்தனமாகப் பின்பற்றும் நிராகரிப்பாளர்கள் இடையன்களால் ஓட்டிச் செல்லப்படும் ஆட்டு மந்தைகளைப் போன்று தங்களின் தலைவர்களால் வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அவர்களைப் போன்று இருக்காதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடைகளின் விசயத்தில் நீங்கள் நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ்…

தங்களின் அறிவைப் பயன்படுத்தாதவர்கள்

தெளிவான இந்த சான்றுகளைக் காணாதவர்கள், இந்த சான்றுகளுக்குப் பின்னால் இருக்கும் பேராற்றலும் பெரும் கருணையும் கொண்ட இறைவனை உணராதவர்கள் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஏற்படுத்துகிறார்கள். அவனை நேசிப்பதுபோன்று மற்றவர்களையும் நேசிக்கிறார்கள். அவனுக்கு மட்டுமே உரிய பண்புகளை மற்றவர்களுக்கும் கொடுக்கிறார்கள். அவர்கள் அவனை…

பெரும் சான்றுகள்

அவர்கள் ஏன் தாங்கள் அறிந்துகொண்ட உண்மையை மறைக்கிறார்கள்? அல்லாஹ்வின் விசயத்தில் அவர்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டம் சரியானதல்ல. அதுதான் அவர்களின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களும் தங்களுக்குப் பயனளிக்கவோ தீங்களிக்கவோ முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் அவனை விடுத்து தங்களின்…

வேதத்தின் ஞானங்களை மறைப்பது

அடுத்து வரும் வசனம் ஸஃபா, மர்வா மலைக் குன்றுகளுக்கு மத்தியில் மெதுவாக ஓடுவதைக்(சயீ செய்வதை) குறித்துப் பேசுகிறது. வெளிப்படையாகப் பார்க்கும்போது இந்த வசனம் மையக் கருத்தை விட்டு விலகியதாக, ஓர் இடையீடாகத் தோன்றும். கொஞ்சம் கவனித்துப் பார்க்கும்போது மையக்கருத்துடன் நெருக்கமாகத் தொடர்பு…

இழப்புகளை, சிரமங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

முஸ்லிம் சமூகத்திற்கு மனித சமூகத்தை வழிநடத்தும் பெரும் பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு அது அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் பாதையில் வரக்கூடிய சவால்களை, சிரமங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது கற்றுக் கொடுக்கப்படுகிறது. கிப்லா மாற்றத்திற்குப் பிறகுதான் பத்ருப்போர் நிகழ்ந்தது. பத்ருப்போர் நிகழும்…

மகத்தான அருட்கொடை

உண்மையை அறிந்து கொண்டே அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்றால் அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் அப்படித்தான். அவர்களுடன் தர்க்கம் செய்யாதீர்கள். அவர்களுக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை இருக்கிறது. அதில்தான் அவர்கள் செல்வார்கள். நீங்கள் செய்ய வேண்டியது நற்செயல்களில் போட்டி போட்டுக்…

கிப்லா மாற்றமும் பெரும் பொறுப்பும்

சாட்சியம் கூற மறுக்கும், தாங்கள் அறிந்தவற்றுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கும் யூதர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுவதோடு முதல் பாகம் நிறைவடைகிறது. அடுத்து வரும் வசனங்கள் மனிதர்களுக்கு வழிகாட்டும் தலைமைத்துவ பொறுப்பிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டு அந்த பொறுப்பு முஸ்லிம்களின் வசம் ஒப்படைக்கப்படுவதையும் அந்த…