முறியடிக்க முடியாத சவால்

இஸ்லாத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்பிக்கையாளர்கள், அந்த அழைப்பை ஏற்க மறுத்த மூர்க்கமான நிராகரிப்பாளர்கள், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் வெளிப்படையாக நிராகரிக்கவும் முடியாமல் தடுமாற்றமான நிலையில் இருந்த நிராகரிப்பாளர்கள் என மூன்று தரப்பினரையும் அடையாளப்படுத்திய பிறகு அவர்களும் ஏனைய இணைவைப்பாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே…

குழப்பம் விளைவிப்பவர்கள்

நிராகரிப்பாளர்களில் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை மூர்க்கமான நிராகரிப்பாளர்களாகக் காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இரண்டுக்கும் மத்தியிலான ஒரு நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருப்பார்கள். அதுதான் புத்திசாலித்தனம் என்றும் அதுதான் இணக்கத்திற்கான வழி என்றும் அவர்கள் கூறுவார்கள். இப்படிப்பட்ட…

சீல் வைக்கப்படும் உள்ளம்

நம்பிக்கையாளர்களின் பண்புகள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு எதிர் திசையில் இருக்கும் நிராகரிப்பாளர்கள் குறித்து தெளிவுபடுத்தப்படுகிறது. அவர்கள் ஏன் நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்கள்? அவர்களின் விசயத்தில் செயல்படும் இறைநியதி என்ன? அடுத்த இரு வசனங்கள் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கின்றன.   إِنَّ الَّذِينَ…

குர்ஆன் யாருக்கு வழிகாட்டும்?

அல்பகரா அல்பகரா என்றால் பசுமாடு என்று பொருள். இந்த அத்தியாயத்தில் இஸ்ரவேல் சமூகத்தில் நிகழ்ந்த பசுமாட்டைக் குறித்த ஒரு சம்பவம் இடம்பெறுகிறது.  அந்தச் சம்பவம் அத்தியாயத்தின் மையக்கருத்துகளைத் தெளிவுபடுத்துவதால் அதற்கு இந்தப் பெயர் இடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது மதீனாவில்…

அல்ஃபாத்திஹா (ஆரம்பம்)

மக்காவில் அருளப்பட்ட ஏழு வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்திற்கு ‘அல்ஃபாத்திஹா’ என்று பெயர். அல்ஃபாத்திஹா என்றால் ஆரம்பம் என்று பொருள். திருக்குர்ஆனின் ஆரம்பமாக இந்த அத்தியாயம் இடம்பெற்றிருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். திருக்குர்ஆனுக்கு ஒரு முன்னுரைபோல இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது.…

தஃப்ஸீர் நூல்களும் நாமும்

திருக்குர்ஆனுக்கு எழுதப்பட்ட விரிவுரை நூல்கள் மரபு வழியாக நமக்குக் கிடைத்த அறிவுச் சொத்துகள் ஆகும். திருக்குர்ஆனுக்கு தொடர்ந்து விரிவுரைகள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. முதல் தலைமுறை தொடங்கி ஒவ்வொரு தலைமுறையிலும் குர்ஆன் விரிவுரையாளர்கள் காணப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தற்காலத்திலும் குறிப்பிடத்தகுந்த அளவு…

குர்ஆனை எப்படி அணுக வேண்டும்?

மற்ற புத்தகங்களை வாசிப்பதைப் போல நாம் குர்ஆனை வாசிக்கக்கூடாது. அது ஒரே நேரத்தில் முழுமையாக வாசித்து முடிக்க வேண்டிய ஒரு புத்தகம் அல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கப்பட வேண்டும். அது தாகத்திற்கேற்ப மிடறு மிடறாக அருந்தப்பட வேண்டும். அது அதற்கே…

இலாபகரமான வாழ்க்கை

இந்தக் காலகட்டம் இடையூறுகளால், நம்மை மூழ்கடிக்கும் விசயங்களால் ஆனது. கொஞ்சம் அசந்தால் நாம் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகி அதுவே நம் வாழ்க்கை என எண்ண ஆரம்பித்து விடுவோம். நமக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாளை வீணடித்து விடுவோம். இந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை மனிதனை…

குர்ஆனின் வசீகரம்

திருக்குர்ஆனுக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது. அதன் ஓலிகூட நம்மை கவர்ந்திழுக்கும். அதற்கு நம்முடைய மனதில் ஒரு வகையான அமைதியை ஏற்படுத்தும் வலிமை இருக்கிறது. முதன் முதலாக நான் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்பட்டது அதன் கிராஅத்தை கேட்டதன் வழியாகத்தான். அந்தச் சமயத்தில் எங்கள்…