மனக்கட்டுப்பாடும் மனத்தூய்மையும்

நாம் மனதின் இச்சைகளுக்கு எப்போது கட்டுப்படுகின்றோம்? மனம் பலவீனமடைந்திருக்கும்போது மனதின் இச்சைகளுக்கு எளிதாக கட்டுப்பட்டு விடுகிறோம். அந்தச் சமயத்தில் இச்சைகளுக்குக் கட்டுப்படுவது ஏதோ ஒரு வகையான விடுதலைபோல தெரிகிறது. ஆகவே எளிதில் வீழ்ந்து விடுகின்றோம். மதுவுக்கும் விபச்சாரத்திற்கும் அடிமையானவர்களைப் பாருங்கள். அவர்களின்…

உயிரோட்டமான தொழுகை

நம்பிக்கையாளனுக்கு தொழுகை உடலின் இதயத்தைப் போல மிக அவசியமான ஒன்றாகும். இதயத்தில் ஏற்படும் பாதிப்பு எப்படி உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துமோ அப்படித்தான் தொழுகையில் ஏற்படும் குறைபாடும் அலட்சியமும் அவனுடைய வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். தொழுகையை விடுபவன் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை…

உள்ளத்தின் மொழி

உள்ளத்தின் மொழி என்று ஒன்று இருக்கிறதா? ஒரு உள்ளம் இன்னொரு உள்ளத்தில் உள்ளதை அறிந்துகொள்ள முடியுமா? எவ்வித வெளிப்படையான தொடர்பும் இன்றி அவை இணைந்துகொள்ள முடியுமா? நிச்சயமாக அப்படியொரு மொழி இருக்கிறது. ஆனால் ஒத்திசைவான, பிரியம்கொண்ட உள்ளங்களுக்கு மத்தியில் மட்டுமே அது…

தனித்திருத்தல்

உங்களால் தனித்திருக்க முடிகிறதா? யாருடனும் எந்தவொன்றுடனும் அல்லாமல் உங்களுடன் மட்டும் உங்களால் தனித்திருக்க முடிகிறதா? அப்படி உங்களால் தனித்திருக்க முடிந்தால் நீங்கள் இயல்பு நிலையில் இருக்கிறீர்கள், உங்கள் மனம் பாதிக்கப்படாமல் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் பலரும் தனித்திருத்தலை அஞ்சுகிறார்கள்.…

பிரபல்யம் என்னும் போதை

பிரபல்யம் சில உலகியல் இலாபங்களைக் கொண்டு வந்தாலும் அது ஒரு வகையில் துன்பம் தரக்கூடியது. அது இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடியது; அதீத சுயமோகத்தை உருவாக்கக்கூடியது. அதீத சுயமோகம் ஆளுமையைச் சிதைத்துவிடக்கூடிய அளவுக்கு கொடியது. அதுவும் கர்வம் உண்டாக்கும், அறிவை மழுங்கடிக்கச் செய்யும்…

நோன்பின் மகிழ்ச்சி

நோன்பாளி இரண்டு சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியடைகிறார். ஒன்று நோன்பு துறக்கும் சமயத்தில். மற்றொன்று தம் இறைவனைக் காணும் சந்தர்ப்பத்தில். இது நபியவர்கள் கூறியது. உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது, நோன்பு முடிகிறது என்பதை எண்ணும்போது; இனி உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டியதில்லை என்பதை எண்ணும்போது.…

உடையும் பிம்பம்

ஒருவரைக் குறித்து என்னுள் இருக்கும் இருக்கும் பிம்பம் திடீரென அவரிடமிருந்து வெளிப்படும் ஒரு செயலால், அவரைக் குறித்து கேள்விப்படும் ஒரு செய்தியால் உடைந்துவிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனை எப்படி அணுகுவது? இங்கு நாம் ஒரு விசயத்தை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மனிதர்கள்…

குர்ஆன் வாசிப்பு

இரண்டு வகை வாசிப்பு இருக்கிறது. ஒன்று, மேலோட்டமான வாசிப்பு. இன்னொன்று ஆழமான வாசிப்பு. மேலோட்டமான வாசிப்பு என்பது மிக வேகமாக வாசித்துக் கொண்டே செல்வதும் வாசித்தவற்றை அசைபோடாமல் இருப்பதும் ஆகும். ஆழமான வாசிப்பு என்பது நிறுத்தி நிதானமாக வாசிப்பதும் வாசித்தவற்றை அசைபோடுவதும்…

அறிவுரை

எந்தவொரு அறிவுரையும் சொல்லப்படாமல் இல்லை. அத்தனை அறிவுரைகளும் மனிதர்களால் சொல்லப்பட்டு விட்டன, தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. ஆனாலும்  சிலரிடமிருந்து அவை வெளிப்படும்போது நம்மை ஈர்க்கின்றன. அவற்றால் நாம் கவரப்படுகிறோம். அவை நமக்குப் புதியவையாகத் தெரிகின்றன. அவை பின்பற்றப்பட வேண்டியவை என்று…

சமநிலைக்குலைவு

பெரும் பெரும் துன்பங்களை எல்லாம் எளிதாகக் கடந்தவர் அவர். அவரது மனதில் இருந்த வெறி தடைகள் எல்லாவற்றையும் துச்சமென நினைத்து அவரைக் கடக்க வைத்தது. அவர் அடைய நினைத்த எல்லையை ஓரளவுக்கு அடைந்து விட்டார். மனதில் முன்னர் இருந்த விடாப்படியான ஆசை…