ஆதிக்க வெறியும் கர்வமும்

மனிதர்களுக்கு தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. செல்வம், அறிவு, பதவி, அதிகாரம், மதம், சாதி, குலம் என எதையாவது அவர்கள் அதற்குப் பயன்படுத்தவே செய்கிறார்கள். இவையனைத்துக்கும் பின்னால் ஒளிந்திருப்பது தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆதிக்க வெறியே.…

வாழ்வது போன்று நடிப்பது

அதிகம் காட்டிக் கொள்பவர்கள் ஏன் அதற்கு மாறாக இருக்கிறார்கள்? அவர்கள் உணரும் தனிமைதான் அவர்களை அதிகம் காட்டிக் கொள்ளத் தூண்டுகிறதா? தங்களை மகிழ்ச்சியானவர்களாக காட்டிக் கொள்ளும் தம்பதியினர் உண்மையில் அதற்கு மாறானவர்களாக இருக்கிறார்களே! அது ஏன்? சமூக ஊடகங்களில், பொதுத் தளங்களில்…

தெளிவும் உறுதியும்

ஒரு விசயத்தை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள் எனில் அதனை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் உறுதியான, தெளிவான குரலில் உங்களால் முன்வைக்க முடிந்தால் அது உங்களைச் சுற்றியுள்ளவர்களிடத்திலும் மற்றவர்களிடத்திலும் தன்னியல்பாகச் சென்றடைந்து விடும். உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தை உள்ளங்களைச் சென்றடையும் என்பது இங்கு…

மௌனத்தின் மொழி

“பேசினால் நல்லதையே பேசுங்கள். இல்லையெனில் மௌனமாக இருங்கள்.” (நபிமொழி) நல்லதையே பேச வேண்டும். நல்லதைப் பேச முடியவில்லை எனில் மௌனமாக இருக்க வேண்டும். இங்கு மௌனம் வலியுறுத்தப்பட்டதல்ல. உங்களால் நல்லதைப் பேச முடியவில்லை எனில் மௌனமாக இருங்கள் என்றே சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாம்…

நம்பிக்கையாளர்களும் உலகியல்வாதிகளும்

நம்பிக்கையாளர்கள் ஒரு விசயத்தை அணுகும் விதத்திற்கும் உலகியல்வாதிகள் ஒரு விசயத்தை அணுகும் விதத்திற்கும் மத்தியில் மிகப் பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது. ஏனெனில் மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் குறித்து இருவரும் வெவ்வேறான கண்ணோட்டங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் மனித அறிவின், ஆற்றலின்…

இன்னொரு முகம்

மனிதனால் சட்டென எப்படி இன்னொரு முகத்திற்கு மாறிவிட முடிகிறது என்பது ஆச்சரியமான ஒன்றுதான். நாம் ஒரு மனிதனைக் குறித்து அவனுடைய கடந்த கால நம்முடைய நட்பின், பழக்கத்தின் அடிப்படையில், அவனைக் குறித்து நாம் அடைந்த புரிதலின் அடிப்படையில் ஒரு பிம்பத்தை உருவாக்கி…

விசாலமும் சுருக்கமும்

“உம் இறைவன் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். அவன் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் எல்லாவற்றையும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (17:30) இப்போதெல்லாம் என்னைச் சுற்றி வாழ்பவர்களை, அவர்கள் அடையும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கிறேன். எந்தவொருவரையும்…

கண்ணோட்டங்கள்

ஒருவர் எப்படிப்பட்டவரோ அதற்கேற்ப அவருக்கான நண்பர்கள் அமைந்து விடுவார்கள் அல்லது அவர் அதற்கேற்ப தமக்கான நண்பர்களை அமைத்துக் கொள்வார். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் மனதளவில் நட்பு கொள்கிறான் எனில் இருவரையும் இணைக்கக்கூடிய பொதுவான ஓர் அம்சம் இருக்கிறது என்று பொருள்.…

சுமூகமான குடும்ப வாழ்வு

குடும்ப வாழ்வு சுமூகமாகச் செல்வதற்குப் பின்னால் நேரடியான அல்லது மறைமுகமான சர்வாதிகாரமும் நிர்ப்பந்தமும் இருக்கின்றன. இரு சமமான மனிதர்கள் நீண்ட நாட்கள் ஒன்றுசேர்ந்து இருக்க முடியாது. இருவரிடமும் காணப்படும் கூர்மையான ஈகோ அவர்களைப் பிரித்து விடும். ஆனாலும் அவர்கள் ஓர் இடைவெளியோடு…

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை நீடிப்பது வெறுமனே அன்பின் அடிப்படையில் அல்ல. அன்பு ஆரம்ப நிலைக் காரணியாக இருக்கலாம். பெரும்பாலும் அது ஆரம்ப நிலைக் காரணியாக மட்டுமே இருக்கும். அன்பு ஒரே நிலையில் அப்படியே நீடிக்கக்கூடியது அல்ல. அது தற்காலிகமானது; மாறக்கூடியது; இடம்பெயரக்கூடியது. வெறுமனே…