
யூதர்களிடம் பெறப்பட்ட உறுதிமொழிகள்
யூதர்களுக்கு நபியவர்களின் தூதுத்துவத்தை நம்பி இஸ்லாத்தை ஏற்பதற்கு தடையாக இருந்தது அவர்களின் உயர்வு மனப்பான்மைதான். தங்களின் இனம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும் தங்கள் இனத்தில் அவனுடைய தூதர்கள் அதிக அளவில் வந்திருக்கிறார்கள் என்றும் தங்களுக்கு வெளியிலிருந்து வேறு ஒரு தூதுத்துவமோ தூதரோ தேவையில்லை என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.









