குர்ஆன் துளிகள்

தேக்கி வைக்கப்படும் குரோதம்

நமக்கு மேல் இருப்பவர்களிடம் நாம் கோபம் கொள்வதில்லை. கோபத்தை வெளிப்படுத்த முடியாத இடங்களில் நாம் கோபம் கொள்வதில்லை. ஆனாலும் மனதில் ஒரு வெறுப்பை தேக்கி வைக்கிறோம். அது குரோதமாக மாறுகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது அந்தக் குரோதம் நம்மையும் மீறி வெளிப்பட்டு விடுகிறது. கோபத்தை வெளிப்படுத்த முடியுமான இடங்களில் கோபத்தை

மனிதர்கள் பாவம் செய்யக்கூடியவர்களா?

மனிதர்கள் எளிதாக பாவங்களில் விழுந்து விடுகிறார்கள். அதனால்தான் அல்லாஹ் பாவமன்னிப்பின் வாசலை எப்போதும் திறந்தே வைத்திருக்கிறான். தாங்கள் செய்த பாவத்தை பாவம் என ஒத்துக் கொண்டு அதற்காக மனம் வருந்தி அவர்கள் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுகிறான். பாவம் செய்வது எளிதாக இருப்பதுபோல பாவமன்னிப்புக்

தஃப்ஸீர் நூல்களும் நாமும்

திருக்குர்ஆனுக்கு எழுதப்பட்ட விரிவுரை நூல்கள் மரபு வழியாக நமக்குக் கிடைத்த அறிவுச் சொத்துகள் ஆகும். திருக்குர்ஆனுக்கு தொடர்ந்து விரிவுரைகள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. முதல் தலைமுறை தொடங்கி ஒவ்வொரு தலைமுறையிலும் குர்ஆன் விரிவுரையாளர்கள் காணப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தற்காலத்திலும் குறிப்பிடத்தகுந்த அளவு தஃப்ஸீர்கள் எழுதப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்தப் பணி

ததப்புர் என்னும் செயல்பாடு – 2

அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் மத்தியில் இணைப்புப் பாலமாக இருப்பது திருக்குர்ஆன்தான். அதன் வழியாகவே அல்லாஹ் தன் அடியார்களுடன் உரையாடுகிறான். அவன் நேரடியாக அவர்களுடன் உரையாடுவதில்லை. மனிதர்கள் தங்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை திருக்குர்ஆனிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். நாம் தேடுவதை திருக்குர்ஆனில் பெற்றுக் கொள்ள முடியும்.   திருக்குர்ஆனின் வசனங்களை வாசிப்பது

ததப்புர் என்னும் செயல்பாடு -1

كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِه وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ “அருள்வளமிக்க இந்த வேதத்தை உமக்கு நாம் அருளியுள்ளோம், அவர்கள் இதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துவதற்காகவும் அறிவுடையோர் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்.” (38:29 ) இந்த வசனம் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.

முரண்பாடுகள் அற்ற வேதம்

أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا “அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா? அது அல்லாஹ் அல்லாத வேறு யாரிடமிருந்தாவது வந்திருந்தால் அதில் அவர்கள் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.”  (4:82) முரண்படுதல் மனித இயல்பு. மனிதர்கள்

யூதர்களின் வாழ்க்கையிலிருந்து இரண்டு சம்பவங்கள்

திருமணம், தலாக் போன்ற குடும்பவியல் விவகாரங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அத்தியாயம் மீண்டும் சமூகவியல் விவகாரங்களை நோக்கித் திரும்புகிறது. இந்த விவகாரங்கள் பேசப்படுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல், அவன் பாதையில் செலவு செய்தல் தொடர்பாகத்தான் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. இடையில் அவசியமான ஒரு விசயத்தை தெளிவுபடுத்த நேரிட்டால் அது தொடர்பான

இயக்கத்தைக் கட்டமைத்தல் – 3

இஸ்லாமிய அழைப்பியலின் பாதை எளிதானது அல்ல. மனிதர்கள் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பாதையில் சென்றுவிட முடியாது. மனக்கட்டுப்பாடு அற்றவர்கள் அந்தப் பாதையில் நீடிக்க முடியாது. உண்மையில் அது அல்லாஹ் அளிக்கும் பெரும் பாக்கியம். அந்த பாக்கியத்தைப் பெறுவதற்கு முன்னர் அவர்கள் சோதனைகளைக் கடக்க வேண்டும். சோதனைகளை வெற்றிகரமாக கடந்தவர்கள்

இயக்கத்தைக் கட்டமைத்தல் – 2

இஸ்லாமிய அழைப்பியல் என்பது ஒரு மறைமுக அதிகாரமும்கூட. மக்கள் அழைப்பாளர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை நம்புகிறார்கள். அவர்களிடம் இஸ்லாம் என்ற அளவுகோல் இருக்கிறது. அதன்படி அவர்கள் நடப்பார்கள் என்று அவர்கள் கருதுவதால் அவர்களை நம்புகிறார்கள். சிலர் அவர்களின் பணிக்கு நிதியுதவி செய்கிறார்கள். சிலர் அவர்களுக்குச் சேவகம் செய்கிறார்கள். சிலர்

நன்றியும் நன்றிகெட்டத்தனமும்

உங்களிடம் நன்றி செலுத்தும் பண்பு இருக்கிறது எனில் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.  உங்களிடம் இருப்பவை பாதுகாக்கப்படும். எதிர்பாரா புறத்திலிருந்து நீங்கள் உதவி செய்யப்படுவீர்கள். நான் கூறுவது படைத்த இறைவன் உங்களுக்கு அளித்த அருட்கொடையை உணர்ந்து நன்றி செலுத்தும் பண்பு. அதுதான் முதன்மையானது. மற்றவை அதற்குப் பின்னால்

தொழுகையின் முக்கியத்துவம்

தலாக் சொல்லப்பட்ட பெண்கள் தொடர்பாக பேசப்பட்டு வரும் இந்தச் சூழலில் அடுத்து வரும் சில வசனங்கள் கணவனை இழந்த விதவைப் பெண்களின் காத்திருப்பு காலம் குறித்தும் அவர்களின் மறுமணம் குறித்தும் அது தொடர்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய இங்கிதங்கள் குறித்தும் பேசுகின்றன. அவை குறித்து பேசப்படுவதற்கு உகந்த சூழல் இதுதான்.

இயக்கத்தை கட்டமைத்தல் – 1

ஒருவர் மற்றவருடன் எப்படி இணைகிறார்கள்? ஒருவர் மற்றவரைவிட்டு எப்படி விலகிச் செல்கிறார்கள்? அன்பு ஈர்க்கும். வெறுப்பு விலக்கி வைக்கும். தேவை ஈர்க்கும். தேவையின்மை விலக்கி வைக்கும். ஒத்திசைவு ஈர்க்கும். ஒத்திசைவின்மை விலக்கி வைக்கும். நிர்ப்பந்தமும் சூழலும்கூட இணைப்பையும் விலகலையும் ஏற்படுத்தும். ஆனால் அவை வலுவான, நீடிக்கக்கூடிய காரணிகள் அல்ல.

மிக இலகுவாக

எந்தவொரு பெரும் செயலும் மிக இலகுவாக நிகழ்ந்து விடுகிறது. ஆனால் அது நிகழ்ந்த பிறகுதான் அது இலகுவாக நிகழ்ந்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அது நிகழ்வதற்கு முன்னர்வரை அது கடினமான அல்லது நிகழ்வதற்கு சாத்தியமற்ற ஒன்றாகத்தான் நமக்குத் தெரிந்து கொண்டிருக்கும். ஒவ்வொரும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய

தலாக்கும் அநியாயமும்

அடுத்து வரும் வசனங்கள் தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மீது இழைக்கப்படும் இரண்டு வகையான அநீதியைக் குறித்துப் பேசுகின்றன. உண்மையில் அது ஆண்கள் தங்களுக்கு எதிராகவே செய்து கொள்ளும் அநீதி. அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் அதற்கான விளைவை அனுபவிப்பார்கள்.   وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ

இலக்கை நோக்கிய பாதை

அதிகப்படியான செய்திகள் நம்மை பெரும் குழப்பத்திலும் கடும் மனச்சோர்விலும் ஆழ்த்தும். எந்த அளவு நாம் நம்முடைய வாழ்க்கையை சிறியதாக அமைத்துக் கொள்கிறோமோ அந்த அளவு நாம் நிம்மதியாக இருக்கலாம். தொடர்ந்து உலகச் செய்திகள் முதற்கொண்டு உள்ளூர் செய்திகள்வரை அறிந்து கொண்டு அலசுபவர்கள் அச்சுறுத்தும் எதிர்மறை மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். ஏனெனில்

தலாக் தொடர்பான சட்டங்கள்

மனைவியுடன் உறவுகொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து விலகியிருப்பது தலாக்கின் ஒரு வடிவமாகவே கருதப்படுகிறது. இந்தச் சூழலில் அடுத்தடுத்த வசனங்கள் தலாக் தொடர்பான சட்டங்களைப் பேசுகின்றன.  وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ