குர்ஆன் துளிகள்

வெற்றியைத் தீர்மானிப்பது எது?

  வெளிப்படையான காரணிகளைக் கொண்டு மாத்திரம் ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க முடியாது. அவற்றுக்கு அப்பால் நாம் அறியாத வேறு  மறைமுகமான காரணிகளும் இருக்கின்றன. அருகில் தென்படுகின்ற வெளிப்படையான காரணிகளைக்கண்டு ஒருவர் அல்லது ஓர் அமைப்பு எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று நாம் எண்ணலாம்.

இலாபகரமான வாழ்க்கை

இந்தக் காலகட்டம் இடையூறுகளால், நம்மை மூழ்கடிக்கும் விசயங்களால் ஆனது. கொஞ்சம் அசந்தால் நாம் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகி அதுவே நம் வாழ்க்கை என எண்ண ஆரம்பித்து விடுவோம். நமக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாளை வீணடித்து விடுவோம். இந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை மனிதனை வெறும் இயந்திரமாக ஆக்கி விடுகிறது. சம்பாதிப்பதும்

குர்ஆனின் வசீகரம்

திருக்குர்ஆனுக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது. அதன் ஓலிகூட நம்மை கவர்ந்திழுக்கும். அதற்கு நம்முடைய மனதில் ஒரு வகையான அமைதியை ஏற்படுத்தும் வலிமை இருக்கிறது. முதன் முதலாக நான் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்பட்டது அதன் கிராஅத்தை கேட்டதன் வழியாகத்தான். அந்தச் சமயத்தில் எங்கள் வீட்டில் ஹுதைஃபியின் கிராஅத்தை உள்ளடக்கி இருந்த

ஈமானும் ஈமானிய அனுபவங்களும்

ஈமான் என்பது வெறும் வார்த்தைகளை சடங்குத்தனமாக உச்சரிப்பதோ குருட்டுத்தனமாகப் பின்பற்றும் நம்பிக்கையோ அல்ல. ஈமான் என்ற வார்த்தைக்கு நம்பிக்கைகொள்வது, ஏற்றுக்கொள்வது என்று பொருள். அது அல்லாஹ்வை அவனுடைய அத்தனை பண்புகளுடனும் முழுமையாக ஏற்றுக் கொள்வது, அவனுடைய விதியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அதில் திருப்தியடைவது. தாய்தந்தையரின் நம்பிக்கையை ஆராயாமல்

மறுமை நாள் நெருங்கி விட்டதா?

“இப்போது நடக்கும் நிகழ்வுகளை, குழப்பங்களை வைத்துப் பார்க்கும்போது மறுமை நாள் நெருங்கி விட்டது என்றே தெரிகிறது. குழப்பங்கள், முன்னறிவிப்புகள் தொடர்பான அறிவிப்புகளும் இதையே உண்மைப்படுத்துகின்றன.” இந்த வாசகம் இப்போது சொல்லப்படுவது மட்டுமல்ல. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழும் நிகழ்வுகளோடு,

போர் தொடர்பான கட்டளை

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ 2:188. “உங்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றவரின் செல்வங்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். மக்களின் செல்வங்களில் ஒரு பகுதியை பாவமான முறையில் உண்பதற்காக அறிந்துகொண்டே அதிகாரிகளை

நோன்பு தொடர்பான சில சந்தேகங்கள்

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ    2:186. “என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நான் மிக அருகில் இருக்கின்றேன்; அழைப்பவரின் அழைப்புக்கு பதிலளிக்கின்றேன், அவர் என்னை அழைக்கும்போது.

நோன்பும் திருக்குர்ஆனும்

அடுத்து இடம்பெறும் கட்டளை ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது தொடர்பானதாகும். அந்த மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்படத் தொடங்கியது என்பதனால் அந்த மகத்தான அருட்கொடைக்கு நன்றி செலுத்தும்பொருட்டு அந்த மாதத்தில் நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இந்தக் கட்டளைக்குப் பின்னால் இருக்கும் நோக்கமும் தக்வாதான். தக்வாதான் குர்ஆனைப் புரிந்து கொள்வதற்கான

உயிருக்கும் செல்வத்திற்குமான பாதுகாப்பு

அடுத்து வரும் கட்டளைகள் தனி மனித வாழ்விலும் சமூகத்திலும் தக்வாவை நிலைநிறுத்தக்கூடியவை. தக்வாவின்மூலமே மனிதர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்தும் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் சிக்கல்களிலிருந்தும் தப்பிக்க முடியும். ஒரு சமூகம் சிறந்த சமூகமாக இருக்க வேண்டும் எனில் அந்த சமூகத்தினருக்கு மத்தியில் அல்லாஹ்வின் மார்க்கம் முன்வைக்கும் ஒழுங்குகள்

மனச்சிக்கல் தொடர்பான ஒரு கேள்வி

நீங்கள் எழுப்பிய இந்தக் கேள்வி மிக முக்கியமானது. பல முறை எனக்கு நானே இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறேன். அணுக்கமான நண்பர்களிடமும் இது குறித்து விவாதித்திருக்கிறேன். நாம் அவர்களோடு கரிசனத்தோடு நடந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக ஆக்கிவிடக்கூடாது. தாங்கள் செய்யும் எல்லா தவறுகளையும் தங்களின் மனச்சிக்கல்

மார்க்கம் என்பது

யூதர்களும் கிருஸ்தவர்களும் வெறும் சடங்குகளை, வீணான தர்க்கங்களை மார்க்கம் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுவல்ல மார்க்கம். அடுத்து வரக்கூடிய வசனம் மார்க்கத்தின் அசலான ஆன்மாவைத் தெளிவுபடுத்துகிறது. குறைவான வார்த்தைகளில் மார்க்கத்தின் அசலான தன்மைகள் அனைத்தும் தெளிவுபடுத்தப்படுகின்றன.    لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ

உண்மையை மறைப்பவர்கள்

எதையும் சிந்திக்காமல் குருட்டுத்தனமாகப் பின்பற்றும் நிராகரிப்பாளர்கள் இடையன்களால் ஓட்டிச் செல்லப்படும் ஆட்டு மந்தைகளைப் போன்று தங்களின் தலைவர்களால் வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அவர்களைப் போன்று இருக்காதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடைகளின் விசயத்தில் நீங்கள் நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குத் தடைசெய்தவற்றை மட்டுமே தடைசெய்யப்பட்டவையாகக் கருதுங்கள்.

ஊசலாட்டங்கள், சந்தேகங்கள்

ஷைத்தான் மனித மனதில் ஊசலாட்டங்களை, சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறான். மனம் பலமாக இருக்கும்போது அவற்றை எளிதாக அடையாளம் கண்டு புறந்தள்ளி விடுகிறது. மனம் பலவீனமாக இருக்கும் சமயத்தில் அது அவற்றை எளிதாக புறந்தள்ள முடிவதில்லை. அது அவற்றைப் பொருட்படுத்துகிறது. நன்றாக தூங்கி எழுந்த பிறகு காலையில் மனம் பலத்தோடும்

தங்களின் அறிவைப் பயன்படுத்தாதவர்கள்

தெளிவான இந்த சான்றுகளைக் காணாதவர்கள், இந்த சான்றுகளுக்குப் பின்னால் இருக்கும் பேராற்றலும் பெரும் கருணையும் கொண்ட இறைவனை உணராதவர்கள் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஏற்படுத்துகிறார்கள். அவனை நேசிப்பதுபோன்று மற்றவர்களையும் நேசிக்கிறார்கள். அவனுக்கு மட்டுமே உரிய பண்புகளை மற்றவர்களுக்கும் கொடுக்கிறார்கள். அவர்கள் அவனை விடுத்து மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். وَمِنَ