அழைப்பியல் களமும் நாம் கவனம் செலுத்த வேண்டிய பகுதியும்

தேவையில்லாத, முக்கியத்துவம் அற்ற செயல்பாடுகளில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொண்டால் தேவையான, முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளை செய்ய முடியாதவர்களாகி விடுவீர்கள் அல்லது அவற்றை சரியான முறையில் நிறைவேற்றாதவர்களாகி விடுவீர்கள். கவனச் சிறதல்கள் மிகுந்த இந்தக் காலகட்டத்தில் மிக அவசியமாக செய்ய வேண்டிய…

திருக்குர்ஆனின் நிழலில்

செய்யத் குதுப் திருக்குர்ஆனின் நிழலில் வாழ்வது அருட்கொடையாகும். அனுபவித்தவரே அதனை அறிந்துகொள்வார். அது வாழ்நாளை அதிகரிக்கச் செய்கின்ற, தூய்மைப்படுத்துகின்ற அருட்கொடை. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. குறிப்பிட்ட காலம்வரை திருக்குர்ஆனின் நிழலில் வாழும் பெரும் பாக்கியத்தை அவன் எனக்கு அருளினான். என் வாழ்வில்…

விசாலமும் சுருக்கமும்

“உம் இறைவன் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். அவன் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் எல்லாவற்றையும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (17:30) இப்போதெல்லாம் என்னைச் சுற்றி வாழ்பவர்களை, அவர்கள் அடையும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கிறேன். எந்தவொருவரையும்…

கண்ணோட்டங்கள்

ஒருவர் எப்படிப்பட்டவரோ அதற்கேற்ப அவருக்கான நண்பர்கள் அமைந்து விடுவார்கள் அல்லது அவர் அதற்கேற்ப தமக்கான நண்பர்களை அமைத்துக் கொள்வார். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் மனதளவில் நட்பு கொள்கிறான் எனில் இருவரையும் இணைக்கக்கூடிய பொதுவான ஓர் அம்சம் இருக்கிறது என்று பொருள்.…

சுமூகமான குடும்ப வாழ்வு

குடும்ப வாழ்வு சுமூகமாகச் செல்வதற்குப் பின்னால் நேரடியான அல்லது மறைமுகமான சர்வாதிகாரமும் நிர்ப்பந்தமும் இருக்கின்றன. இரு சமமான மனிதர்கள் நீண்ட நாட்கள் ஒன்றுசேர்ந்து இருக்க முடியாது. இருவரிடமும் காணப்படும் கூர்மையான ஈகோ அவர்களைப் பிரித்து விடும். ஆனாலும் அவர்கள் ஓர் இடைவெளியோடு…

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை நீடிப்பது வெறுமனே அன்பின் அடிப்படையில் அல்ல. அன்பு ஆரம்ப நிலைக் காரணியாக இருக்கலாம். பெரும்பாலும் அது ஆரம்ப நிலைக் காரணியாக மட்டுமே இருக்கும். அன்பு ஒரே நிலையில் அப்படியே நீடிக்கக்கூடியது அல்ல. அது தற்காலிகமானது; மாறக்கூடியது; இடம்பெயரக்கூடியது. வெறுமனே…

துரோகம்

ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதற்கு ஒருவர் மற்றவருக்கு விசுவாசமாக இருப்பதும் ஒருவர் மற்றவரைச் சார்ந்திருப்பதும் மிகவும் அவசியம். அந்த விசுவாசமே குடும்ப வாழ்வுக்கான அடித்தளம். அப்படியில்லாத பட்சத்தில் ஒருவர் இன்னொருவரைச் சார்ந்திருக்கவில்லையெனில் வேறு ஏதேனும் நிர்ப்பந்தம் இல்லையெனில் அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள்.…

மலட்டு விவாதம்

மலட்டு விவாதம் என்ற தலைப்பில் எகிப்திய எழுத்தாளர் அஹ்மது அமீனின் கட்டுரை ஒன்று இருக்கிறது. தலைப்பே கட்டுரையின் கருவை கச்சிதமாக சொல்லி விடுகிறது. ஒரு விசயத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு, அதன் சாதக, பாதக அம்சங்களை அலசுவதற்கு விவாதங்கள் பயனளிக்கலாம். விவாதத்திற்கான…

காதல் வயப்படுவது…

மனிதர்கள் காதல்வயப்படுவது எதிர்பாராத, அற்புதமான ஒரு நிகழ்வுதான். தான் அனுபவிக்கும் ஆரம்பகட்ட இனிமையை மனிதன் மீண்டும் அனுபவிக்க முடியுமா என்று தெரியவில்லை. அது எல்லாவற்றையும் மறக்கடித்து விடும் உச்சகட்ட போதை. அந்த போதையில் பலர் தங்களின் நெருங்கிய நண்பர்களை, உறவினர்களை இழக்கிறார்கள்.…

அகீதா பிரச்சனை

அகீதா என்றால் கொள்கைசார்ந்த, நம்பிக்கைசார்ந்த விசயங்கள் தொடர்பாக சொல்லப்படும் ஒரு வார்த்தை. இந்த வார்த்தை நபியவர்களின் காலகட்டத்திலோ அவர்களுடைய தோழர்களின் காலகட்டத்திலோ உருவாகி இருக்கவில்லை. இந்த வார்த்தையே பிற்காலத்தில் உருவாகி வந்த அந்நியமான ஒன்றுதான். சரி, இந்த வார்த்தையை நாம் ஏற்றுக்கொள்வோம்.…