மனிதர்கள் பாவம் செய்யக்கூடியவர்களா?

மனிதர்கள் எளிதாக பாவங்களில் விழுந்து விடுகிறார்கள். அதனால்தான் அல்லாஹ் பாவமன்னிப்பின் வாசலை எப்போதும் திறந்தே வைத்திருக்கிறான். தாங்கள் செய்த பாவத்தை பாவம் என ஒத்துக் கொண்டு அதற்காக மனம் வருந்தி அவர்கள் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுகிறான்.…

உளவறிதல்

ஒருவரை எந்த அளவு நெருங்குகிறாமோ அந்த அளவு அவரிடமிருந்து விலகியும் செல்வோம். அதீத நெருக்கம் கொஞ்சம் ஆபத்தானது. ஒருவரை முழுமையாக அறிந்துவிட்டால் அவரிடமிருந்து விலகிவிடுவோம் அல்லது அவர் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுவோம். நாம் அறியாத ஏதோ ஒன்று நம்மை ஈர்க்கிறது.…

நட்பும் உறவும்

நட்பின், உறவின் கடமைகளில் ஒன்று, நண்பரின் மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் பங்குகொள்வது. உங்கள் நண்பர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவரது மகிழ்ச்சியில் பங்குபெறுவது அவரது மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர் துன்பத்தில் இருக்கும்போது அவரது அருகில் இருப்பது, அவருக்கு ஆறுதல் கூறுவது அவரது பாரத்தை ஓரளவு…

புகழ் விருப்பம்

அளவுக்கு மீறி புகழ்தலைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. பெரும்பாலும் அளவுக்கு மீறி புகழ்தலுக்குப் பின்னால் ஏதேனும் உள்நோக்கம் மறைந்திருக்கும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் ஏதேனும் தேவையைப் பெறும் பொருட்டே இவ்வாறான துதிபாடலில் அவன் ஈடுபடுகிறான். பாராட்டுவதை இஸ்லாம் தடுக்கவில்லை. பாராட்டுவது விரும்பத்தக்கது.…

இரண்டு வழிகள்

நமக்கு முன்னால் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று கண்ணியத்தின் வழி. இரண்டு இழிவின் வழி. ஒன்று நேரான வழி. இன்னொன்று தவறான வழி. நேரான வழியில் செல்வது, அதில் நிலைத்திருப்பது ஒரு வகையில் இலகுவானது. இன்னொரு வகையில் கடினமானது. அது இயல்பின்…

நான் எழுதத் தொடங்கியது…

நான் எழுதிய பதிவுகள் மற்றவர்களுக்குப் பயனளிக்கிறதோ இல்லையோ பல சமயங்களில் எனக்குப் பயனளிக்கின்றன. என்னுடைய எழுத்துக்களை டைரி வகையிலான எழுத்தாக மதிப்பிடுகிறேன். என் கண்ணோட்டங்களை, உணர்வுகளை, அவதானிப்புகளை, விமர்சனங்களை, விருப்பங்களை அப்படியே எழுத்தில் முன்வைக்கிறேன். அவற்றில் காணப்படும் தனிப்பட்ட தகவல்களை அகற்றி…

தன்னிறைவு

“அல்லாஹ் உங்களுக்குப் பங்கிட்டதைக் கொண்டு திருப்தியடையுங்கள். மனிதர்களில் தன்னிறைவு பெற்றவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.” இஸ்லாமிய உலகில் மிகவும் புகழ்பெற்ற, வெள்ளிக்கிழமை உரைகளில், அறிவுரைகளில் சொல்லப்படும் இந்த வாசகம் ஒரு நபிமொழியின் சிறிய பகுதி. இந்த வாசகத்தில் இடம்பெற்றுள்ள பங்கீடு என்ற வார்த்தை…

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை

திருக்குர்ஆன் இறைவனின் வேதமாகும். அது இறைவேதம் என்பதற்கு அதுவே சான்றாகவும் இருக்கின்றது. தன்னைப் போன்ற ஒரு வேதத்தை யாராலும் உருவாக்கி விட முடியாது என்று அறுதியிட்டுக் கூறுகிறது. நீங்கள் இந்தக் கூற்றை பொய்யெனக் கூறினால் அப்படியொரு வேதத்தை உருவாக்கிக் காட்டுங்கள் என்று…

பேரறிஞர் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹீ

பெரும்பாலும் நல்ல பாரம்பரியமான குடும்பத்திலிருந்தே சிறந்த ஆளுமைகள் உருவாகி வருகிறார்கள். அன்றாடங்களில் சிக்கி உழல்பவர்களிலிருந்தும், ஒதுக்கப்பட்டவர்களிலிருந்தும் ஆளுமைகள் உருவாகி வருவது மிகவும் அரிது. விதிவிலக்குகள் இருக்கலாம். அன்றாடங்களில் மூழ்கி இருப்பவர்கள் உன்னதமான விசயங்கள் குறித்து சிந்திப்பதற்கு போதுமான நேரத்தையும் வளத்தையும் பெற்றிருக்க…