மனச்சிக்கல் தொடர்பான ஒரு கேள்வி

பல சமயங்களில் நீங்கள் மனச்சிக்கல் கொண்டவர்களை கரிசனத்தோடு அணுக வேண்டும் என்கிறீர்கள்! அப்படிப் பார்த்தால் குற்றவாளிகளும் மனச்சிக்கல் கொண்டவர்கள்தானே? பிறகு அவர்களை எப்படி அணுகுவது? நீங்கள் எழுப்பிய இந்தக் கேள்வி மிக முக்கியமானது. பல முறை எனக்கு நானே இந்தக் கேள்வியை…

ஊசலாட்டங்கள், சந்தேகங்கள்

என் உள்ளத்தில் ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டங்களை நான் எப்படி அறிந்து கொள்வது? அவற்றின் பிடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? ஷைத்தான் மனித மனதில் ஊசலாட்டங்களை, சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறான். மனம் பலமாக இருக்கும்போது அவற்றை எளிதாக அடையாளம் கண்டு புறந்தள்ளி விடுகிறது.…

எத்தனை வகையான உறவுகள்!

ஒவ்வொரு உறவும் நட்பும் அன்பின் அடிப்படையில் அமைய வேண்டியது அல்ல. சில உறவுகள் தேவையின் அடிப்படையிலானது. அங்கு பயன் பெற்று பயனளித்தல் அல்லது வெறுமனே பயனடைதல் இருக்கும். சிலர் வெறுமனே பயனடைதலை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் அவர்களையும் மீறி ஏதோ ஒரு வகையில்…

மனச்சிக்கல் கொண்டவர்களின் புகார்கள்

மனச்சிக்கல் கொண்டவர்களுடன் சேர்ந்திருப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவர்கள் தங்களின் பலவீனங்களை கச்சிதமாக மற்றவர்களின் பலவீனங்களாக முன்வைப்பார்கள். அவர்களால்தான் தாங்கள் இப்படி ஆகிவிட்டோம் என்பார்கள். மற்றவர்களைக் குறித்த அவர்களின் புகார்கள் நீண்டு கொண்டே செல்லும். உலகம் கெட்டு விட்டது, சமூகம் கெட்டு…

கண்ணிருந்தும் குருடன்

“நீ ஒரு விசயத்தை உண்மையிலேயே விரும்பினால் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அதை நோக்கி உன்னை நகர்த்திச் செல்லும்.” இது ரசவாதி என்ற நூலில் இடம்பெறும் வாசகம். இது இந்தப் பிரபஞ்சத்தில் அல்லாஹ் அமைத்த நியதிகளுள் ஒன்று. இந்தப் பிரபஞ்சம் நமக்கு எதுவும் தராது.…

நான் சுயம்பு

“நான் சுயம்பு. எனக்கென எந்த மரபும் ஆசிரியரும் இல்லை” இந்த வாசகத்தை அவர் பெருமிதமாகச் சொன்னாரா அல்லது இயல்பாகச் சொன்னாரா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் இது பெருமிதம்கொள்ளத்தக்க ஒன்று அல்ல; உதிரிகளிடமிருந்து வெளிப்படும் இயல்பான ஒரு சொல்தான்.…

திருக்குர்ஆனின் ஓர் அற்புதம்

திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்களாக இருக்கின்றனவே? இது அதன் குறைபாடுகளில் ஒன்றல்லவா? திருக்குர்ஆனை மேலோட்டமாகப் படித்துப் பார்க்கும்போது அதன் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்களாகத் தெரியும். அதனை முறையாகவும் ஆழ்ந்தும் படிப்பவர்கள் அதன் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்கள் அல்ல…

கடக்க முடியாத கணமா அது?

“அந்த கணத்தை என்னால் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை. வெறுமையும் அழுத்தமும் சலிப்பும் கடந்த உணர்வு அது. அந்த கணத்தில் செத்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. நான் என்ன செய்வது?“ ஏதோ ஒரு வகையில் மன அழுத்தமோ மனச் சிக்கலோ…

ஆன்மாக்களின் உலகம்

“நான் மனிதர்களைப் பார்த்தவுடன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கணித்து விடுவேன்” உங்களின் இந்தக் கணிப்பை பொதுவான ஒன்றாக முன்வைக்க முடியாது. உங்களின் கணிப்பு உங்களுடன் ஒத்திசைந்து செல்பவர் யார், முரண்படுபவர் யார் என்பதை அறிந்துகொள்வதற்கு வேண்டுமானால் உங்களுக்குப் பயன்படலாம். பொதுவாக ஒருவரைப்…

மறைமுக அழுத்தம்

நாம் விரும்பும் விசயத்தை சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக வெளிப்படுத்துவது ஒரு வகை. இது இலகுவானது, சிக்கல் அற்றது, புரிந்து கொள்ளத்தக்கது. இன்னொரு வகை, நாம் விரும்பும் விசயத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டு அதை அவர்கள் நமக்காகச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது. மனிதர்கள்…