தேவையற்ற பயம்

நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருந்து விட்டால் அடுத்து ஒரு துன்பம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. என்னுடைய இந்த பயம் எதிர்மறைச் சிந்தனையின் விளைவா? மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பமும் மாறிமாறி வரக்கூடியவை. மகிழ்ச்சிக்குப் பிறகு துன்பம் வரலாம். துன்பத்திற்குப் பிறகு…

புறக்கணிப்பின் வலி

நெருங்கிய உறவுகளிடமிருந்து உணரும் புறக்கணிப்பின் வலியை எப்படி எதிர்கொள்வது? மனிதர்கள் ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழக்கூடியவர்கள் என்பதை ஒருவர் மற்றவரைச் சுரண்டி வாழக்கூடியவர்கள் என்றும் கூறலாம். இரண்டுக்கும் மத்தியில் சிறிய அளவுதான் வேறுபாடு காணப்படுகிறது. சில சமயங்களில் இரண்டும் ஒன்றுபோலவே தோற்றம்…

கோபத்தைக் கட்டுப்படுத்துவது

நான் அதிகம் கோபம் கொள்கிறேன். அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை என்ன? நண்பர் ஒருவரின் கேள்வி இது. கோபத்திற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. சில தற்காலிகமானவை. சில நிரந்தரமானவை. தற்காலிக காரணங்களினால் உருவாகும் கோபங்களிலிருந்து விடுபடுதல் எளிது. உடனுக்குடன் எதிர்வினை ஆற்றாமல்…

வார்த்தைகள்

வார்த்தைகளுக்குத்தான் எவ்வளவு பலம்! அதுவும் உரியவர்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அசுர பலம் கொண்டவையாக மாறிவிடுகின்றன. பயமும் பதற்றமும் கவலையும் உள்ளத்தின் நோய்கள். அவை உடலில் நோய்களை ஏற்படுத்தும் வலிமையான நோய்கள். நம்பிக்கையூட்டும், ஆறுதலளிக்கும் வார்த்தைகள் பயத்தை, பதற்றத்தை, கவலையைப் போக்கி விடுகின்றன.…

ஞானம் என்பது

கற்றுக் கொடுத்தலும் கற்றலின் ஒரு வகைதான். கற்கும்போது புரியாத சில விசயங்கள் கற்றுக்கொடுக்கும்போது தெளிவாகப் புரிகின்றன. எனக்கு எழுதும்போதும் அப்படித்தான். அதுவரை புரியாத சில விசயங்கள் எனக்கு எழுதும்போது புரிகின்றன. என் எழுத்திலிருந்து வெளிப்பட்டாலும் எனக்கு அது புதிய ஒன்றுதான். மொழிபெயர்த்தல்…

உளவறிதல்

ஒருவரை எந்த அளவு நெருங்குகிறாமோ அந்த அளவு அவரிடமிருந்து விலகியும் செல்வோம். அதீத நெருக்கம் கொஞ்சம் ஆபத்தானது. ஒருவரை முழுமையாக அறிந்துவிட்டால் அவரிடமிருந்து விலகிவிடுவோம் அல்லது அவர் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுவோம். நாம் அறியாத ஏதோ ஒன்று நம்மை ஈர்க்கிறது.…

நட்பும் உறவும்

நட்பின், உறவின் கடமைகளில் ஒன்று, நண்பரின் மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் பங்குகொள்வது. உங்கள் நண்பர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவரது மகிழ்ச்சியில் பங்குபெறுவது அவரது மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர் துன்பத்தில் இருக்கும்போது அவரது அருகில் இருப்பது, அவருக்கு ஆறுதல் கூறுவது அவரது பாரத்தை ஓரளவு…

புகழ் விருப்பம்

அளவுக்கு மீறி புகழ்தலைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. பெரும்பாலும் அளவுக்கு மீறி புகழ்தலுக்குப் பின்னால் ஏதேனும் உள்நோக்கம் மறைந்திருக்கும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் ஏதேனும் தேவையைப் பெறும் பொருட்டே இவ்வாறான துதிபாடலில் அவன் ஈடுபடுகிறான். பாராட்டுவதை இஸ்லாம் தடுக்கவில்லை. பாராட்டுவது விரும்பத்தக்கது.…

இரண்டு வழிகள்

நமக்கு முன்னால் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று கண்ணியத்தின் வழி. இரண்டு இழிவின் வழி. ஒன்று நேரான வழி. இன்னொன்று தவறான வழி. நேரான வழியில் செல்வது, அதில் நிலைத்திருப்பது ஒரு வகையில் இலகுவானது. இன்னொரு வகையில் கடினமானது. அது இயல்பின்…

நான் எழுதத் தொடங்கியது…

நான் எழுதிய பதிவுகள் மற்றவர்களுக்குப் பயனளிக்கிறதோ இல்லையோ பல சமயங்களில் எனக்குப் பயனளிக்கின்றன. என்னுடைய எழுத்துக்களை டைரி வகையிலான எழுத்தாக மதிப்பிடுகிறேன். என் கண்ணோட்டங்களை, உணர்வுகளை, அவதானிப்புகளை, விமர்சனங்களை, விருப்பங்களை அப்படியே எழுத்தில் முன்வைக்கிறேன். அவற்றில் காணப்படும் தனிப்பட்ட தகவல்களை அகற்றி…