வார்த்தைகள்

வார்த்தைகளுக்குத்தான் எவ்வளவு பலம்! அதுவும் உரியவர்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அசுர பலம் கொண்டவையாக மாறிவிடுகின்றன. பயமும் பதற்றமும் கவலையும் உள்ளத்தின் நோய்கள். அவை உடலில் நோய்களை ஏற்படுத்தும் வலிமையான நோய்கள். நம்பிக்கையூட்டும், ஆறுதலளிக்கும் வார்த்தைகள் பயத்தை, பதற்றத்தை, கவலையைப் போக்கி விடுகின்றன.…

ஞானம் என்பது

கற்றுக் கொடுத்தலும் கற்றலின் ஒரு வகைதான். கற்கும்போது புரியாத சில விசயங்கள் கற்றுக்கொடுக்கும்போது தெளிவாகப் புரிகின்றன. எனக்கு எழுதும்போதும் அப்படித்தான். அதுவரை புரியாத சில விசயங்கள் எனக்கு எழுதும்போது புரிகின்றன. என் எழுத்திலிருந்து வெளிப்பட்டாலும் எனக்கு அது புதிய ஒன்றுதான். மொழிபெயர்த்தல்…

உளவறிதல்

ஒருவரை எந்த அளவு நெருங்குகிறாமோ அந்த அளவு அவரிடமிருந்து விலகியும் செல்வோம். அதீத நெருக்கம் கொஞ்சம் ஆபத்தானது. ஒருவரை முழுமையாக அறிந்துவிட்டால் அவரிடமிருந்து விலகிவிடுவோம் அல்லது அவர் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுவோம். நாம் அறியாத ஏதோ ஒன்று நம்மை ஈர்க்கிறது.…

நட்பும் உறவும்

நட்பின், உறவின் கடமைகளில் ஒன்று, நண்பரின் மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் பங்குகொள்வது. உங்கள் நண்பர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவரது மகிழ்ச்சியில் பங்குபெறுவது அவரது மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர் துன்பத்தில் இருக்கும்போது அவரது அருகில் இருப்பது, அவருக்கு ஆறுதல் கூறுவது அவரது பாரத்தை ஓரளவு…

புகழ் விருப்பம்

அளவுக்கு மீறி புகழ்தலைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. பெரும்பாலும் அளவுக்கு மீறி புகழ்தலுக்குப் பின்னால் ஏதேனும் உள்நோக்கம் மறைந்திருக்கும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் ஏதேனும் தேவையைப் பெறும் பொருட்டே இவ்வாறான துதிபாடலில் அவன் ஈடுபடுகிறான். பாராட்டுவதை இஸ்லாம் தடுக்கவில்லை. பாராட்டுவது விரும்பத்தக்கது.…

இரண்டு வழிகள்

நமக்கு முன்னால் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று கண்ணியத்தின் வழி. இரண்டு இழிவின் வழி. ஒன்று நேரான வழி. இன்னொன்று தவறான வழி. நேரான வழியில் செல்வது, அதில் நிலைத்திருப்பது ஒரு வகையில் இலகுவானது. இன்னொரு வகையில் கடினமானது. அது இயல்பின்…

நான் எழுதத் தொடங்கியது…

நான் எழுதிய பதிவுகள் மற்றவர்களுக்குப் பயனளிக்கிறதோ இல்லையோ பல சமயங்களில் எனக்குப் பயனளிக்கின்றன. என்னுடைய எழுத்துக்களை டைரி வகையிலான எழுத்தாக மதிப்பிடுகிறேன். என் கண்ணோட்டங்களை, உணர்வுகளை, அவதானிப்புகளை, விமர்சனங்களை, விருப்பங்களை அப்படியே எழுத்தில் முன்வைக்கிறேன். அவற்றில் காணப்படும் தனிப்பட்ட தகவல்களை அகற்றி…

பேரறிஞர் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹீ

பெரும்பாலும் நல்ல பாரம்பரியமான குடும்பத்திலிருந்தே சிறந்த ஆளுமைகள் உருவாகி வருகிறார்கள். அன்றாடங்களில் சிக்கி உழல்பவர்களிலிருந்தும், ஒதுக்கப்பட்டவர்களிலிருந்தும் ஆளுமைகள் உருவாகி வருவது மிகவும் அரிது. விதிவிலக்குகள் இருக்கலாம். அன்றாடங்களில் மூழ்கி இருப்பவர்கள் உன்னதமான விசயங்கள் குறித்து சிந்திப்பதற்கு போதுமான நேரத்தையும் வளத்தையும் பெற்றிருக்க…

ஈர்ப்பு விதி

ஈர்ப்பு விதி என்கிறார்கள். நாம் விரும்புவது நம்மை வந்தடையும் என்பதுதான் அது. இதை மிகப் பெரிய பிரபஞ்ச இரகசியமாக முன்வைக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் நீங்கள் கேட்பதைக் கொடுக்கும். ஆகவே நீங்கள் விரும்புவதை மட்டும் கேட்டுக் கொண்டேயிருங்கள்.  உலகியல்வாதிகளைப் பொறுத்தவரை, இங்கு செயல்படும்…

ஈர்க்கும் தன்மை

சில மனிதர்களுடன் இருக்கும்போது நாம் அவர்களால் கவரப்படுகிறோம். அவர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்படுகிறோம். அவர்கள் நம்மிடம் எதுவும் கூறாவிட்டாலும் அவர்களின் இருப்புகூட நமக்குள் ஒரு வகையான தாக்கம் செலுத்துகிறது. இது நல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். கெட்ட மனிதர்களுக்கும் பொருந்தும். இரு சாராரிடமிருந்தும் அவர்களுக்கே…