கவலையிலிருந்து விடுபட

“அல்லாஹ்வே! கவலை, துக்கம், இயலாமை, சோம்பேறித்தனம், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மனிதர்களின் ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (புகாரீ)   இதுவும் நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளில் ஒன்றுதான். இந்த பிரார்த்தனையில் கூறப்பட்டுள்ள விசயங்கள் கவனிக்கத்தக்கவை. இவை மனித வாழ்வில்…

பயனற்ற கல்வி

“அல்லாஹ்வே! பயனற்ற கல்வி, உன்னை அஞ்சாத உள்ளம், நிறைவடையாத மனம், ஏற்றுக்கொள்ளப்படாத பிரார்த்தனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (முஸ்லிம்) இதுவும் நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகளில் ஒன்று. இதில் சொல்லப்பட்டுள்ள நான்கு விசயங்களும் நம் வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துபவை.…

திடீர் தண்டனை

“அல்லாஹ்வே! உன் அருட்கொடைகள் அழிவதிலிருந்தும் நீ அளித்த ஆரோக்கியம் மாறுவதிலிருந்தும் திடீரென உன் தண்டனை வருவதிலிருந்தும் உன் கோபங்கள் அனைத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (முஸ்லிம்) இது நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளில் ஒன்று. அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகள் நம்மிடமிருந்து…

பொறுப்புகளும் விதிகளும்

பொறுப்புகளையும் சமூக வாழ்க்கைக்கான விதிகளையும் வெறுப்பவர்கள் வெகு விரைவில் ஏதோ ஒன்றுக்கு அடிமையாக மாறிவிடுகிறார்கள் அல்லது சமூகத்திற்கோ சக மனிதர்களுக்கோ பயனற்ற, தீங்கு விளைவிக்கின்ற சமூக விரோதிகளாக மாறி விடுகிறார்கள். மட்டுமீறிய சுயநலமும் தன்னைக் கட்டுப்படுத்தும் உரிமை யாருக்கும் எதற்கும் இல்லை…

தன்மானமா? செருக்கா?

தன்மானத்திற்கும் செருக்கிற்கும் மத்தியில் சிறிய இடைவெளிதான் உள்ளது. செருக்கை தன்மானம் என எண்ணுவோரும் இருக்கிறார்கள். ஒருவனிடம் இருக்கும் ஏதேனும் ஒரு தனித்தன்மை அவனிடம் செருக்கை உருவாக்கலாம். செல்வம், அதிகாரம், அறிவு, அழகு போன்றவை. செல்வச் செருக்கு, அதிகாரச் செருக்கு எப்படி தவறான…

நயவஞ்சகர்கள்

திருக்குர்ஆன் நயவஞ்சகர்களைக் குறித்து அதிகம் பேசியிருக்கிறது. அவர்களின் அடையாளங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது. சிரமங்களை அவர்கள் எதிர்கொள்ளும்முறை, சமூகத்தின் உறுதியைக் குலைப்பதற்காக அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் முன்வைக்கக்கூடிய சாக்குப்போக்குகள், அவர்களின் செயல்பாடுகள், வழிபாடுகளை அவர்கள் நிறைவேற்றும்…

ஒவ்வொன்றும் சோதனையே

நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகி விடுகிறது; நீங்களே எதிர்பார்க்காத அளவு பெரும் வளர்ச்சியை நீங்கள் பெற்று விடுகிறீர்கள்; உங்கள் மீதான தன்னம்பிக்கை கூடி விடுகிறது; உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கிடைக்காத வசதி வாய்ப்புகளெல்லாம் உங்களுக்கு இலகுவாகக் கிடைத்து விடுகிறது எனில் அது அல்லாஹ் உங்களுக்கு…

இறைவனுக்குச் செய்யும் உதவி

"நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் உங்களுக்கு உதவி செய்வான்." (47:7) அல்லாஹ் தேவையற்றவன். அவனுக்கு யாரும் உதவி செய்ய முடியாது. இங்கு அல்லாஹ்வுக்கு உதவி செய்தல் என்பது அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உதவி செய்வதாகும். அவனுடைய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக நீங்கள்…

அடிமைத்தனத்திலிருந்து மீளும் வழிமுறை

ஒரு மனிதன் தொடர்ந்து தவறுகளில், பிறழ்வுகளில் ஈடுபடும்போது ஒரு கட்டத்தில் அவற்றுக்கு அடிமையாக மாறி விடுகிறான். அவை அவனுடைய இயல்பான, அன்றாட செயல்பாடுகளாக மாறிவிடுகின்றன. அவை தன் வாழ்க்கையை அழிக்கும் தவறான செயல்பாடுகள், பிறழ்வுகள் என்பதை அவனால் உணர முடியுமா? நிச்சயம்…

ஒரு நினைவலை

நான் அவரை சந்தித்து பதினைந்து வருடங்களாவது இருக்கும். தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பு அது. நான் வழக்கமாக அமரும் இடத்திற்கு அருகே வந்து அவரும் அமர்ந்தபோது அந்த சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் என்று நான்…