குர்ஆன் துளிகள்

குர்ஆனை எப்படி அணுக வேண்டும்?

மற்ற புத்தகங்களை வாசிப்பதைப் போல நாம் குர்ஆனை வாசிக்கக்கூடாது. அது ஒரே நேரத்தில் முழுமையாக வாசித்து முடிக்க வேண்டிய ஒரு புத்தகம் அல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கப்பட வேண்டும். அது தாகத்திற்கேற்ப மிடறு மிடறாக அருந்தப்பட வேண்டும். அது அதற்கே உரிய தனித்துவமான முறையில் அணுகப்பட வேண்டும்.

பொறாமைக்காரன்

“பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்கிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன்” பொறாமை ஒரு மோசமான குணம். அது மனிதனை ஷைத்தானாக மாற்றி விடும் தன்மை கொண்டது. பொறாமைக்காரன் மன நிறைவு அடைய முடியாது. அவன் யார் மீது பொறாமை கொண்டோனோ அவர் அடையும் வீழ்ச்சிதான் அவனை அமைதிப்படுத்தும். உண்மையில்

அவசரக்குடுக்கை

மனிதன் அவசரப்படக்கூடியவனாக இருக்கிறான் என்கிறது திருக்குர்ஆன். அவசரம் அவனது இயல்பில் உள்ள ஒன்று. ஆனாலும் அந்த அவசரத்திற்கு கட்டுப்படாமல் நிதானமாகச் செயல்படுபவர்களே அதன் பாதிப்புகளிலிருந்து தப்புகிறார்கள். உணர்ச்சி மேலிடும்போது மனிதன் அவசரக்காரனாக மாறுகிறான். அவசரப்பட்டு அளவுகடந்து புகழ்கிறான். அவசரப்பட்டு சாபம் இடுகிறான். யாரை அவன் புகழ்ந்தானோ அவர்களை ஒரு

விசாலமும் சுருக்கமும்

“உம் இறைவன் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். அவன் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் எல்லாவற்றையும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (17:30) இப்போதெல்லாம் என்னைச் சுற்றி வாழ்பவர்களை, அவர்கள் அடையும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கிறேன். எந்தவொருவரையும் உடனடியாக அவர் இப்படித்தான் என்று முத்திரை

அல்ஹம்துலில்லாஹ்

“படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” நம்பிக்கையாளனின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் இயல்பான வாசகம் இது. அவன் மீண்டும் மீண்டும் இந்த வாசகத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கிறான். நன்றியுணர்ச்சி அவனிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்த தனக்கு அல்லாஹ்தான் இருப்பும் இங்கு வாழ்வதற்கான

தக்வா என்பது

“யார் தக்வாவோடு நடந்து கொள்வாரோ நாம் அவருக்கு ஒரு வெளியேறுமிடத்தை ஏற்படுத்துவோம். அவர் அறியாத புறத்திலிருந்து அவருக்கு நாம் வாழ்வாதாரம் வழங்குவோம்.” (65:2,3) இந்த வசனத்தை படித்த நாளிலிருந்து நான் மறக்கவேயில்லை. அந்த சமயத்தில் ஏற்பட்ட ஒரு திறப்பு, ஒரு மகிழ்ச்சி இன்றளவும் அப்படியே நினைவிருக்கிறது. பிரச்சனைகளில், சிரமங்களில்

உங்களுக்காக சேர்த்து வையுங்கள்

திருமணம் தொடர்பான பேச்சு தொடங்கிய பிறகு பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்த கேள்விக்கு பதிலளிக்கப்படுகிறது. அந்தப் பதிலின்மூலம் சமூகத்தில் அது தொடர்பாகப் பரவியிருந்த பிழையான நம்பிக்கைகள் நீக்கப்படுகின்றன. அடுத்தடுத்த வசனங்களில் இடம்பெறப் போகும் விவகாரத்து தொடர்பான விசயங்களுக்கும் அந்தப் பதில் அவசியமானதாக இருக்கிறது.    وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ

மனச்சிக்கலுக்கான ஓர் எளிய தீர்வு

மனதில் நேர்மறையானவை, எதிர்மறையானவை என ஆயிரம் எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும். எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. வருகின்ற எண்ணங்களை புறக்கணிப்பதும் அவற்றை நீடிக்கச் செய்வதும் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எதிர்மறையான எண்ணங்களை புறக்கணிக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை நீடிக்கச் செய்ய வேண்டும். இதுதான் நாம் செய்ய வேண்டியது.

மதுவும் சூதாட்டமும்

உயிரையும் பொருளையும் அர்ப்பணித்தல், செலவு செய்வது தொடர்பான இந்தப் பின்னணியில் மதுவும் சூதாட்டமும் குறித்த கேள்வி இடம்பெறுவது கவனிக்கத்தக்கது. மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி கூறுகிறார்: “இன்று மதுவும் சூதாட்டமும் முழுக்க முழுக்க தீமையின் கூறுகளையே கொண்டிருப்பதுபோல அன்றைய அறபுக் கலாச்சாரத்தில் அவை முழுக்க முழுக்க தீமையின் கூறுகளை

நீங்கள் விரும்பாவிட்டாலும்

உலகியல்வாதிகள் அவ்வளவு எளிதாக தங்களின் செல்வங்களை மற்றவர்களுக்காக செலவு செய்ய மாட்டார்கள். அவர்கள் செல்வங்களை சேகரித்துக் கொண்டே செல்வார்கள். இதுதான் சமூகத்தைவிட்டு அவர்களை துண்டிக்கிறது. அவர்கள் சமூகத்தை ஒரு குடும்பமாக எண்ண மாட்டார்கள். தங்களின் நலன்களைத் தவிர மற்றவர்களின் நலன்களை பொருட்படுத்த மாட்டார்கள். நம்பிக்கையாளர்கள் அப்படி இருக்க மாட்டார்கள்.

தூதுத்துவ வரலாறு

நிராகரிப்பாளர்களின், நயவஞ்சர்களின் கேலியைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் முரண்பாட்டில் சிக்கிக் கிடக்கிறார்கள். அவர்களிடம் உண்மையை அறிந்துகொள்வதற்கான உரைகல் எதுவும் இல்லை. அவர்கள் நேர்வழியில் செல்லாமல் பல்வேறு வழிகளில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் தன் அருளால் உங்களுக்கு நேரான வழியைக் காட்டியிருக்கிறான். எவ்விதத் தயக்கமும் தடுமாற்றமும் இன்றி அந்தப் பாதையில் செல்லுங்கள்.

இஸ்லாம் என்னும் மகத்தான அருட்கொடை

அடுத்து வரும் வசனங்கள் நம்பிக்கையாளர்கள் அனைவருக்குமான பொதுவான அழைப்பைக் கொண்டிருந்தாலும் நயவஞ்சகர்கள், நம்பிக்கையில் பலவீனமானவர்களுக்கான தனித்துவமான அழைப்பையும் உள்ளடக்கி இருக்கின்றன. தெளிவான சான்றுகளோடு முன்வைக்கப்படும் இந்த அழைப்பைப் புறக்கணிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் அவை எச்சரிக்கின்றன. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا

சுதந்திரமானவர்களா? அல்லது அடிமைகளா?

அதிகப்படியான சுதந்திரம், பெரும் செல்வம், அதிகாரம் ஆகியவை நேர்மறையான விளைவுகளைவிட எதிர்மறையான விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துகின்றன. கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில் நாம் நல்ல மனிதர்களாக வாழ்வது இலகுவானது. ஆனால் கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான சூழல் நம்மை தவறான திசைகளின் பக்கம் தள்ளுகிறது. மனிதர்கள் உள்ளுக்குள் கட்டுப்பாடுகளை விரும்புவது இதனால்தான்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்ந்தது? மற்றவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?’ ‘நான் இப்படி செய்திருக்கக்கூடாது’ ‘என்னைவிட திறமைக்குறைவானவன் எல்லாம் முன்னேறிக் கொண்டே செல்கிறானே!’ ‘நானெல்லாம் எப்படி இருக்க வேண்டிய ஆள்’ இதுபோன்ற புலம்பல் வார்த்தைகளால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? மீண்டும் மீண்டும் அந்த கசப்புணர்வில் மூழ்கிக் கொண்டே

இரு வகை மனிதர்கள்

இஸ்லாம் சொல்லும் வழிபாடுகளின் நோக்கம் தக்வாதான். வழிபாடுகள் மனிதனின் உள்ளத்தை தூய்மைப்படுத்த வேண்டும். அவனுடைய தீய இச்சைகளின் பிடியிலிருந்து அவனை விடுவிக்க வேண்டும். ஆனால் உலகியல்வாதிகளின் வழிபாடுகள் வெறும் சடங்குகளாகத்தான் இருக்கும். அவை அவர்களின் உள்ளங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் தீய இச்சைகளுக்கு அடிமையானவர்கள். அவற்றை நிறைவேற்றுவதையே

ஹஜ் தொடர்பான சட்டங்கள்

நோன்பு, புனித மாதங்கள், போர், புனித மாதங்களில் போர், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தல் ஆகிய விவகாரங்களுக்குப் பிறகு இப்போது ஹஜ் தொடர்பான விவகாரம் இடம்பெறுகிறது. ஏற்கனவே புனித மாதங்கள் தொடர்பான விவகாரத்தில் ஹஜ்ஜைக் குறித்த குறிப்பும் இடம்பெற்றிருந்தது. இந்த வசனங்கள் முந்தைய வசனங்களோடு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்றன.