அல்ஃபாத்திஹா (ஆரம்பம்)

மக்காவில் அருளப்பட்ட ஏழு வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்திற்கு ‘அல்ஃபாத்திஹா’ என்று பெயர். அல்ஃபாத்திஹா என்றால் ஆரம்பம் என்று பொருள். திருக்குர்ஆனின் ஆரம்பமாக இந்த அத்தியாயம் இடம்பெற்றிருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். திருக்குர்ஆனுக்கு ஒரு முன்னுரைபோல இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது.…

பிரபல்யம் என்னும் போதை

பிரபல்யம் சில உலகியல் இலாபங்களைக் கொண்டு வந்தாலும் அது ஒரு வகையில் துன்பம் தரக்கூடியது. அது இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடியது; அதீத சுயமோகத்தை உருவாக்கக்கூடியது. அதீத சுயமோகம் ஆளுமையைச் சிதைத்துவிடக்கூடிய அளவுக்கு கொடியது. அதுவும் கர்வம் உண்டாக்கும், அறிவை மழுங்கடிக்கச் செய்யும்…

நோன்பின் மகிழ்ச்சி

நோன்பாளி இரண்டு சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியடைகிறார். ஒன்று நோன்பு துறக்கும் சமயத்தில். மற்றொன்று தம் இறைவனைக் காணும் சந்தர்ப்பத்தில். இது நபியவர்கள் கூறியது. உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது, நோன்பு முடிகிறது என்பதை எண்ணும்போது; இனி உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டியதில்லை என்பதை எண்ணும்போது.…

உடையும் பிம்பம்

ஒருவரைக் குறித்து என்னுள் இருக்கும் இருக்கும் பிம்பம் திடீரென அவரிடமிருந்து வெளிப்படும் ஒரு செயலால், அவரைக் குறித்து கேள்விப்படும் ஒரு செய்தியால் உடைந்துவிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனை எப்படி அணுகுவது? இங்கு நாம் ஒரு விசயத்தை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மனிதர்கள்…

செயல்படுங்கள்

“செயல்படுங்கள், ஒவ்வொருவரும் தாம் எதற்காக படைக்கப்பட்டார்களோ அதை நோக்கி இலகுபடுத்தப்படுவார்கள்” (நபிமொழி) ஒவ்வொரு முறையும் இந்த நபிமொழி வாசகத்தை படிக்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. விதியை அற்புதமான முறையில் முன்வைக்கும் வாசகம் இது. விதியின் மீதான உங்களின் நம்பிக்கை…

செயல்படுதல்

சில நாட்களாக எதுவும் எழுதவில்லை, வாசிக்கவும் இல்லை. எழுத வேண்டும் என்று தோன்றவில்லை என்பதால் எதையும் எழுதாமல் முற்றிலுமாக விலகியிருந்தேன். என்னுடைய சூழலும் அதற்கான காரணங்களில் ஒன்று. கொஞ்ச நாட்கள் அப்படி இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனாலும் எதையோ இழந்ததுபோன்று…

குர்ஆன் வாசிப்பு

இரண்டு வகை வாசிப்பு இருக்கிறது. ஒன்று, மேலோட்டமான வாசிப்பு. இன்னொன்று ஆழமான வாசிப்பு. மேலோட்டமான வாசிப்பு என்பது மிக வேகமாக வாசித்துக் கொண்டே செல்வதும் வாசித்தவற்றை அசைபோடாமல் இருப்பதும் ஆகும். ஆழமான வாசிப்பு என்பது நிறுத்தி நிதானமாக வாசிப்பதும் வாசித்தவற்றை அசைபோடுவதும்…

நமக்குத்தான் இழப்பு

“நீங்கள் ஒன்றை வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கலாம். நீங்கள் ஒன்றை விரும்பலாம். அது உங்களுக்குத் தீமையானதாக இருக்கலாம். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.” (திருக்குர்ஆன் 2:216) அல்லாஹ்வின் கட்டளை என்று தெரிந்துவிட்டால் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதனைச் செயல்படுத்துங்கள்.…

வெறுப்பிலிருந்து விடுபடுவது

சண்டை பிடிக்க வேண்டும் என்ற உணர்வு எங்கிருந்து வருகிறது? அது ஒரு மன அரிப்புபோல தொடங்குகிறது. அதன் விளைவாகவே நாம் வம்பிழுக்கிறோம். உள்ளுக்குள் வைத்திருக்கும் வெறுப்பை வெளிப்படுத்துகிறோம். உண்மையில் நாம் சொல்லும் காரணம் காரணமாக இருக்காது. தேங்கியிருக்கும் வெறுப்புதான் அசலான காரணமாக…