சிறப்புகளும் பொறுப்புகளும்

மீண்டும் அல்லாஹ் யூதர்களை ‘இஸ்ராயீலின் மக்களே’ என்று அழைத்து அவர்கள் மீது தான் பொழிந்த அருட்கொடையை, உலக மக்கள் அனைவரையும்விட அவர்களை சிறப்பித்ததை நினைத்துப் பார்க்குமாறு கூறுகிறான். பிறகு பல்வேறு காலகட்டங்களில் அவன் அவர்கள் மீது பொழிந்த அருட்கொடைகளையும் அவற்றை அவர்கள்…

இஸ்ரவேல் சமூகத்தினர்

இதுவரையிலான வசனங்களில் யூதர்கள் மறைமுகமாக சுட்டப்பட்டிருந்தார்கள்.  அடுத்து வரக்கூடிய வசனங்கள் நேரடியாக யூதர்களை விளித்துப் பேசுகின்றன. அல்லாஹ் அவர்கள் மீது பொழிந்த அருட்கொடைகளும் அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதமும் நினைவூட்டப்படுகின்றன. இந்த வசனங்கள் அவர்களுக்கான நேரடியான அழைப்பையும் அவர்களைப் போன்ற இயல்புடையவர்களுக்கான…

பாவங்கள் என்னும் சிறைச்சாலை

பாவங்களிலிருந்து விடுபட நான் என்ன வேண்டும்? மனிதர்களிடம் இயல்பாகவே பலவீனம் இருக்கிறது. அந்த பலவீனத்தைப் பயன்படுத்தியே ஷைத்தான் அவர்களை வழிகெடுக்க முயற்சிக்கிறான். பாவங்கள் செய்யாமல் வாழும் வாழ்க்கை இன்பங்கள் அற்ற துறவு வாழ்க்கை என்ற ஒரு மாயையை அவன் அவர்களின் உள்ளங்களில்…

முதல் மனிதரின் சம்பவம்

பூமியிலுள்ள அனைத்தும் மனிதர்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன என்ற கண்ணோட்டம் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு மனிதப் படைப்பின் ஆரம்பம் குறித்த விசயம் இடம்பெறுகிறது. மனிதனைப் படைப்பதற்கு முன்னால் அல்லாஹ் வானவர்களுடன் நிகழ்த்திய உரையாடல் குறித்தும் படைத்த பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்படுகிறது. அடுத்து வரக்கூடிய…

சலிப்பாக இருக்கிறது

வாழ்க்கை சலிப்பாக இருக்கிறது. அன்றாடம் செய்த செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம். பிறகு என்ன இருக்கிறது வாழ்வதற்கு? இந்த எண்ணம் ஆரம்பத்தில் உங்களுக்கு உருவாகி இருக்காது என்று கருதுகிறேன். சாப்பிடுவது, வேலைக்குச் செல்வது, விளையாடுவது, பொழுது போக்குவது, தூங்குவது என…

எப்படி உங்களால் நிராகரிக்க முடிகிறது?

இந்த இடத்தில் யூதர்கள் முன்வைத்த ஒரு ஆட்சேபனைக்கு பதிலளிக்கப்படுகிறது. கொசு, ஈ, சிலந்திப்பூச்சி போன்ற அற்பமான உயிரினங்களைக் கொண்டா அல்லாஹ் உதாரணங்கள் கூறுகிறான் என்று அவர்கள் ஆட்சேபனை எழுப்பினார்கள். அவர்களின் நோக்கம், திருக்குர்ஆனுடைய நம்பகத்தன்மையில் கேள்வி எழுப்புவதுதான்.      إِنَّ اللهَ…

பெருமையடித்தல்

மற்றவர்கள் எரிச்சலடைவார்கள் என்று தெரிந்தும் நாம் பெருமையடிக்கிறோம். மற்றவர்கள் அடிக்கும் பெருமை நமக்கு எரிச்சலூட்டினாலும் நாமும் அதைப் போலவே பெருமையடிக்கிறோம். இது நாம் செய்யும் தவறுகளை நாம் உணராமலில்லை என்பதையே காட்டுகிறது. நாம் பொய்யான வாதங்களை மீண்டும் மீண்டும் முன்வைப்பதன்மூலம் அவற்றை…

முறியடிக்க முடியாத சவால்

இஸ்லாத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்பிக்கையாளர்கள், அந்த அழைப்பை ஏற்க மறுத்த மூர்க்கமான நிராகரிப்பாளர்கள், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் வெளிப்படையாக நிராகரிக்கவும் முடியாமல் தடுமாற்றமான நிலையில் இருந்த நிராகரிப்பாளர்கள் என மூன்று தரப்பினரையும் அடையாளப்படுத்திய பிறகு அவர்களும் ஏனைய இணைவைப்பாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே…

குழப்பம் விளைவிப்பவர்கள்

நிராகரிப்பாளர்களில் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை மூர்க்கமான நிராகரிப்பாளர்களாகக் காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இரண்டுக்கும் மத்தியிலான ஒரு நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருப்பார்கள். அதுதான் புத்திசாலித்தனம் என்றும் அதுதான் இணக்கத்திற்கான வழி என்றும் அவர்கள் கூறுவார்கள். இப்படிப்பட்ட…

மனக்கட்டுப்பாடும் மனத்தூய்மையும்

நாம் மனதின் இச்சைகளுக்கு எப்போது கட்டுப்படுகின்றோம்? மனம் பலவீனமடைந்திருக்கும்போது மனதின் இச்சைகளுக்கு எளிதாக கட்டுப்பட்டு விடுகிறோம். அந்தச் சமயத்தில் இச்சைகளுக்குக் கட்டுப்படுவது ஏதோ ஒரு வகையான விடுதலைபோல தெரிகிறது. ஆகவே எளிதில் வீழ்ந்து விடுகின்றோம். மதுவுக்கும் விபச்சாரத்திற்கும் அடிமையானவர்களைப் பாருங்கள். அவர்களின்…