வார்த்தைகள்

வார்த்தைகளுக்குத்தான் எவ்வளவு பலம்! அதுவும் உரியவர்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அசுர பலம் கொண்டவையாக மாறிவிடுகின்றன. பயமும் பதற்றமும் கவலையும் உள்ளத்தின் நோய்கள். அவை உடலில் நோய்களை ஏற்படுத்தும் வலிமையான நோய்கள். நம்பிக்கையூட்டும், ஆறுதலளிக்கும் வார்த்தைகள் பயத்தை, பதற்றத்தை, கவலையைப் போக்கி விடுகின்றன.…

ஞானம் என்பது

கற்றுக் கொடுத்தலும் கற்றலின் ஒரு வகைதான். கற்கும்போது புரியாத சில விசயங்கள் கற்றுக்கொடுக்கும்போது தெளிவாகப் புரிகின்றன. எனக்கு எழுதும்போதும் அப்படித்தான். அதுவரை புரியாத சில விசயங்கள் எனக்கு எழுதும்போது புரிகின்றன. என் எழுத்திலிருந்து வெளிப்பட்டாலும் எனக்கு அது புதிய ஒன்றுதான். மொழிபெயர்த்தல்…

நோன்பும் மனக்கட்டுப்பாடும்

நோன்புக்கும் மனக்கட்டுப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அற்புதமான வழிமுறை. கிட்டத்தட்ட எல்லா மதங்களும் நோன்பை ஏதேனும் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன. திருக்குர்ஆனும் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோன்றே உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. நம்…

தேக்கி வைக்கப்படும் குரோதம்

நமக்கு மேல் இருப்பவர்களிடம் நாம் கோபம் கொள்வதில்லை. கோபத்தை வெளிப்படுத்த முடியாத இடங்களில் நாம் கோபம் கொள்வதில்லை. ஆனாலும் மனதில் ஒரு வெறுப்பை தேக்கி வைக்கிறோம். அது குரோதமாக மாறுகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது அந்தக் குரோதம் நம்மையும் மீறி வெளிப்பட்டு விடுகிறது.…

மனிதர்கள் பாவம் செய்யக்கூடியவர்களா?

மனிதர்கள் எளிதாக பாவங்களில் விழுந்து விடுகிறார்கள். அதனால்தான் அல்லாஹ் பாவமன்னிப்பின் வாசலை எப்போதும் திறந்தே வைத்திருக்கிறான். தாங்கள் செய்த பாவத்தை பாவம் என ஒத்துக் கொண்டு அதற்காக மனம் வருந்தி அவர்கள் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுகிறான்.…

உளவறிதல்

ஒருவரை எந்த அளவு நெருங்குகிறாமோ அந்த அளவு அவரிடமிருந்து விலகியும் செல்வோம். அதீத நெருக்கம் கொஞ்சம் ஆபத்தானது. ஒருவரை முழுமையாக அறிந்துவிட்டால் அவரிடமிருந்து விலகிவிடுவோம் அல்லது அவர் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுவோம். நாம் அறியாத ஏதோ ஒன்று நம்மை ஈர்க்கிறது.…

நட்பும் உறவும்

நட்பின், உறவின் கடமைகளில் ஒன்று, நண்பரின் மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் பங்குகொள்வது. உங்கள் நண்பர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவரது மகிழ்ச்சியில் பங்குபெறுவது அவரது மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர் துன்பத்தில் இருக்கும்போது அவரது அருகில் இருப்பது, அவருக்கு ஆறுதல் கூறுவது அவரது பாரத்தை ஓரளவு…

புகழ் விருப்பம்

அளவுக்கு மீறி புகழ்தலைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. பெரும்பாலும் அளவுக்கு மீறி புகழ்தலுக்குப் பின்னால் ஏதேனும் உள்நோக்கம் மறைந்திருக்கும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் ஏதேனும் தேவையைப் பெறும் பொருட்டே இவ்வாறான துதிபாடலில் அவன் ஈடுபடுகிறான். பாராட்டுவதை இஸ்லாம் தடுக்கவில்லை. பாராட்டுவது விரும்பத்தக்கது.…

இரண்டு வழிகள்

நமக்கு முன்னால் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று கண்ணியத்தின் வழி. இரண்டு இழிவின் வழி. ஒன்று நேரான வழி. இன்னொன்று தவறான வழி. நேரான வழியில் செல்வது, அதில் நிலைத்திருப்பது ஒரு வகையில் இலகுவானது. இன்னொரு வகையில் கடினமானது. அது இயல்பின்…