உடையும் பிம்பம்

ஒருவரைக் குறித்து என்னுள் இருக்கும் இருக்கும் பிம்பம் திடீரென அவரிடமிருந்து வெளிப்படும் ஒரு செயலால், அவரைக் குறித்து கேள்விப்படும் ஒரு செய்தியால் உடைந்துவிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனை எப்படி அணுகுவது? இங்கு நாம் ஒரு விசயத்தை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மனிதர்கள்…

செயல்படுங்கள்

“செயல்படுங்கள், ஒவ்வொருவரும் தாம் எதற்காக படைக்கப்பட்டார்களோ அதை நோக்கி இலகுபடுத்தப்படுவார்கள்” (நபிமொழி) ஒவ்வொரு முறையும் இந்த நபிமொழி வாசகத்தை படிக்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. விதியை அற்புதமான முறையில் முன்வைக்கும் வாசகம் இது. விதியின் மீதான உங்களின் நம்பிக்கை…

செயல்படுதல்

சில நாட்களாக எதுவும் எழுதவில்லை, வாசிக்கவும் இல்லை. எழுத வேண்டும் என்று தோன்றவில்லை என்பதால் எதையும் எழுதாமல் முற்றிலுமாக விலகியிருந்தேன். என்னுடைய சூழலும் அதற்கான காரணங்களில் ஒன்று. கொஞ்ச நாட்கள் அப்படி இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனாலும் எதையோ இழந்ததுபோன்று…

குர்ஆன் வாசிப்பு

இரண்டு வகை வாசிப்பு இருக்கிறது. ஒன்று, மேலோட்டமான வாசிப்பு. இன்னொன்று ஆழமான வாசிப்பு. மேலோட்டமான வாசிப்பு என்பது மிக வேகமாக வாசித்துக் கொண்டே செல்வதும் வாசித்தவற்றை அசைபோடாமல் இருப்பதும் ஆகும். ஆழமான வாசிப்பு என்பது நிறுத்தி நிதானமாக வாசிப்பதும் வாசித்தவற்றை அசைபோடுவதும்…

நமக்குத்தான் இழப்பு

“நீங்கள் ஒன்றை வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கலாம். நீங்கள் ஒன்றை விரும்பலாம். அது உங்களுக்குத் தீமையானதாக இருக்கலாம். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.” (திருக்குர்ஆன் 2:216) அல்லாஹ்வின் கட்டளை என்று தெரிந்துவிட்டால் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதனைச் செயல்படுத்துங்கள்.…

வெறுப்பிலிருந்து விடுபடுவது

சண்டை பிடிக்க வேண்டும் என்ற உணர்வு எங்கிருந்து வருகிறது? அது ஒரு மன அரிப்புபோல தொடங்குகிறது. அதன் விளைவாகவே நாம் வம்பிழுக்கிறோம். உள்ளுக்குள் வைத்திருக்கும் வெறுப்பை வெளிப்படுத்துகிறோம். உண்மையில் நாம் சொல்லும் காரணம் காரணமாக இருக்காது. தேங்கியிருக்கும் வெறுப்புதான் அசலான காரணமாக…

தன்னிகரற்ற வேதம்

இஸ்லாம் இறைவன் அருளிய மார்க்கம் என்று எப்படி கூறுவீர்கள்? நபியவர்கள் அவனிடமிருந்து வந்த உண்மையான தூதர் என்பதற்கான ஆதாரம் என்ன? இஸ்லாம் இறைவன் அருளிய இறுதி மார்க்கம் என்பதற்கும் நபியவர்கள் அவனிடமிருந்து வந்த இறுதியான தூதர் என்பதற்குமான ஆதாரம் திருக்குர்ஆன்தான். திருக்குர்ஆனைக்…

அறிவுரை

எந்தவொரு அறிவுரையும் சொல்லப்படாமல் இல்லை. அத்தனை அறிவுரைகளும் மனிதர்களால் சொல்லப்பட்டு விட்டன, தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. ஆனாலும்  சிலரிடமிருந்து அவை வெளிப்படும்போது நம்மை ஈர்க்கின்றன. அவற்றால் நாம் கவரப்படுகிறோம். அவை நமக்குப் புதியவையாகத் தெரிகின்றன. அவை பின்பற்றப்பட வேண்டியவை என்று…

சமநிலைக்குலைவு

பெரும் பெரும் துன்பங்களை எல்லாம் எளிதாகக் கடந்தவர் அவர். அவரது மனதில் இருந்த வெறி தடைகள் எல்லாவற்றையும் துச்சமென நினைத்து அவரைக் கடக்க வைத்தது. அவர் அடைய நினைத்த எல்லையை ஓரளவுக்கு அடைந்து விட்டார். மனதில் முன்னர் இருந்த விடாப்படியான ஆசை…

தேவையற்ற பயம்

நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருந்து விட்டால் அடுத்து ஒரு துன்பம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. என்னுடைய இந்த பயம் எதிர்மறைச் சிந்தனையின் விளைவா? மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பமும் மாறிமாறி வரக்கூடியவை. மகிழ்ச்சிக்குப் பிறகு துன்பம் வரலாம். துன்பத்திற்குப் பிறகு…