குர்ஆன் துளிகள்

பெருமையடித்தல்

மற்றவர்கள் எரிச்சலடைவார்கள் என்று தெரிந்தும் நாம் பெருமையடிக்கிறோம். மற்றவர்கள் அடிக்கும் பெருமை நமக்கு எரிச்சலூட்டினாலும் நாமும் அதைப் போலவே பெருமையடிக்கிறோம். இது நாம் செய்யும் தவறுகளை நாம் உணராமலில்லை என்பதையே காட்டுகிறது. நாம் பொய்யான வாதங்களை மீண்டும் மீண்டும் முன்வைப்பதன்மூலம் அவற்றை உண்மையென நம்ப ஆரம்பிக்கின்றோம். நம் பார்வையில்

நமக்குத்தான் இழப்பு

“நீங்கள் ஒன்றை வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கலாம். நீங்கள் ஒன்றை விரும்பலாம். அது உங்களுக்குத் தீமையானதாக இருக்கலாம். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.” (திருக்குர்ஆன் 2:216) அல்லாஹ்வின் கட்டளை என்று தெரிந்துவிட்டால் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதனைச் செயல்படுத்துங்கள். உங்களின் அறிவு எல்லைக்குட்பட்டது. அந்த எல்லையைத்

வெறுப்பிலிருந்து விடுபடுவது

சண்டை பிடிக்க வேண்டும் என்ற உணர்வு எங்கிருந்து வருகிறது? அது ஒரு மன அரிப்புபோல தொடங்குகிறது. அதன் விளைவாகவே நாம் வம்பிழுக்கிறோம். உள்ளுக்குள் வைத்திருக்கும் வெறுப்பை வெளிப்படுத்துகிறோம். உண்மையில் நாம் சொல்லும் காரணம் காரணமாக இருக்காது. தேங்கியிருக்கும் வெறுப்புதான் அசலான காரணமாக இருக்கும். மனமார விட்டுக் கொடுத்தல் ஒரு

தன்னிகரற்ற வேதம்

இஸ்லாம் இறைவன் அருளிய மார்க்கம் என்று எப்படி கூறுவீர்கள்? நபியவர்கள் அவனிடமிருந்து வந்த உண்மையான தூதர் என்பதற்கான ஆதாரம் என்ன? இஸ்லாம் இறைவன் அருளிய இறுதி மார்க்கம் என்பதற்கும் நபியவர்கள் அவனிடமிருந்து வந்த இறுதியான தூதர் என்பதற்குமான ஆதாரம் திருக்குர்ஆன்தான். திருக்குர்ஆனைக் கொண்டே இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் என்பது

நோன்பின் நோக்கம்

“உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதுபோன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் தக்வா உடையவர்களாக ஆகலாம்.”  (2:183) நோன்பு ஒரு மகத்தான அருட்கொடை. அது நம்மை தக்வா உடையவர்களாக, இச்சைகளின் பிடியிலிருந்து விடுபட்ட சுதந்திரமான மனிதர்களாக மாற்றுகிறது. ஷைத்தான்கள் மனிதர்களின் இச்சைகளைப் பயன்படுத்தியே அவர்களை வழிகெடுக்கிறார்கள்.

தேக்கி வைக்கப்படும் குரோதம்

நமக்கு மேல் இருப்பவர்களிடம் நாம் கோபம் கொள்வதில்லை. கோபத்தை வெளிப்படுத்த முடியாத இடங்களில் நாம் கோபம் கொள்வதில்லை. ஆனாலும் மனதில் ஒரு வெறுப்பை தேக்கி வைக்கிறோம். அது குரோதமாக மாறுகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது அந்தக் குரோதம் நம்மையும் மீறி வெளிப்பட்டு விடுகிறது. கோபத்தை வெளிப்படுத்த முடியுமான இடங்களில் கோபத்தை

நோன்பும் திருக்குர்ஆனும்

அடுத்து இடம்பெறும் கட்டளை ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது தொடர்பானதாகும். அந்த மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்படத் தொடங்கியது என்பதனால் அந்த மகத்தான அருட்கொடைக்கு நன்றி செலுத்தும்பொருட்டு அந்த மாதத்தில் நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இந்தக் கட்டளைக்குப் பின்னால் இருக்கும் நோக்கமும் தக்வாதான். தக்வாதான் குர்ஆனைப் புரிந்து கொள்வதற்கான

உயிருக்கும் செல்வத்திற்குமான பாதுகாப்பு

அடுத்து வரும் கட்டளைகள் தனி மனித வாழ்விலும் சமூகத்திலும் தக்வாவை நிலைநிறுத்தக்கூடியவை. தக்வாவின்மூலமே மனிதர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்தும் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் சிக்கல்களிலிருந்தும் தப்பிக்க முடியும். ஒரு சமூகம் சிறந்த சமூகமாக இருக்க வேண்டும் எனில் அந்த சமூகத்தினருக்கு மத்தியில் அல்லாஹ்வின் மார்க்கம் முன்வைக்கும் ஒழுங்குகள்

மனச்சிக்கல் தொடர்பான ஒரு கேள்வி

நீங்கள் எழுப்பிய இந்தக் கேள்வி மிக முக்கியமானது. பல முறை எனக்கு நானே இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறேன். அணுக்கமான நண்பர்களிடமும் இது குறித்து விவாதித்திருக்கிறேன். நாம் அவர்களோடு கரிசனத்தோடு நடந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக ஆக்கிவிடக்கூடாது. தாங்கள் செய்யும் எல்லா தவறுகளையும் தங்களின் மனச்சிக்கல்

மார்க்கம் என்பது

யூதர்களும் கிருஸ்தவர்களும் வெறும் சடங்குகளை, வீணான தர்க்கங்களை மார்க்கம் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுவல்ல மார்க்கம். அடுத்து வரக்கூடிய வசனம் மார்க்கத்தின் அசலான ஆன்மாவைத் தெளிவுபடுத்துகிறது. குறைவான வார்த்தைகளில் மார்க்கத்தின் அசலான தன்மைகள் அனைத்தும் தெளிவுபடுத்தப்படுகின்றன.    لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ

உண்மையை மறைப்பவர்கள்

எதையும் சிந்திக்காமல் குருட்டுத்தனமாகப் பின்பற்றும் நிராகரிப்பாளர்கள் இடையன்களால் ஓட்டிச் செல்லப்படும் ஆட்டு மந்தைகளைப் போன்று தங்களின் தலைவர்களால் வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அவர்களைப் போன்று இருக்காதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடைகளின் விசயத்தில் நீங்கள் நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குத் தடைசெய்தவற்றை மட்டுமே தடைசெய்யப்பட்டவையாகக் கருதுங்கள்.

ஊசலாட்டங்கள், சந்தேகங்கள்

ஷைத்தான் மனித மனதில் ஊசலாட்டங்களை, சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறான். மனம் பலமாக இருக்கும்போது அவற்றை எளிதாக அடையாளம் கண்டு புறந்தள்ளி விடுகிறது. மனம் பலவீனமாக இருக்கும் சமயத்தில் அது அவற்றை எளிதாக புறந்தள்ள முடிவதில்லை. அது அவற்றைப் பொருட்படுத்துகிறது. நன்றாக தூங்கி எழுந்த பிறகு காலையில் மனம் பலத்தோடும்

தங்களின் அறிவைப் பயன்படுத்தாதவர்கள்

தெளிவான இந்த சான்றுகளைக் காணாதவர்கள், இந்த சான்றுகளுக்குப் பின்னால் இருக்கும் பேராற்றலும் பெரும் கருணையும் கொண்ட இறைவனை உணராதவர்கள் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஏற்படுத்துகிறார்கள். அவனை நேசிப்பதுபோன்று மற்றவர்களையும் நேசிக்கிறார்கள். அவனுக்கு மட்டுமே உரிய பண்புகளை மற்றவர்களுக்கும் கொடுக்கிறார்கள். அவர்கள் அவனை விடுத்து மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். وَمِنَ

எத்தனை வகையான உறவுகள்!

ஒவ்வொரு உறவும் நட்பும் அன்பின் அடிப்படையில் அமைய வேண்டியது அல்ல. சில உறவுகள் தேவையின் அடிப்படையிலானது. அங்கு பயன் பெற்று பயனளித்தல் அல்லது வெறுமனே பயனடைதல் இருக்கும். சிலர் வெறுமனே பயனடைதலை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் அவர்களையும் மீறி ஏதோ ஒரு வகையில் பயனளித்தல் நிகழ்வதால் அந்த உறவு நீடிக்கிறது.

மனச்சிக்கல் கொண்டவர்களின் புகார்கள்

மனச்சிக்கல் கொண்டவர்களுடன் சேர்ந்திருப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவர்கள் தங்களின் பலவீனங்களை கச்சிதமாக மற்றவர்களின் பலவீனங்களாக முன்வைப்பார்கள். அவர்களால்தான் தாங்கள் இப்படி ஆகிவிட்டோம் என்பார்கள். மற்றவர்களைக் குறித்த அவர்களின் புகார்கள் நீண்டு கொண்டே செல்லும். உலகம் கெட்டு விட்டது, சமூகம் கெட்டு விட்டது, தாங்கள் மட்டுமே நேர்வழியில இருக்கிறோம்

கண்ணிருந்தும் குருடன்

“நீ ஒரு விசயத்தை உண்மையிலேயே விரும்பினால் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அதை நோக்கி உன்னை நகர்த்திச் செல்லும்.” இது ரசவாதி என்ற நூலில் இடம்பெறும் வாசகம். இது இந்தப் பிரபஞ்சத்தில் அல்லாஹ் அமைத்த நியதிகளுள் ஒன்று. இந்தப் பிரபஞ்சம் நமக்கு எதுவும் தராது. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கும்