அந்த இடம் எனக்கு சொர்க்கமாகத் தெரிந்தது. அந்த இடத்தை சொர்க்கம் என்றுதான் நினைத்தேன். அந்த இடத்தின் அமைதி மனதில் அபூர்வமான உணர்வையும் அமைதியையும் ஏற்படுத்தியது. எனக்காகவே அந்த இடம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைத்தேன். வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத அற்புதமான அனுபவம் அது. அந்த அனுபவம் குறுகிய காலம் அல்ல, நீண்ட
அதிகம் காட்டிக் கொள்பவர்கள் ஏன் அதற்கு மாறாக இருக்கிறார்கள்? அவர்கள் உணரும் தனிமைதான் அவர்களை அதிகம் காட்டிக் கொள்ளத் தூண்டுகிறதா? தங்களை மகிழ்ச்சியானவர்களாக காட்டிக் கொள்ளும் தம்பதியினர் உண்மையில் அதற்கு மாறானவர்களாக இருக்கிறார்களே! அது ஏன்? சமூக ஊடகங்களில், பொதுத் தளங்களில் தங்களை மகிழ்ச்சியானவர்களாக காட்டிக் கொள்பவர்கள் எல்லாம்
ஒரு விசயத்தை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள் எனில் அதனை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் உறுதியான, தெளிவான குரலில் உங்களால் முன்வைக்க முடிந்தால் அது உங்களைச் சுற்றியுள்ளவர்களிடத்திலும் மற்றவர்களிடத்திலும் தன்னியல்பாகச் சென்றடைந்து விடும். உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தை உள்ளங்களைச் சென்றடையும் என்பது இங்கு செயல்படும் விதி. அந்த வார்த்தையில் தெளிவும்
“பேசினால் நல்லதையே பேசுங்கள். இல்லையெனில் மௌனமாக இருங்கள்.” (நபிமொழி) நல்லதையே பேச வேண்டும். நல்லதைப் பேச முடியவில்லை எனில் மௌனமாக இருக்க வேண்டும். இங்கு மௌனம் வலியுறுத்தப்பட்டதல்ல. உங்களால் நல்லதைப் பேச முடியவில்லை எனில் மௌனமாக இருங்கள் என்றே சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாம் மௌனத்தை ஒரு வணக்க வழிபாடாக முன்வைக்கவில்லை.
நம்பிக்கையாளர்கள் ஒரு விசயத்தை அணுகும் விதத்திற்கும் உலகியல்வாதிகள் ஒரு விசயத்தை அணுகும் விதத்திற்கும் மத்தியில் மிகப் பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது. ஏனெனில் மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் குறித்து இருவரும் வெவ்வேறான கண்ணோட்டங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் மனித அறிவின், ஆற்றலின் எல்லையை அறிந்தவர்கள். இறைவனின் கரமே இங்கு
மனிதனால் சட்டென எப்படி இன்னொரு முகத்திற்கு மாறிவிட முடிகிறது என்பது ஆச்சரியமான ஒன்றுதான். நாம் ஒரு மனிதனைக் குறித்து அவனுடைய கடந்த கால நம்முடைய நட்பின், பழக்கத்தின் அடிப்படையில், அவனைக் குறித்து நாம் அடைந்த புரிதலின் அடிப்படையில் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்போம். அந்த பிம்பத்தைக் கொண்டே அவனை
இந்தக் காலகட்டத்தின் மிகப் பெரிய சவால் என்ன தெரியுமா? நாம் இயல்பு நிலையில் நீடிப்பதுதான். எந்த இயல்பில் நாம் படைக்கப்பட்டோமோ அந்த நிலையில் நாம் நீடிப்பது. பிறழ்வு நிலை இயல்பு நிலையாக சித்தரிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீடியோக்கள், சினிமாக்கள், பிறழ்வு எழுத்துக்கள் வழியாக நம்
தேவையில்லாத, முக்கியத்துவம் அற்ற செயல்பாடுகளில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொண்டால் தேவையான, முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளை செய்ய முடியாதவர்களாகி விடுவீர்கள் அல்லது அவற்றை சரியான முறையில் நிறைவேற்றாதவர்களாகி விடுவீர்கள். கவனச் சிறதல்கள் மிகுந்த இந்தக் காலகட்டத்தில் மிக அவசியமாக செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பதை முடிவு செய்த
செய்யத் குதுப் திருக்குர்ஆனின் நிழலில் வாழ்வது அருட்கொடையாகும். அனுபவித்தவரே அதனை அறிந்துகொள்வார். அது வாழ்நாளை அதிகரிக்கச் செய்கின்ற, தூய்மைப்படுத்துகின்ற அருட்கொடை. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. குறிப்பிட்ட காலம்வரை திருக்குர்ஆனின் நிழலில் வாழும் பெரும் பாக்கியத்தை அவன் எனக்கு அருளினான். என் வாழ்வில் அனுபவிக்காத அருட்கொடைகளையெல்லாம் அந்தக் காலகட்டத்தில்தான் அனுபவித்தேன்.
“உம் இறைவன் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். அவன் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் எல்லாவற்றையும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (17:30) இப்போதெல்லாம் என்னைச் சுற்றி வாழ்பவர்களை, அவர்கள் அடையும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கிறேன். எந்தவொருவரையும் உடனடியாக அவர் இப்படித்தான் என்று முத்திரை