நாம் மனதின் இச்சைகளுக்கு எப்போது கட்டுப்படுகின்றோம்? மனம் பலவீனமடைந்திருக்கும்போது மனதின் இச்சைகளுக்கு எளிதாக கட்டுப்பட்டு விடுகிறோம். அந்தச் சமயத்தில் இச்சைகளுக்குக் கட்டுப்படுவது ஏதோ ஒரு வகையான விடுதலைபோல தெரிகிறது. ஆகவே எளிதில் வீழ்ந்து விடுகின்றோம். மதுவுக்கும் விபச்சாரத்திற்கும் அடிமையானவர்களைப் பாருங்கள். அவர்களின் ஆரம்ப கட்டம் மன அழுத்தத்திலிருந்து அல்லது
நம்பிக்கையாளர்களின் பண்புகள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு எதிர் திசையில் இருக்கும் நிராகரிப்பாளர்கள் குறித்து தெளிவுபடுத்தப்படுகிறது. அவர்கள் ஏன் நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்கள்? அவர்களின் விசயத்தில் செயல்படும் இறைநியதி என்ன? அடுத்த இரு வசனங்கள் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கின்றன. إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ
அல்பகரா அல்பகரா என்றால் பசுமாடு என்று பொருள். இந்த அத்தியாயத்தில் இஸ்ரவேல் சமூகத்தில் நிகழ்ந்த பசுமாட்டைக் குறித்த ஒரு சம்பவம் இடம்பெறுகிறது. அந்தச் சம்பவம் அத்தியாயத்தின் மையக்கருத்துகளைத் தெளிவுபடுத்துவதால் அதற்கு இந்தப் பெயர் இடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது மதீனாவில் அருளப்பட்ட மிக நீளமான அத்தியாயமாகும். ஹிஜ்ரத்திற்கு
நம்பிக்கையாளனுக்கு தொழுகை உடலின் இதயத்தைப் போல மிக அவசியமான ஒன்றாகும். இதயத்தில் ஏற்படும் பாதிப்பு எப்படி உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துமோ அப்படித்தான் தொழுகையில் ஏற்படும் குறைபாடும் அலட்சியமும் அவனுடைய வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். தொழுகையை விடுபவன் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை விட்டு தூரமாகி விடுவான். இதுதான் நம்பிக்கையாளர்களையும்
உள்ளத்தின் மொழி என்று ஒன்று இருக்கிறதா? ஒரு உள்ளம் இன்னொரு உள்ளத்தில் உள்ளதை அறிந்துகொள்ள முடியுமா? எவ்வித வெளிப்படையான தொடர்பும் இன்றி அவை இணைந்துகொள்ள முடியுமா? நிச்சயமாக அப்படியொரு மொழி இருக்கிறது. ஆனால் ஒத்திசைவான, பிரியம்கொண்ட உள்ளங்களுக்கு மத்தியில் மட்டுமே அது சாத்தியமாகிறது. உள்ளுணர்வுகள் கடத்தப்படுகின்றன. எப்படி அவை
உங்களால் தனித்திருக்க முடிகிறதா? யாருடனும் எந்தவொன்றுடனும் அல்லாமல் உங்களுடன் மட்டும் உங்களால் தனித்திருக்க முடிகிறதா? அப்படி உங்களால் தனித்திருக்க முடிந்தால் நீங்கள் இயல்பு நிலையில் இருக்கிறீர்கள், உங்கள் மனம் பாதிக்கப்படாமல் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் பலரும் தனித்திருத்தலை அஞ்சுகிறார்கள். அவர்கள் தனித்திருக்கும் சமயங்களில் செல்ஃபோனில், சமூக
மார்க்கத்தைச் சொல்லக்கூடியவர்கள், அறபோதகர்கள் பொய்யர்களாக, நேர்மையற்றவர்களாக இருந்தால் என்ன? அவர்கள் இந்தத் துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக, சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களின் அறிவுரைகளை நாங்கள் செவிமடுக்கிறோம். அவர்களின் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து எங்களுக்குக் கவலையில்லை. இப்படி ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்து மற்ற துறைகளுக்குப் பொருந்தும். துறைசார்ந்த
மக்காவில் அருளப்பட்ட ஏழு வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்திற்கு ‘அல்ஃபாத்திஹா’ என்று பெயர். அல்ஃபாத்திஹா என்றால் ஆரம்பம் என்று பொருள். திருக்குர்ஆனின் ஆரம்பமாக இந்த அத்தியாயம் இடம்பெற்றிருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். திருக்குர்ஆனுக்கு ஒரு முன்னுரைபோல இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது. இரத்தினச் சுருக்கமான ஏழு வசனங்கள்
Nasz sklep internetowy oferuje Państwu największy wybór karniszy w cenach producenta. Karnisze metalowe z najwyższej jakości galwanizowanych komponentów, nowoczesne karnisze szynowe square, minimalistyczne serie karniszy czarnych i białych – to tylko niektóre z produktów, które w
பிரபல்யம் சில உலகியல் இலாபங்களைக் கொண்டு வந்தாலும் அது ஒரு வகையில் துன்பம் தரக்கூடியது. அது இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடியது; அதீத சுயமோகத்தை உருவாக்கக்கூடியது. அதீத சுயமோகம் ஆளுமையைச் சிதைத்துவிடக்கூடிய அளவுக்கு கொடியது. அதுவும் கர்வம் உண்டாக்கும், அறிவை மழுங்கடிக்கச் செய்யும் ஒரு வகையான போதைதான். தாம் அடைந்த