இஸ்லாம் தூக்கத்தை சிறு மரணம் என்று வர்ணிக்கிறது. தூக்கத்தில் மனிதனின் ஆன்மா கைப்பற்றப்படுகிறது. பின்னர் அது திருப்பி அனுப்பப்படுகிறது. யாருக்கு இறைவன் மரணத்தை விதித்து விடுகிறானோ அவரது ஆன்மா திருப்பி அனுப்பப்படுவதில்லை. மரணம் என்பது பெரிய தூக்கம். அதில் ஆன்மா நிரந்தரமாக கைப்பற்றப்படுகிறது. தூங்கும்பொழுது நம்பிக்கையாளன் குறிப்பிடும், “அல்லாஹ்வே!
மனிதன் இங்கும் அங்கும் தடுமாறக்கூடியவன்தான். மிருக உணர்ச்சி அவனை கீழ்நோக்கி இழுக்கும். உன்னதத்தை நோக்கிய ஆவல் அவனை மேல் நோக்கி இழுக்கும். அதாவது உடலின் இச்சைக்குக்கும் ஆன்மாவின் விருப்பத்திற்கும் மத்தியில் ஒரு இழுபறி இருந்துகொண்டேயிருக்கும். இங்கு நம்பிக்கையாளன் என்பவன் பாவம் செய்யாத புனிதன் அல்ல. மிருக உணர்ச்சி அவனை
எனக்குத் தெரிந்தவன்தான் அவன். தன் அம்மா திடீரென இறந்தபோது அவன் அழாமல் இருந்தான். ஏன் அவனுக்கு அழுகை வரவில்லை? அம்மாவுடன் மிகவும் பாசமாக இருந்த பிள்ளைதானே அவன்? என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். மய்யித்தை தூக்கி அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றபோது அவன் வெடித்து அழுத் தொடங்கினான். திடீரென
மனப்பிறழ்வு கொண்டவர்களை பொதுவாக இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர், தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை, தாங்கள் இயல்பாக இல்லை என்பதை, தங்களுக்கு சிகிச்சை அவசியம் என்பதை உணர்பவர்கள். இன்னொரு வகையினர், தங்களுக்கு மனரீதியாக பிரச்சனைகள் இருந்தும் அவற்றில் எதையும் உணராமல் தாங்கள் இயல்பாக இருப்பதாக எண்ணிக்கொள்பவர்கள். இந்த இரண்டாவது
நூறு சதவீதம் நன்மையை மட்டுமே கொண்டது என்று எதுவுமேயில்லை. ஒவ்வொன்றும் நேர் எதிரான பக்கங்களையும் கொண்டிருக்கிறது. ஒன்றைப் பெற வேண்டுமானால் இன்னொன்றை இழக்க வேண்டியிருக்கலாம். ஒருவரிடமிருந்து பயனடைந்து கொள்ள விரும்பினால் அவரது எதிர்மறை பண்புகளையும் நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். உறவுகளால் நண்பர்களால் ஏற்படும் தொல்லைகளையும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்ள
பொறுப்புகளையும் சமூக வாழ்க்கைக்கான விதிகளையும் வெறுப்பவர்கள் வெகு விரைவில் ஏதோ ஒன்றுக்கு அடிமையாக மாறிவிடுகிறார்கள் அல்லது சமூகத்திற்கோ சக மனிதர்களுக்கோ பயனற்ற, தீங்கு விளைவிக்கின்ற சமூக விரோதிகளாக மாறி விடுகிறார்கள். மட்டுமீறிய சுயநலமும் தன்னைக் கட்டுப்படுத்தும் உரிமை யாருக்கும் எதற்கும் இல்லை என்ற ஆணவப்போக்குமே அதற்குப் பின்னால் இருக்கும்
வாழ்க்கை வலிகளாலும் ஆனது. விதவிதமான வலிகள் நம்மை வந்தடைந்து கொண்டேயிருக்கின்றன. உடலளவில் நாம் காயப்படுகிறோம். மனதளவில் நாம் காயப்படுகிறோம். சில வலிகள் உடனேயே மறைந்துவிடுகின்றன. சில வலிகள் நீண்ட நாட்கள்வரை நீடிக்கின்றன. சில வலிகள் அவ்வப்போது நம்மிடம் வந்து செல்கின்றன. வலிகள் என்ன செய்கின்றன? வலிகள் நம் இயலாமையை
ஒவ்வொரு துறைக்கும் அதற்கென மனிதர்கள் இருக்கிறார்கள். இறைவன் இந்த உலகில் படைத்த அற்புதங்களில் ஒன்று, மனித வாழ்க்கை சீர்குலையாமல் நேரான பாதையில் பயணிக்க அவன் ஏற்படுத்தியுள்ள சமநிலையாகும். இங்கு ஒவ்வொன்றும் சரியான அளவில் இருக்கின்றது. அல்லாஹ் மனிதர்களை ஒரே நிலையில் படைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப
சில வருடங்களுக்கு முன்னால் ஒருவரிடம் ஒரு பைக் வாங்கினேன். அதற்கான பணத்தை கொடுத்த பிறகு ஒரு மாதம் கழித்து எனக்கு என்னுடைய பைக் வேண்டும், நான் உங்களின் பணத்தை தந்து விடுகிறேன் என்றார். அவரது குரலில் கெஞ்சல் இருந்ததனால் நானும் எந்த மறுப்பும் இன்றி அவரது பைக்கை திருப்பி
மார்க்கத்தைச் சொல்லக்கூடியவர்கள், அறபோதகர்கள் பொய்யர்களாக, நேர்மையற்றவர்களாக இருந்தால் என்ன? அவர்கள் இந்தத் துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக, சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களின் அறிவுரைகளை நாங்கள் செவிமடுக்கிறோம். அவர்களின் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து எங்களுக்குக் கவலையில்லை. இப்படி ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்து மற்ற துறைகளுக்குப் பொருந்தும். துறைசார்ந்த