நாத்திகம் என்பது ஒரு மனநிலை. அது எதையும் எதிர்க்கத் துணிந்த கர்வமும் பிடிவாதமும் கொண்ட ஒரு மனநிலை. மற்றபடி ஒவ்வொருவரும் தம்மை இயக்கும் சக்தியை, தம் மீது ஆதிக்கம் செலுத்தும் இறைவனை உணரத்தான் செய்கிறார்கள். இதில் விதிவிலக்கானவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. மனிதன் யாரை ஏமாற்றினாலும் அவனால்
நாத்திகர்கள் மனிதம் பேசினாலும் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்று நாம் கூறுவதற்குக் காரணம், எல்லாவித அறவிழுமியங்களையும் தகர்க்கும் அவர்களின் நாத்திக வாதம்தான். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு ஏன் நன்றியுடன் நடந்துகொள்ள வேண்டும்? ஏன் அநீதி இழைக்காமல் இருக்க வேண்டும்? கணவன் தன் மனைவிக்கோ மனைவி தன் கணவனுக்கோ
தன்மானத்திற்கும் செருக்கிற்கும் மத்தியில் சிறிய இடைவெளிதான் உள்ளது. செருக்கை தன்மானம் என எண்ணுவோரும் இருக்கிறார்கள். ஒருவனிடம் இருக்கும் ஏதேனும் ஒரு தனித்தன்மை அவனிடம் செருக்கை உருவாக்கலாம். செல்வம், அதிகாரம், அறிவு, அழகு போன்றவை. செல்வச் செருக்கு, அதிகாரச் செருக்கு எப்படி தவறான பண்புகளோ அதேபோன்று அறிவுச் செருக்கும் தவறான
நாம் செய்யக்கூடிய பாவங்களுக்கும் நமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று இஸ்லாம் கூறுகிறது. நம்முடைய பாவங்கள் நம் ஆரோக்கியத்தில் வாழ்வாதாரத்தில் குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது ஒரு மனிதன் மற்றொருவனைப் பார்த்து “உன் பாவத்தினால்தான் உனக்கு இப்படியெல்லாம் துன்பங்கள் வருகின்றன” என்று சொல்ல வேண்டிய விசயம்
ஒரு மனிதன் பாவங்களில் மூழ்கிவிட்டால் அவன் இறைவனைவிட்டும் அவனை நினைவுகூருவதைவிட்டும் தூரமாகிவிடுகிறான். பாவத்தில் மூழ்கியவாறே அவனால் இறைவணக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபட முடியாது. பாவத்தில் இன்பம் காண்பவரால் இறைவணக்கத்தில் இன்பம் காண முடியாது. ஒரு கட்டத்தில் இறைவணக்கம் அவனுக்கு கடினமான ஒன்றாகிவிடும். அதுவரை கட்டாயத்தின் அடிப்படையில் செய்து கொண்டிருந்தவன் கொஞ்சம்
திருக்குர்ஆன் நயவஞ்சகர்களைக் குறித்து அதிகம் பேசியிருக்கிறது. அவர்களின் அடையாளங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது. சிரமங்களை அவர்கள் எதிர்கொள்ளும்முறை, சமூகத்தின் உறுதியைக் குலைப்பதற்காக அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் முன்வைக்கக்கூடிய சாக்குப்போக்குகள், அவர்களின் செயல்பாடுகள், வழிபாடுகளை அவர்கள் நிறைவேற்றும் முறை இப்படி அடையாளங்களின் வழியாக அவர்கள்
நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகி விடுகிறது; நீங்களே எதிர்பார்க்காத அளவு பெரும் வளர்ச்சியை நீங்கள் பெற்று விடுகிறீர்கள்; உங்கள் மீதான தன்னம்பிக்கை கூடி விடுகிறது; உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கிடைக்காத வசதி வாய்ப்புகளெல்லாம் உங்களுக்கு இலகுவாகக் கிடைத்து விடுகிறது எனில் அது அல்லாஹ் உங்களுக்கு வழங்கும் பெரும் கொடை என்பதையும் அதன்மூலம்
கிரேக்க தத்துவமும் இல்முல்கலாமும் உருவாக்கிய வறண்ட வாதங்களை கூர்மையாக விமர்சித்து உருவானவைதாம் ரூமியின் கவிதைகள். அன்பு ததும்பும் உயிரோட்டமான அவரது வரிகள் வறண்ட கிடந்த உள்ளங்களில் பெருமழையாய் பொழிந்தன. அவற்றால் அந்த உள்ளங்கள் உயிர்பெற்று எழுந்தன. காணாமல்போன பிரியத்திற்குரிய பொருள் கிடைத்ததுபோன்று அவை மகிழ்ச்சியடைந்தன. அபுல் ஹசன் நத்வீ
“நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் உங்களுக்கு உதவி செய்வான்.” (47:7) அல்லாஹ் தேவையற்றவன். அவனுக்கு யாரும் உதவி செய்ய முடியாது. இங்கு அல்லாஹ்வுக்கு உதவி செய்தல் என்பது அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உதவி செய்வதாகும். அவனுடைய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக நீங்கள் பாடுபடுவதாகும் . அவனுடைய மார்க்கத்தை மேலோங்கச்