“அல்லாஹ்வே! கவலை, துக்கம், இயலாமை, சோம்பேறித்தனம், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மனிதர்களின் ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (புகாரீ) இதுவும் நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளில் ஒன்றுதான். இந்த பிரார்த்தனையில் கூறப்பட்டுள்ள விசயங்கள் கவனிக்கத்தக்கவை. இவை மனித வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை; மனிதனைச் செயல்பட
“அல்லாஹ்வே! பயனற்ற கல்வி, உன்னை அஞ்சாத உள்ளம், நிறைவடையாத மனம், ஏற்றுக்கொள்ளப்படாத பிரார்த்தனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (முஸ்லிம்) இதுவும் நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகளில் ஒன்று. இதில் சொல்லப்பட்டுள்ள நான்கு விசயங்களும் நம் வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துபவை. கல்வியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று
“அல்லாஹ்வே! உன் அருட்கொடைகள் அழிவதிலிருந்தும் நீ அளித்த ஆரோக்கியம் மாறுவதிலிருந்தும் திடீரென உன் தண்டனை வருவதிலிருந்தும் உன் கோபங்கள் அனைத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (முஸ்லிம்) இது நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளில் ஒன்று. அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகள் நம்மிடமிருந்து பறிக்கப்படுவது, நம்முடைய ஆரோக்கியம் மாறி நாம்
பிரார்த்தனை செய்யுங்கள். அதுவும் இறைவணக்கத்தின் ஒரு வடிவம்தான் என்கிறது இஸ்லாம். நாம் செய்யும் பிரார்த்தனை நம்முள் அசாதரண மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. பிரார்த்தனையின்மூலம் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் விடுபடுகிறோம். இறைவனிடம் நம்பிக்கையுடன் நாம் செய்யும் பிரார்த்தனைகள் மனதின் அழுத்தங்களிலிருந்து நம்மை விடுவிக்கின்றன. மனதின் அழுத்தங்களிலிருந்து
நாட்கள் நகர்கின்றன, மிக வேகமாக. எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணும்போது மனதில் வெறுமையே மிஞ்சுகிறது. கடந்த காலம் வெகு தொலைவில் இருப்பதாகத் தெரியவில்லை. மனதிற்கு ஓரளவு ஆறுதலையும் நிறைவையும் தருவது நாம் செய்த நற்செயல்களே. வாழ்வென்னும் பெரும் நதி நம்மை எந்த இடத்தில் விட்டுவிட்டுச் செல்லப்
நமக்கு வரக்கூடிய சில கனவுகள் ஆச்சரியமளிக்கக்கூடியவை. அவை நம் ஆன்மாவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் ஒரு செய்தியை, நிகழப்போகும் ஒரு சம்பவத்தை உணர்த்திவிட்டுச் செல்கின்றன. சில சமயங்களில் நாம் தடுமாறிக்கொண்டிருக்கும் திணறிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு அற்புதமான தீர்வும் கனவின் மூலமாக கிடைத்துவிடுகிறது. இறைநம்பிக்கையற்றவர்களை கடுமையான குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் ஆழ்த்தும்
பல விசயங்களுக்குத் தடையாக இருப்பது நினைவலைகள்தாம். ஒரு வீடு மாற வேண்டும் என்றாலும் ஒரு ஊரைவிட்டுச் செல்ல வேண்டும் என்றாலும் ஒருவரைவிட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்றாலும் முதலில் தடையாக வருவது நினைவலைகளே. அவை மனித மனதில் தாக்கம் செலுத்தும் வலுவானவை. இந்த நினைவலைகளை மீறி வெளியேறிச் செல்பவர்கள்
மனிதனின் விசித்திரமான ஒரு பண்பு, அவன் சக மனிதனுக்கு உதவவும் செய்வான்; அவன்மீது பொறாமை கொண்டு அவனுக்குத் தீங்களிக்கவும் முற்படுவான். அதிலும் அவன் தன்னை அண்மித்து இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீதுதான் அதிகம் பொறாமை கொள்வான். உறவும் நெருக்கமும் நட்பு பாராட்டக் காரணமாக இருப்பதுபோல பொறாமை கொள்ளவும்
மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் ரயிலில் அடிபட்டு தற்கொலை செய்து கொள்கிறாள் என்ற பத்திரிகைச் செய்தி டால்ஸ்டாயின் மனதை உலுக்கிவிடுகிறது. இந்தச் சம்பவம்தான் அன்னா கரீனினா என்ற உலகப் புகழ்பெற்ற நாவலுக்கான விதையாக அமைந்தது. அன்றாடம் பார்க்கின்ற சாதாரண ஒரு பத்திரிகைச் செய்தி அவரது அகத்தை உலுக்கியதனால்
போலியான, சடங்குத்தனமான மரியாதை மரியாதையே அல்ல. உண்மையில் அது ஒரு அவமதிப்பு, நடிப்பு, நயவஞ்சகத்தனம். இருந்தும் அதனை விரும்பக்கூடியவர்கள் அதிக அளவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய போலியான ஒரு மரியாதையைப் பெற தங்களின் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். இன்னும் பலர் அதனை அடைவதையே வாழ்வின் இலக்காகக் கொண்டு செயல்பட்டுக்