முகப்பு

தடை செய்யப்பட்ட விவாதம் எது?

ஒரு மனிதனுடன் தனியாக விவாதிப்பது வேறு. ஒரு சபையில் மக்களுக்கு முன்னிலையில் அவனுடன் விவாதிப்பது வேறு. ஒரு மனிதனுக்கு தனியாக அறிவுரை கூறுவது வேறு. மற்ற மனிதர்களுக்கு முன்னால் அவனுக்கு அறிவுரை கூறுவது வேறு. தனியாக விவாதிக்கும்போது அவனுக்கு பெரிய அளவில் நிர்ப்பந்தம் இருப்பதில்லை. அவனுடைய ஈகோ கூர்மையாகவும்

வஹியும் அறிவும்

வஹியும் அறிவும் ஒன்றுடன் ஒன்று முரண்படக்கூடியதல்ல. ஒன்று மற்றொன்றை வலுப்படுத்தக்கூடியது. இரண்டையும் ஒன்றுக்கொன்று முரணானவையாக நிறுத்துவது மடமைத்தனம். மனித உள்ளத்தில் சரியை சரியென, தவறை தவறென உணர்ந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறது. அந்தப் பக்குவம் பாவக்கறைகளினால், பிறழ்வுகளினால் மாசடையலாம். அதனால் நீங்கள் பிறழ்வுகளை சரியானவை என்றும் சரியானவற்றை பிறழ்வுகள்

தீய ஆலிம்கள்

இந்த சமூகத்திற்கு பெரும் ஆபத்தாக அமைபவர்கள் தீய ஆலிம்கள்தாம் என்கிறார் இமாம் கஸ்ஸாலி. இன்னும் ஒரு படி மேலாகச் சென்று அவர்களை இந்த சமூகத்தின் நயவஞ்சகர்கள் என்கிறார். இந்த மார்க்கத்தைக் கொண்டு ஏதேனும் உலக ஆதாயத்தைப் பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கும். அதற்காக அவர்கள்

ததப்புர் என்னும் செயல்பாடு – 2

அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் மத்தியில் இணைப்புப் பாலமாக இருப்பது திருக்குர்ஆன்தான். அதன் வழியாகவே அல்லாஹ் தன் அடியார்களுடன் உரையாடுகிறான். அவன் நேரடியாக அவர்களுடன் உரையாடுவதில்லை. மனிதர்கள் தங்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை திருக்குர்ஆனிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். நாம் தேடுவதை திருக்குர்ஆனில் பெற்றுக் கொள்ள முடியும்.   திருக்குர்ஆனின் வசனங்களை வாசிப்பது

அர்த்தமின்மை

இமாம் இப்னு கைய்யும் கூறுவது போன்று, மனித மனதில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை இறை நினைவைக் கொண்டு மட்டுமே நிரப்ப முடியும். வேறு எதனைக் கொண்டும் அதனை நிரப்ப முடியாது. இறைவனை அறிந்துகொள்ளாத, இறைவனுக்குக் கட்டுப்படாத உள்ளம் காரிருளில் வழிதெரியாமல் தடுமாறித் திரியும். அது காணும்

ததப்புர் என்னும் செயல்பாடு -1

كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِه وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ “அருள்வளமிக்க இந்த வேதத்தை உமக்கு நாம் அருளியுள்ளோம், அவர்கள் இதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துவதற்காகவும் அறிவுடையோர் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்.” (38:29 ) இந்த வசனம் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.

முரண்பாடுகள் அற்ற வேதம்

أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا “அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா? அது அல்லாஹ் அல்லாத வேறு யாரிடமிருந்தாவது வந்திருந்தால் அதில் அவர்கள் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.”  (4:82) முரண்படுதல் மனித இயல்பு. மனிதர்கள்

குர்ஆனை எப்படி அணுக வேண்டும்?

மற்ற புத்தகங்களை வாசிப்பதைப் போல நாம் குர்ஆனை வாசிக்கக்கூடாது. அது ஒரே நேரத்தில் முழுமையாக வாசித்து முடிக்க வேண்டிய ஒரு புத்தகம் அல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கப்பட வேண்டும். அது தாகத்திற்கேற்ப மிடறு மிடறாக அருந்தப்பட வேண்டும். அது அதற்கே உரிய தனித்துவமான முறையில் அணுகப்பட வேண்டும்.

பக்குவம்

சட்டென மனதின் திரை அகன்று விட்டால் மனதில் உள்ள அனைத்தும் அப்படியே கொட்டத் தொடங்கி விட்டால் என்னாவாகும்? யாரும் யாருடனும் நட்பிலும் உறவிலும் இருக்க முடியாது. மனிதர்கள் இணைந்திருக்க முடியாது. மனித அகத்தில் கொந்தளிக்கும் உணர்வுகள் அப்படியே வெளிப்படத் தொடங்கி விடும். மனதின் ஒவ்வொன்றையும் வடிகட்டி அவசியமானதை மட்டும்

உதிரிகள்

ஒரு சமூகத்தில் உதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது அந்தச் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. உதிரிகள் என்பவர்கள் கூட்டு வாழ்க்கையைவிட்டு ஒதுங்கி வாழ்பவர்கள்; சமூகத்தின் எந்த விதியையும் மதிக்காதவர்கள்; மீறலை விரும்பக்கூடியவர்கள்; அது தங்களின் உரிமை என்று கருதக்கூடியவர்கள்; தங்களின் மன விருப்பங்களின் அடிப்படையில் வாழக்கூடியவர்கள். இந்த உதிரிகளிடம் தனித்து