மிக இலகுவாக

You are currently viewing மிக இலகுவாக

எந்தவொரு பெரும் செயலும் மிக இலகுவாக நிகழ்ந்து விடுகிறது. ஆனால் அது நிகழ்ந்த பிறகுதான் அது இலகுவாக நிகழ்ந்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அது நிகழ்வதற்கு முன்னர்வரை அது கடினமான அல்லது நிகழ்வதற்கு சாத்தியமற்ற ஒன்றாகத்தான் நமக்குத் தெரிந்து கொண்டிருக்கும். ஒவ்வொரும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.

யாரிடமிருந்து எந்தச் செயல் வெளிப்படும் என்று யாரும் உறுதியாகக் கூற முடியாது. நம்முடைய கணிப்புகள் சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். சட்டென மனதில் ஏற்படும் ஒரு சிந்தனை ஒருவரின் பாதையை மாற்றி விடலாம். திடீரென ஒருவருக்கு வரக்கூடிய பிரச்சனை அவர் இதுவரை சென்று கொண்டிருந்த பாதையிலிருந்து அவரை வேறு பக்கம் திருப்பி விடலாம். யாரோ ஒருவரின் ஊக்கமூட்டல் அல்லது அறிவுரை உங்களின் நோக்கத்தையே மாற்றி விடலாம். எந்தச் சமயத்தில் எந்த மாற்றம் நிகழும் என்பதை நாம் அறிய மாட்டோம். இங்கு இறைவன் ஏற்படுத்திய நியதிகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஒவ்வொரு நிகழ்வும் புரிந்து கொள்ளத்தக்கவையே. அறிவைக் கொண்டு புரிந்து கொள்ள முடியாததை பின்னர் அனுபவத்தைக் கொண்டு புரிந்து கொள்வோம்.

ஒவ்வொன்றும் நிகழ வேண்டிய சமயத்தில் சரியாக நிகழ்ந்து விடுகிறது. இணைய வேண்டியவர்கள் இணைகிறார்கள். பிரிய வேண்டியவர்கள் பிரிகிறார்கள். நிகழ வேண்டியவை நிகழ்ந்து விடுகின்றன. எதிர்பார்ப்புகள் எதிர்பாராமைகளால் சமன் செய்யப்பட்டு விடுகின்றன. உலகியல்வாதிகள் ஏமாற்றப்படுவார்கள். நம்பிக்கையாளர்கள் வெற்றியடைவார்கள்

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply