வைராக்கியம்

அவமானப்படுத்தப்பட்ட மனிதர்களிடம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டுவிடுகிறது. தங்களை அவமானப்படுத்தியவர்களுக்கு முன்னால், தங்களைப் பொருட்படுத்தாதவர்களுக்கு முன்னால் தாங்கள் வாழ்ந்து காட்டியே தீர வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். அப்படி வாழ்ந்து காட்டுவதையே தங்கள் வாழ்வின் இலட்சியமாக அவர்கள்…

என் வாசிப்பு

வாசிக்கும் பழக்கம் எனக்கு இயல்பாகவே இருக்கிறது. இந்த பழக்கம் எப்படி என்னிடம் தொற்றிக் கொண்டது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த பேப்பரைக் கண்டாலும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதில் மிக அதிகமாக இருந்தது என்பது மட்டும் இப்போது நினைவுக்கு…

நட்பை தக்க வைப்பது

மனதிற்குத் தெளிவாகத் தெரியும், நட்பு கொள்வதற்காக, உறவைப் பலப்படுத்துவற்காக, நட்பையும் உறவையும் தக்கவைத்துக் கொள்வதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது. நாம் ஒருவருடன் நட்பை, உறவை விரும்புகிறோம் எனில் நாம் ஒருவருடைய நட்பை, உறவை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறோம் எனில் அதற்கு…

மகிழ்ச்சியளித்து மகிழ்தல்

மகிழ்ச்சியளித்து மகிழ்தல் என்பது உன்னதமான ஆன்மிக அனுபவங்களுள் ஒன்று. இறைவன் இந்த உலகில் அமைத்த நியதிகளுள் இதுவும் அடங்கும். தேவையுடையவர்களுக்கு, சிரமப்படுபவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி இருக்கிறது. இங்கு மனிதர்கள் யாருடைய உதவியும் இன்றி தனித்து வாழ முடியாது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் சார்ந்து…

மனம் காயமடைவது

உடல் காயமடைவது போன்று மனமும் காயமடைகிறது. உடலில் ஏற்படும் காயம் வெளியில் தெரியக்கூடியதாக இருப்பதால் அதனை எளிதாக நாம் புரிந்து கொள்கின்றோம். காயமுற்றவர்களை நாம் பரிவோடு நடத்துகின்றோம். அவர்களை மற்ற மனிதர்களைப் போன்று கருதுவதில்லை. ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை நாம் அவ்வாறு…

தடை செய்யப்பட்ட விவாதம் எது?

ஒரு மனிதனுடன் தனியாக விவாதிப்பது வேறு. ஒரு சபையில் மக்களுக்கு முன்னிலையில் அவனுடன் விவாதிப்பது வேறு. ஒரு மனிதனுக்கு தனியாக அறிவுரை கூறுவது வேறு. மற்ற மனிதர்களுக்கு முன்னால் அவனுக்கு அறிவுரை கூறுவது வேறு. தனியாக விவாதிக்கும்போது அவனுக்கு பெரிய அளவில்…

வஹியும் அறிவும்

வஹியும் அறிவும் ஒன்றுடன் ஒன்று முரண்படக்கூடியதல்ல. ஒன்று மற்றொன்றை வலுப்படுத்தக்கூடியது. இரண்டையும் ஒன்றுக்கொன்று முரணானவையாக நிறுத்துவது மடமைத்தனம். மனித உள்ளத்தில் சரியை சரியென, தவறை தவறென உணர்ந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறது. அந்தப் பக்குவம் பாவக்கறைகளினால், பிறழ்வுகளினால் மாசடையலாம். அதனால் நீங்கள்…

தீய ஆலிம்கள்

இந்த சமூகத்திற்கு பெரும் ஆபத்தாக அமைபவர்கள் தீய ஆலிம்கள்தாம் என்கிறார் இமாம் கஸ்ஸாலி. இன்னும் ஒரு படி மேலாகச் சென்று அவர்களை இந்த சமூகத்தின் நயவஞ்சகர்கள் என்கிறார். இந்த மார்க்கத்தைக் கொண்டு ஏதேனும் உலக ஆதாயத்தைப் பெற வேண்டும் என்பதுதான் அவர்களின்…

ததப்புர் என்னும் செயல்பாடு – 2

அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் மத்தியில் இணைப்புப் பாலமாக இருப்பது திருக்குர்ஆன்தான். அதன் வழியாகவே அல்லாஹ் தன் அடியார்களுடன் உரையாடுகிறான். அவன் நேரடியாக அவர்களுடன் உரையாடுவதில்லை. மனிதர்கள் தங்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை திருக்குர்ஆனிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். நாம் தேடுவதை திருக்குர்ஆனில் பெற்றுக் கொள்ள…

அர்த்தமின்மை

இமாம் இப்னு கைய்யும் கூறுவது போன்று, மனித மனதில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை இறை நினைவைக் கொண்டு மட்டுமே நிரப்ப முடியும். வேறு எதனைக் கொண்டும் அதனை நிரப்ப முடியாது. இறைவனை அறிந்துகொள்ளாத, இறைவனுக்குக் கட்டுப்படாத உள்ளம் காரிருளில்…