முகப்பு

ததப்புர் என்னும் செயல்பாடு -1

كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِه وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ “அருள்வளமிக்க இந்த வேதத்தை உமக்கு நாம் அருளியுள்ளோம், அவர்கள் இதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துவதற்காகவும் அறிவுடையோர் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்.” (38:29 ) இந்த வசனம் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.

முரண்பாடுகள் அற்ற வேதம்

أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا “அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா? அது அல்லாஹ் அல்லாத வேறு யாரிடமிருந்தாவது வந்திருந்தால் அதில் அவர்கள் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.”  (4:82) முரண்படுதல் மனித இயல்பு. மனிதர்கள்

குர்ஆனை எப்படி அணுக வேண்டும்?

மற்ற புத்தகங்களை வாசிப்பதைப் போல நாம் குர்ஆனை வாசிக்கக்கூடாது. அது ஒரே நேரத்தில் முழுமையாக வாசித்து முடிக்க வேண்டிய ஒரு புத்தகம் அல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கப்பட வேண்டும். அது தாகத்திற்கேற்ப மிடறு மிடறாக அருந்தப்பட வேண்டும். அது அதற்கே உரிய தனித்துவமான முறையில் அணுகப்பட வேண்டும்.

பக்குவம்

சட்டென மனதின் திரை அகன்று விட்டால் மனதில் உள்ள அனைத்தும் அப்படியே கொட்டத் தொடங்கி விட்டால் என்னாவாகும்? யாரும் யாருடனும் நட்பிலும் உறவிலும் இருக்க முடியாது. மனிதர்கள் இணைந்திருக்க முடியாது. மனித அகத்தில் கொந்தளிக்கும் உணர்வுகள் அப்படியே வெளிப்படத் தொடங்கி விடும். மனதின் ஒவ்வொன்றையும் வடிகட்டி அவசியமானதை மட்டும்

உதிரிகள்

ஒரு சமூகத்தில் உதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது அந்தச் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. உதிரிகள் என்பவர்கள் கூட்டு வாழ்க்கையைவிட்டு ஒதுங்கி வாழ்பவர்கள்; சமூகத்தின் எந்த விதியையும் மதிக்காதவர்கள்; மீறலை விரும்பக்கூடியவர்கள்; அது தங்களின் உரிமை என்று கருதக்கூடியவர்கள்; தங்களின் மன விருப்பங்களின் அடிப்படையில் வாழக்கூடியவர்கள். இந்த உதிரிகளிடம் தனித்து

மனித அறிவு திகைத்து நிற்கும் பகுதி

“இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்தவொரு அறுதியான முடிவையும் நாங்கள் முன்வைப்பதில்லை. எங்களின் ஆன்மீகப் பாதையில் ஒவ்வொருவரும் அவர்களின் முயற்சிகளுக்கேற்ப வெவ்வேறான நிலைகளை அடையலாம். எங்களுக்கிடையே காணப்படும் தேடல் மட்டுமே பொதுவானது.” இது தம்மை துறவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் கூறியது. அவர் மட்டுமல்ல பலரும் அவர் கூறியதுபோன்று

காலாவதியாகுவது

அவரது பேச்சு மக்களுக்கு மத்தியில் பெரும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து அவர் பல வருடங்கள் மக்களுக்கு மத்தியில் பேசுபொருளாக இருந்தவர். அவரது மொழியும் பேசும் தொனியும் முன்வைத்த உதாரணங்களும் மக்களிடையே மிகவும் பிரபல்யமாகியிருந்தன. இனி தம்மால் முடியாதது எதுவும் இல்லை, தாம் நினைப்பதை மக்களுக்கு மத்தியில் எளிதில்

தேவையும் சார்பு வாழ்க்கையும்

“ஒரு மனிதன் எந்த அளவு மக்களிடம் தேவையற்றிருப்பானோ அந்த அளவு அவன் அவர்களிடம் கண்ணியம் வாய்ந்தவனாக இருப்பான்” என்ற நபிமொழியை நண்பர் ஒருவரிடம் கூறினேன். ஆனால் இந்த விசயத்தில் கூடுதலாக புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு அம்சமும் இருக்கிறது. முடிந்த மட்டும் பிறரிடம் உதவியை நாடாமல் இருத்தல் வேறு. அவர்களின்

ஸலஃபி தஃவா – 1

ஒரு தவ்ஹீத் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கின்ற ஒருவரிடம் கேட்டேன், “நீங்கள் ஏன் முன்னர் கூறியதுபோன்று குர்ஆன், சுன்னாவே போதும் என்ற வாதத்தை முன்வைப்பதில்லை? ஏன் இப்போது ஸலஃபி வாதத்தை முன்வைக்கிறீர்கள்?” அவர் கூறினார்: அந்த வாதம் மக்களை வெகுதூரம் அழைத்துச் செல்கிறது. ஒவ்வொருவரும் தம்முடைய தனிப்பட்ட புரிதலைக்

இக்கிகய்

நாம் நோக்கத்தை உருவாக்க வேண்டியதில்லை. நம்முடைய நோக்கம் என்னவென்று கண்டடைய வேண்டியதிருக்கிறது. இக்கிகய் என்ற புத்தகத்தில் இடம்பெறும் வாசகம்தான் இது. மிகச் சரியான கருத்து இது. இதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது. ஒரு மனிதன் தன் நோக்கம் என்னவென்று கண்டடைந்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்போது தேவையற்ற மன