இந்த சமூகத்திற்கு பெரும் ஆபத்தாக அமைபவர்கள் தீய ஆலிம்கள்தாம் என்கிறார் இமாம் கஸ்ஸாலி. இன்னும் ஒரு படி மேலாகச் சென்று அவர்களை இந்த சமூகத்தின் நயவஞ்சகர்கள் என்கிறார். இந்த மார்க்கத்தைக் கொண்டு ஏதேனும் உலக ஆதாயத்தைப் பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கும். அதற்காக அவர்கள்
அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் மத்தியில் இணைப்புப் பாலமாக இருப்பது திருக்குர்ஆன்தான். அதன் வழியாகவே அல்லாஹ் தன் அடியார்களுடன் உரையாடுகிறான். அவன் நேரடியாக அவர்களுடன் உரையாடுவதில்லை. மனிதர்கள் தங்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை திருக்குர்ஆனிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். நாம் தேடுவதை திருக்குர்ஆனில் பெற்றுக் கொள்ள முடியும். திருக்குர்ஆனின் வசனங்களை வாசிப்பது
இமாம் இப்னு கைய்யும் கூறுவது போன்று, மனித மனதில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை இறை நினைவைக் கொண்டு மட்டுமே நிரப்ப முடியும். வேறு எதனைக் கொண்டும் அதனை நிரப்ப முடியாது. இறைவனை அறிந்துகொள்ளாத, இறைவனுக்குக் கட்டுப்படாத உள்ளம் காரிருளில் வழிதெரியாமல் தடுமாறித் திரியும். அது காணும்
كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِه وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ “அருள்வளமிக்க இந்த வேதத்தை உமக்கு நாம் அருளியுள்ளோம், அவர்கள் இதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துவதற்காகவும் அறிவுடையோர் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்.” (38:29 ) இந்த வசனம் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.
أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا “அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா? அது அல்லாஹ் அல்லாத வேறு யாரிடமிருந்தாவது வந்திருந்தால் அதில் அவர்கள் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.” (4:82) முரண்படுதல் மனித இயல்பு. மனிதர்கள்
மற்ற புத்தகங்களை வாசிப்பதைப் போல நாம் குர்ஆனை வாசிக்கக்கூடாது. அது ஒரே நேரத்தில் முழுமையாக வாசித்து முடிக்க வேண்டிய ஒரு புத்தகம் அல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கப்பட வேண்டும். அது தாகத்திற்கேற்ப மிடறு மிடறாக அருந்தப்பட வேண்டும். அது அதற்கே உரிய தனித்துவமான முறையில் அணுகப்பட வேண்டும்.
சட்டென மனதின் திரை அகன்று விட்டால் மனதில் உள்ள அனைத்தும் அப்படியே கொட்டத் தொடங்கி விட்டால் என்னாவாகும்? யாரும் யாருடனும் நட்பிலும் உறவிலும் இருக்க முடியாது. மனிதர்கள் இணைந்திருக்க முடியாது. மனித அகத்தில் கொந்தளிக்கும் உணர்வுகள் அப்படியே வெளிப்படத் தொடங்கி விடும். மனதின் ஒவ்வொன்றையும் வடிகட்டி அவசியமானதை மட்டும்
ஒரு சமூகத்தில் உதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது அந்தச் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. உதிரிகள் என்பவர்கள் கூட்டு வாழ்க்கையைவிட்டு ஒதுங்கி வாழ்பவர்கள்; சமூகத்தின் எந்த விதியையும் மதிக்காதவர்கள்; மீறலை விரும்பக்கூடியவர்கள்; அது தங்களின் உரிமை என்று கருதக்கூடியவர்கள்; தங்களின் மன விருப்பங்களின் அடிப்படையில் வாழக்கூடியவர்கள். இந்த உதிரிகளிடம் தனித்து
“இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்தவொரு அறுதியான முடிவையும் நாங்கள் முன்வைப்பதில்லை. எங்களின் ஆன்மீகப் பாதையில் ஒவ்வொருவரும் அவர்களின் முயற்சிகளுக்கேற்ப வெவ்வேறான நிலைகளை அடையலாம். எங்களுக்கிடையே காணப்படும் தேடல் மட்டுமே பொதுவானது.” இது தம்மை துறவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் கூறியது. அவர் மட்டுமல்ல பலரும் அவர் கூறியதுபோன்று
அவரது பேச்சு மக்களுக்கு மத்தியில் பெரும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து அவர் பல வருடங்கள் மக்களுக்கு மத்தியில் பேசுபொருளாக இருந்தவர். அவரது மொழியும் பேசும் தொனியும் முன்வைத்த உதாரணங்களும் மக்களிடையே மிகவும் பிரபல்யமாகியிருந்தன. இனி தம்மால் முடியாதது எதுவும் இல்லை, தாம் நினைப்பதை மக்களுக்கு மத்தியில் எளிதில்